0,00 INR

No products in the cart.

சொல்ல விரும்புகிறோம்!

இணையதளத்தில் நேரடியாகப் பதிவான ‘comments’

னுஜாவின் பட்சணத் தயாரிப்பு வேலைகளைப் படித்ததும் நினைவு பின்னோக்கிச் சென்று விட்டது. மறக்க முடியாத, சந்தோஷ அனுபவங்களை மனம் அசைபோட ஆரம்பித்து விட்டது. இனி, அதுபோன்று செய்ய முடியுமா என்ற ஏக்கத்தைத் தந்து விட்டது.
மகாலட்சுமி சுப்பிரமணியன், காரைக்கால்

மிருணாளினியின், ‘டமால் டுமீல்பேட்டி தீபாவளிக்கு முத்தாய்ப்பாக, தேனாக இனித்தது. அதுவும் கண்கவர் புகைப்படங்கள், எழில் ஓவியங்களாக மனதில் மிதந்து போயின. இன்டர்நெட், ‘ஜெட்வேகத்தில் சீறிப் பாய்வதால் நட்பு வட்டங்கள் வானளாவ வேகத்தில் பெருகி வரும் இக்காலத்தில், அப்பா இல்லாத ரெஸ்பின் கடிதம் மூலம் நட்புகளை ஏற்படுத்தி, தன் இதய வேதனைகளை இனிமையாக்குபவள் என்று ஜி.எஸ்.எஸ். கட்டுரையைப் படித்து மனம் குதூகலம் அடைந்தது.
து.சேரன், ஆலங்குளம்

Excellent article on skin care. Useful tips. Well presented by Vasundara and neatly compiled by Mangai Jaikumar. The audio insert was interesting.
– Padmini Pattabiraman

—————-

தேசங்கள் கொண்டாடும் பலவிதமான தீபாவளி குறித்து அறிந்து கொண்டோம். மங்கையர் மலருக்கு நன்றி!
சௌமியா சுப்ரமணியன், பழைய பல்லாவரம்

த்தாப்பு மகிழ்ச்சியில் மிருணாளினி! நடிகை மிருணாளினி ரவியின் பேட்டியைப் படித்தேன். டமால் டுமீல் கேள்வி பதிலை ரசித்தேன். அவரது முகம் மத்தாப்பு போல் மின்னுகிறது; பேச்சு ஊசிப் பட்டாசு போல் வெடிக்கிறது; சமையல் பிரியாணி போல் மணக்கிறது; நடிப்பால் புகழ் ராக்கெட் போல் பறக்கிறது.
எஸ்.கெஜலட்சுமி, லால்குடி

ரபரக்கும் பட்டாசு நகரம்! கட்டுரையும், படங்களும் பார்த்து வியந்துபோனேன். சிவகாசி மாநகரத்தைப் பற்றியும், அங்கே நடைபெறும் பட்டாசு வியாபாரத்தைப் பற்றியும் சிறப்பானதொரு கட்டுரையைப் படிப்பவர் மனதில் எளிதில் பற்றிக்கொள்ளும் விதத்தில் வெளியிட்ட மங்கையர் மலரை மனதாரப் பாராட்டுகிறேன்.
ஆர்.வித்யா, பள்ளிக்கரணை

தீபாவளி சிறப்பிதழில் வந்த, அனுபவம் புதுமைபெருமைகொடுமை என்ற வார்த்தைகளின் அனுபவங்கள் படிக்கும்போது சிரிப்பாக இருந்தாலும், ரசிக்க வைத்தது. சமையலறையில் இருக்கும் எல்லாப் பெண்களுக்கும் இதுபோன்ற புதுமையான அனுபவங்கள் வருவதும் உண்டு. அதை மிக அழகாகச் சொல்லி தீபாவளியை சிறப்பித்த மங்கையர் மலருக்குப் பாராட்டுக்கள்.
நந்தினி கிருஷ்ணன், மதுரை

சிரியரின், ஒரு வார்த்தைபடித்ததும், சின்ன வயதில் பாட்டியிடம் கதை கேட்டது நினைவுக்கு வருகிறது. உண்மைதான். தன் கையே தனக்கு உதவி என்று வாழ்பவர்கள் மட்டுமே வெற்றியை எட்டிப்பிடிக்க முடியும். ‘என்று விடியும் என்று விண்ணை நம்புமுடியுமென்று உன்னை நம்புஎன்று எங்களை தீபாவளி நேரத்தில் வாழ்த்திய அனுஷாவுக்கு வாழ்த்துக்கள். அருமையான ஒரு வார்த்தை. படித்தவுடனேயே மனதில் நின்றது.
லக்ஷ்மி ஹேமமாலினி, சென்னை

புதிதாகத் தொடங்கப்பட்ட, ‘அழகோ அழகுபகுதியைப் படித்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. பெண்கள் என்றாலே எத்தனை வயதானாலும் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தன்னைப் பராமரித்துக் கொள்வார்கள். அவர்களுக்கு அழகுக்கலை நிபுணர் வசுந்தரா அவர்களின் டிப்ஸ்களும், அவருடைய குரலில் ஒலித்த டிப்ஸும் மிகவும் அருமை. கேட்பதற்கு எளிதாகவும், கடைபிடிக்க எளிதாகவும் இருக்கும் இந்த பராமரிப்புகளை நாம் சரியாகச் செய்தால் நிச்சயம் எத்தனை வயதானாலும் அழகாக மிளிரலாம் என்ற நம்பிக்கை கொடுத்த அருமையான பகுதியைப் பிரசுரித்த மங்கையர் மலருக்குப் பாராட்டுக்கள்.
உஷா முத்துராமன், திருநகர்

வீட்டு பட்சணம் போயே போச்சு! கடை பட்சண காலம் வந்தாச்சு! பட்சண கருத்தரங்கில் வாசகிகள் ஒவ்வொருவரும் சொல்வது உண்மையான செய்திதான்.
பிரகதா நவநீதன், மதுரை

வ்வொரு மாநிலத்திலும் தீபாவளி எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்றும், பண்டிகை பற்றி புராணக் கதைகளில் சொல்லப்படும் செய்திகளைப் பற்றியும் படித்ததும் புல்லரித்தது. அந்தந்த பண்டிகைகளைப் பற்றி நாம் எவ்வளவுதான் தெரிந்து கொண்டாலும், சில தெரியாத தகவல்களும் உண்டு என்பதை இந்தப் பக்கங்களை படிக்கும்போது புரிந்தது. இப்படி எங்களின் அறிவுக்கு விருந்து கொடுக்கும் மங்கையர் மலருக்குப் பாராட்டுக்கள்.
வெ.முத்துராமகிருஷ்ணன், மதுரை

ந்த உலகில் எல்லா முன்னேற்றங்களும், கண்டுபிடிப்புகளும், சாதனைகளும், தன் கையே தனக்கு உதவி என்று இயங்கி முயற்சிக்கும் மனிதர்களால்தான் உருவாக்கப்பட்டவை. சொந்த சக்தியையும், உழைப்பையும் நம்பி வாழும் மனிதருக்கு இறைவன் துணைபுரிவார் என்பதை. ஒரு வார்த்தையில்குருவி கதையாகக் கூறி, அனைவரையும் உற்சாகமடைய வைத்துவிட்டார் அனுஷா நடராஜன். மேலும், தீபாவளி சிறப்பிதழின் ஒவ்வொரு பக்கத்தையும் மிகுந்த ஆர்வத்துடன் படிக்கத் தூண்டியது மங்கையர் மலர்.
வி.கலைமதி சிவகுரு, புன்னைநகர்

ரு வார்த்தையில் சொன்ன குருவிக் கதை, மனித இனத்துக்கும் பொருந்தும்.
ஆர்.ராஜலட்சுமி, ஸ்ரீரங்கம்

தீபாவளி தகவல்கள், அனுபவங்கள், பலகாரங்கள், அனைத்து மாநிலத்திலும் கொண்டாடப்படும் தீபாவளி என மங்கையா் மலாின், தீபாவளி சிறப்பு மலா்‘, சிற்பி பாா்த்துப் பாா்த்து செதுக்கிய சிற்பங்கள் போல ஜொலித்தது. பக்கத்துக்குப் பக்கம் சுவைக்கு பஞ்சமில்லை. சூப்பா் சூப்பா் சூப்பா்!
நா.புவனா நாகராஜன், செம்பனாா்கோவில்

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

சொல்ல விரும்புகிறோம்!

5
Excellent work. Appreciate your simple and clear language and presentation which a commoner can relate to and enjoy. Thanks for the wonderful work. - Bhuvaneshwari...

சொல்ல விரும்புகிறோம்!

0
எப்படிப் பிறந்தாள் புதுமைப்பெண்? அற்புதமான கட்டுரை. நமக்குத் தெரியாத நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள முடிந்தது. பாராட்டுக்கள் பல. - கே.எஸ்.கிருஷ்ணவேணி பாரதியாரை பற்றி எவ்வளவோ படித்திருக்கிறோம். பாரதியின் எள்ளுப்பெயரர் நிரஞ்சன் பாரதி எழுதும் இத்தொடரில், பாரதி காங்கிரஸ்...

சொல்ல விரும்புகிறோம்!

0
எப்படிப் பிறந்தாள் புதுமைப்பெண்? Amazing information... every story of HIS is like a blessing. - ஆதித்யா மஹாகவி சுப்பிரமணிய பாரதியின் கவிதைகளை மட்டுமே படித்த பலரும், மஹாகவி பாரதியாரின் எள்ளுப் பேரனுடைய இந்தக்...

சொல்ல விரும்புகிறோம்!

1
எப்படிப் பிறந்தாள் புதுமைப்பெண்? ஆரம்பமே அமர்க்களம்! - சுஜாதா வேங்கடகிருஷ்ணன் நிரஞ்சன் பாரதிக்கு வாழ்த்துக்கள். மகாகவி பாரதி பிறந்த நாளில், அவரது வழித்தோன்றல் நிரஞ்சன் பாரதியின், ‘எப்படிப் பிறந்தாள் புதுமைப்பெண்’ தொடரை மிகுந்த எதிர்பார்ப்போடு படிக்கக்...

சொல்ல விரும்புகிறோம்!

0
நம் குடும்பத்தில் உள்ளவர் இப்புவியை விட்டு மறைந்து விட்டால், அவரின் மீதுள்ள பாசம் தொடர்ந்து நீடித்து நிலையாக எப்போதும் மனதில் கட்டுண்டு இருக்க, அனுஷா மேடத்தின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளலாம். - து.சேரன், ஆலங்குளம் ‘ஒரு வார்த்தை’...