0,00 INR

No products in the cart.

சிறுநீரில் கல்!

வாசகர் ஜமாய்க்கிறாங்க

சித்ரா சிவகுமார்

பொதுவாக, மேல் வயிற்றில் ஏற்படும் வலியை, பலரும் வாயு கோளாறு என்று வெகு சுலபமாகப் புறக்கணித்து விடுகின்றனர். மேலும், வாயு கோளாறை நிவர்த்தி செய்வதற்காக மாத்திரைகளை உட்கொண்டும், விருந்துகளின்போது நண்பர்களிடம் நமக்கு, காஸ் ட்ரபிள்’ உள்ளதாக பெருமையாக வேறு கூறுவார்கள். ஆனால், வயிற்று வலி தொடர்ந்து இருக்கும் பட்சத்தில் அதனைத் தீர பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். அல்சர், பித்தப் பையில் கற்கள் ஆகிய நோய்களுக்கு தீராத வயிற்று வலி ஒரு முக்கியமான அறிகுறி ஆகும். மேலும், பித்தப்பை நோய்கள் ஓரளவு வசதியுள்ள, பருமனான, நாற்பது வயதான பெண்களையே அதிகபட்சமாகத் தாக்குகின்றது.

பித்தப்பை எனப்படும், கால் ப்ளாடர்’ நம் உடலில் உள்ள கல்லீரலின் கீழே வலது பக்கத்தில் அமைந்துள்ளது. ஒரு நாளில் சுமார் 500 முதல் 700 மி.லி. பித்தம் எனப்படும், பைல்’ ஆனது கல்லீரலில் சுரக்கின்றது. Bile சேமிப்பது கால் ப்ளாடரின் முக்கியப் பணியாகும். நாம் உணவு உட்கொண்ட அரை மணி நேரத்திற்குப் பிறகு கால் பிளாடரானது, பைலை’ஐ சிறுகுடலில் செலுத்தி விடுகின்றது. உணவை ஜீரணிக்க வைப்பதிலும் வைட்டமின் சத்துகளை ஈர்த்துக் கொள்வதிலும் பெரும்பங்கு வகிக்கின்றது. ‘பைல்டக்ட்’ எனப்படும் குழாய் கால் ப்ளாடரை சிறுகுடலுடன் இணைக்கிறது.

இவ்வுறுப்புகளைத் தாக்கும் நோய்களில் முக்கியமானது, கால் ப்ளாடரில் கற்கள் (Stones in Gall Bladder).

கால் ப்ளாடரில் கற்கள் :
பைலில்’ உள்ள கொலஸ்ட்ரால், கால்ஷியம் பைல், பிக்மெண்ட் ஆகிய மூன்றும் சேர்ந்து உருவாவதே பித்தப்பை கற்கள் ஆகும். பொதுவாக, பாக்டீரியாவின் காரணமாகவோ அல்லது பித்த தேக்கத்தின் காரணமாகவோ கால் ப்ளாடரில் கற்கள் உருவாகி விடுகின்றன. கால் ப்ளாடரில் கற்கள் தோன்றுவதால் பல கோளாறுகள் ஏற்படுகின்றன. ‘அப்பென்டிக்ஸ்’ஐ போல, கற்கள் உள்ள கால் ப்ளாடர் சிலருக்கு வீங்கி விடுகின்றது. இதனை, அக்யூட் கோலிஸிஸ் டைடிஸ்’ எனக் கூறுகிறார்கள்.

நோயின் அறிகுறிகள் :
இந்நோய் மேலை நாடுகளிலும், வட இந்தியாவிலும் அதிகமாகக் காணப்படுகிறது. இந்நோய் பொதுவாக 30லிருந்து 50 வயதுக்குட்பட்டவர்களையே அதிகபட்சமாகத் தாக்குகின்றது. இந்நோயாளிக்கு உணவு உட்கொண்டபின் மேல் வயிற்றின் வலது பகுதியில் கடுமையான வலி உண்டாகும். வலி மிகக் கடுமையாக இருப்பதினால் இதை மாரடைப்பு என்று கூட பலர் எண்ணி விடுவார்கள். இந்நோயை அறுவை சிகிச்சையினால் மட்டுமே குணப்படுத்த இயலும். இத்தருவாயில் அறுவை சிகிச்சை செய்யத் தவறினால், கால் ப்ளாடர் வெடித்து வயிறு முழுவதிலும் சீழ் பரவி விடும். இதனை, பெரிடோனைடிஸ்’ என்று கூறுகிறார்கள்.

சிலருக்கு கால் ப்ளாடரில் கற்களினால் ஏற்படும் வலியானது பிரசவ வலியை விட அதிக வேதனை அளிக்கும். தரையில் புரண்டு உருள வேண்டும் போல கடுமையான வலி உண்டாகும். ஆனால், சிலருக்கு இக்கடுமையான வலி தோன்றாமலும் இருக்கலாம். கொழுப்புச் சத்து மிகுந்த உணவு உட்கொண்டால் வலி உடனே தோன்றும்.

ஆங்கிலத்தில் Forty, Fatty, Fertile, Female எனக் கூறுவார்கள். அதைப்போல நாற்பது வயதுள்ள பருமனான வசதி படைத்த பெண்களுக்கு அடிக்கடி வயிற்று வலி தோன்றுமாயின் அதைப் புறக்கணிக்காமல் ஒரு மருத்துவரை உடனே அணுகுதல் அவசியம்.

கால் ப்ளாடர் கற்களைப் பரிசோதித்தல் :
இந்த நோய்க்குப் பல பரிசோதனைகள் செய்கிறார்கள். ஒரு சாதாரண எக்ஸ்ரே மூலம், பத்து அல்லது பதினைந்து சதவீதம் பேர்களுக்குத்தான் கற்கள் தெரியவரும். ஆகையால், எக்ஸ்ரே மூலம் தெரியவில்லை என்றால் கற்களே இல்லை என்று எண்ணி விடக்கூடாது. சில மாத்திரைகளை உட்கொள்ளுவதன் மூலம் கால் ப்ளாடர் சரிவர பணி செய்கின்றதா என அறியலாம். இம்முறையை, .ஸி.ஜி. டெஸ்ட்’ என்று கூறுவார்கள். ஆனால், இன்றோ Sound Scan மூலம் கால் ப்ளாடரில் கற்கள் உள்ளதை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

சிகிச்சை முறை :
கால் ப்ளாடரில் கற்கள் உள்ளன என உறுதியாகத் தெரிந்தபின் அறுவை சிகிச்சையை உடனடியாக நாட வேண்டும். மருந்து, மாத்திரைகள் உட்கொள்ளுவதினால் இக்கற்கள் கரைய வாய்ப்பில்லை. ஆபரேஷன் மூலம் பைல்டக்ட்ஐயும் கால் ப்ளாடரின் இணைப்பைத் துண்டித்து கால் ப்ளாடரை அப்புறப்படுத்தி விடுகிறார்கள். இந்த ஆபரேஷன் சுமார் 45 நிமிடங்கள் வரை நீடிக்கும்.

ஆபரேஷன் முடிந்த இரண்டு நாட்களுக்கு,ரைல்ஸ் ட்யூப்’ செலுத்தப்படும். மேலும் நரம்புகளினூடே உடலின் சக்திக்காக, ட்ரிப்ஸ்’ கொடுக்கப்படும். இரண்டு நாட்களுக்குப் பிறகே வாய் மூலம் திரவ உணவு உட்கொள்ள கொடுக்கப்படும். ஆபரேஷன் முடிந்த எட்டாவது நாள் தையல் பிரிக்கப்படும். பொதுவாக, இந்த ஆபரேஷன் காரணமாக எந்தவிதமான பின்விளைவுகளும் ஏற்படுவதில்லை.

(இக்கட்டுரை மங்கையர் மலர் நவம்பர் – 1984 இதழில் வெளியானது)

கடந்த முப்பது வருடங்களுக்கும் மேற்பட்ட காலத்தில் மருத்துவத் துறையானது பிரம்மாண்ட வளர்ச்சி அடைந்துள்ளது. பித்தப்பை சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்டுள்ள மருத்துவ ஆராய்ச்சி, மருத்துவத் தொழில் நுட்ப வளர்ச்சி, நுண் சிகிச்சை முறைகள், மருத்துவ சாதனைகள் குறித்து அடுத்த இதழில்

1 COMMENT

  1. சிறுநீரில் கல் என்ற தலைப்பில் வந்த கட்டுரை யைப் படித்தேன்.பித்தப்பைகல் மற்றும் அது சம்பந்தமான விபரங்களை தெரிந்து கொண்டோம். தலைப்பிற்கும்,கட்டுரை க்கும் தொடர்பு இல்லாதது போல் இருந்தது.

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

கவிதைத் தூறல்!

2
-பி.சி. ரகு, விழுப்புரம்   விலைவாசி! எவரெஸ்ட் சிகரத்தை விட எல்.ஐ.சி., பில்டிங்கை விட அரசியல்வாதிகளின் கட்-அவுட்களை விட உயர்ந்து நிற்கிறது விலைவாசி! **************************************** முதிர்கன்னியின் வேண்டுகோள்! தென்றலே என் மீது வீசாதே! தேதிகளே என் வயதை நினைவுபடுத்தாதே! பூக்களே எனக்கு மட்டும் வாசம் தராதீர்கள் புதுமணத் தம்பதிகளே என் கண்ணுக்குள் சிக்காதீர்கள்... குறைந்த விலையில் எனக்கொரு மாப்பிள்ளை கிடைக்கும் வரை. **************************************** பாவம்! வீடு கட்ட மரம்...

பலவித பச்சடி ; பலரகப் பொடி!

1
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! ரெசிபிஸ்!   முருங்கைப் பூ பச்சடி தேவை: முருங்கைப் பூ – 2 கப், துவரம் பருப்பு – 100 கிராம், தேங்காய் – 1, காய்ந்த மிளகாய் – 4, உளுந்தம் பருப்பு –...

ஐகோர்ட்டில் முதல் முறையாக பெண் தபேதார் நியமனம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! சென்னை ஐகோர்ட் வரலாற்றில் முதல்முறையாக பெண் தபேதார் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதிகள் தங்கள் அறையில் இருந்து கோர்ட் அறைக்கு வரும்போது அவர்களுக்கு முன் தபேதார் என்பவர் கையில் செங்கோலுடன் வருவது காலம் காலமாக...

மலர் மருத்துவம்!

1
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! மங்கையர் மலர்  வாசகீஸ் FB பகிர்வு!  மல்லிகைப் பூக்களை இரவில் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து காலையில் அந்த நீரால் முகம் கழுவினால் முகம் எந்த மாசும் இ‌ல்லாம‌ல் முகம் பொலிவு பெறும். எருக்கன்...

ஜோக்ஸ்!

0
 -வி. ரேவதி, தஞ்சை படங்கள்; பிள்ளை   "மொய் வசூல் முடிந்த கையோடு தலைவரை பேசச் சொல்லிட்டாங்க...! "    " கூட்டத்தை விரட்டி அடிக்க அருமையான ஏற்பாடா இருக்கே!   *******************************           ...