0,00 INR

No products in the cart.

மருத்துவப் பயன்கள்!

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

அதிமதுரம்

சித்த மருத்துவம், ஆயுர்வேதம் போன்றவற்றைத் தேடி மேலை நாட்டவர்களே நம்மை நாடி வருகிறார்கள் என்கிறபொழுது, நம் இந்தியா மூலிகைகளின் சுரங்கம் என்று சொல்வது உண்மைதான். நமது நாட்டில் வளரும் உயிரைக் காக்கும் மூலிகைகளில் ஒன்றுதான் அதிமதுரம்.

இதன் பலன்கள் பல. பத்து மாதம் வரை குழந்தையை வயிற்றில் சுமக்கும் பெண்களுக்கு சுகப் பிரசவமாக குழந்தையைப் பெற்று எடுக்க, அதிமதுரம் மற்றும் தேவதாரம் ஆகிய மூலிகை பொருட்களை வகைக்கு 40 கிராம் அளவில் எடுத்து அவற்றை நன்கு பொடி செய்து, சிறிதளவு சூடான நீரில் அப்பொடிகளை நன்றாகக் கலந்து பிரசவ வலி உண்டானதிலிருந்து இரண்டு முறை மட்டும் கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.

சிலர் காலை உணவு சாப்பிடாததால் வயிறு மற்றும் குடல்களில் அல்சர் புண்கள் ஏற்பட்டு அவதிப்படுவார்கள். அதற்கு அதிமதுரப் பொடியை நீரில் போட்டு நன்கு கலக்கி இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் அரிசி கஞ்சியுடன் அந்நீரை சேர்த்துப் பருகி வந்தால் வயிறு மற்றும் குடல்களில் ஏற்படும் பிரச்னைகள் சரியாகும். அதிமதுரத்தை பொடி பதத்தில் சாப்பிடுவதுதான் நல்லது. மூட்டுவலி பிரச்னைகள், வாதம் என்பது உடலில் காற்றின் தன்மை அதிகரிப்பதால் ஏற்படுகிறது.

அதிமதுரத் தூள் கலந்த நீரை இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் பருகி வந்தால் மூட்டு வலிகள் நீங்கும். இது உடலின் வாதத்தன்மை அதிகரிப்பை கட்டுக்குள் கொண்டு வருகிறது. சிறுநீரகத் தொற்றால் புண்கள் ஏற்பட்டால் அதிமதுரம் ஊற வைக்கப்பட்ட நீரை அவ்வப்போது அருந்தி வந்தால் சிறுநீர்ப்பையில் ஏற்படும் கிருமிகள் அழிந்து, புண்கள் ஆறும். சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதையும் தடுக்கும் என்று சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன.
– எஸ்.மாரிமுத்து, சென்னை

வாழை இலை

தீ விபத்திலிருந்து மீண்டவர்களையும், தீ காயங்கள் ஏற்பட்டவர்களையும் வாழை இலையின் மீது படுக்க வைத்தால், அதில் உள்ள பச்சைத் தன்மை, தீக்காயத்தின் எரிச்சலைப் போக்கும்.

வாழை இலையின் மேற்புறத்தை புண்ணின் மீது வைத்தும், இலையின் அடிபுறம் புண் மீது படுமாறும் இரண்டு நாட்கள் கட்ட, புண்கள் விரைவில் ஆறிவிடும்.
– எஸ்.சித்ரா, சென்னை

ஆளி விதை

ஞ்சள் மற்றும் காவி நிறம் என இருவகை ஆளி விதைகள் உள்ளன. இவை இரண்டும் ஒத்த ஊட்டச்சத்து உள்ளவை. ஓமேகா – 3, கொழுப்பு அமிலங்கள் கொண்டது. இதில் அதிகப்படியான நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கலைப் போக்கும். அதிகளவில் உட்கொண்டால் வயிறு மற்றும் குடல் பகுதிகள் நல்லவிதமாக இருக்கும்.

உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து இல்லாதபோது அதிகமாக உட்கொள்ளும்போது குடல் அடைப்பு ஏற்பட நேரிடும். ஆளி விதையின் எண்ணெய் தோல் பிரச்னையைப் போக்கும். இதை இரவில் ஊற வைத்து, காலையில் சுண்டலாக சாப்பிடலாம். இதயத்திற்கு நல்லது. மூளையின் சக்தி அதிகரிக்கும். புற்றுநோய் வராமல் தடுக்கும்.

100 கிராம் ஆளி விதை, 530 கலோரி சக்தி, 37 கிராம் நல்ல கொழுப்பு, 28 கிராம் நார்ச்சத்து, 20 கிராம் புரதம் தருகிறது. ஆளி விதையில் லிக்னன்ஸ் நார்ச்சத்து, ஓமேகா – 3 என்ற கொழுப்பு அமிலம் ரத்தக் குழாய்களைச் சுத்தம் செய்கிறது. கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றுகிறது. மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் இதில் நார்ச்சத்து உள்ளதால் பெருங்குடலில் உள்ள அனைத்தையும் இளக்கி வெளியேற்றிவிடும். இதுபோல் சிறுநீரகங்களில் கற்கள் உருவாகாமல் ஆளி விதை பாதுகாக்கிறது. மார்பகப் புற்றுநோய் புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆகியவற்றை எதிர்த்து செயல்படும் திறன், ஆளி விதைக்கு உள்ளதை அண்மையில் செய்யப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
– எம்.வசந்தா, சென்னை

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

கவிதைத் தூறல்!

0
-பி.சி. ரகு, விழுப்புரம்   விலைவாசி! எவரெஸ்ட் சிகரத்தை விட எல்.ஐ.சி., பில்டிங்கை விட அரசியல்வாதிகளின் கட்-அவுட்களை விட உயர்ந்து நிற்கிறது விலைவாசி! **************************************** முதிர்கன்னியின் வேண்டுகோள்! தென்றலே என் மீது வீசாதே! தேதிகளே என் வயதை நினைவுபடுத்தாதே! பூக்களே எனக்கு மட்டும் வாசம் தராதீர்கள் புதுமணத் தம்பதிகளே என் கண்ணுக்குள் சிக்காதீர்கள்... குறைந்த விலையில் எனக்கொரு மாப்பிள்ளை கிடைக்கும் வரை. **************************************** பாவம்! வீடு கட்ட மரம்...

பலவித பச்சடி ; பலரகப் பொடி!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! ரெசிபிஸ்!   முருங்கைப் பூ பச்சடி தேவை: முருங்கைப் பூ – 2 கப், துவரம் பருப்பு – 100 கிராம், தேங்காய் – 1, காய்ந்த மிளகாய் – 4, உளுந்தம் பருப்பு –...

ஐகோர்ட்டில் முதல் முறையாக பெண் தபேதார் நியமனம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! சென்னை ஐகோர்ட் வரலாற்றில் முதல்முறையாக பெண் தபேதார் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதிகள் தங்கள் அறையில் இருந்து கோர்ட் அறைக்கு வரும்போது அவர்களுக்கு முன் தபேதார் என்பவர் கையில் செங்கோலுடன் வருவது காலம் காலமாக...

மலர் மருத்துவம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! மங்கையர் மலர்  வாசகீஸ் FB பகிர்வு!  மல்லிகைப் பூக்களை இரவில் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து காலையில் அந்த நீரால் முகம் கழுவினால் முகம் எந்த மாசும் இ‌ல்லாம‌ல் முகம் பொலிவு பெறும். எருக்கன்...

ஜோக்ஸ்!

0
 -வி. ரேவதி, தஞ்சை படங்கள்; பிள்ளை   "மொய் வசூல் முடிந்த கையோடு தலைவரை பேசச் சொல்லிட்டாங்க...! "    " கூட்டத்தை விரட்டி அடிக்க அருமையான ஏற்பாடா இருக்கே!   *******************************           ...