விபூதி பார்த்த பலன்!

விபூதி பார்த்த பலன்!
Published on

படித்ததில் பிடித்தது

எஸ்.மாரிமுத்து, சென்னை
ஓவியம்: பிரபுராம்

ழை விவசாயியான கந்தசாமி அந்த ஊருக்கு வந்திருந்த துறவியிடம், ''எனக்கு சுலபமாக பின்பற்றுவது போல் ஏதேனும் உபதேசம் செய்யுங்கள்!'' எனக் கேட்டார். துறவியும், ''நெற்றியில் விபூதி பூசிய யாரையேனும் பார்த்த பிறகே உணவு உட்கொள்வது என்பதை வழக்கப்படுத்திக் கொள்!'' என்று உபதேசித்தார்.

கந்தசாமியின் பக்கத்து வீட்டில் ஒரு குயவர் இருந்தார். அவர் பரம சிவ பக்தர். நெற்றியில் எப்போதும் பளிச்சென்று விபூதி இட்டுக் கொண்டுதான் காலையில் வேலைக்குக் கிளம்புவார். தினமும் கந்தசாமி காலையில் அவரைப் பார்த்துவிட்டு காலை உணவு சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்.

ஒரு நாள் காலை குயவனார் களி மண் எடுப்பதற்காக விடியற்காலையிலேயே வெளியே கிளம்பி விட்டார். அவரைப் பார்க்க முடியாததால் கந்தசாமியால் எதுவும் சாப்பிட முடியவில்லை. அவருக்குப் பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது. குயவரைத் தேடிக்கொண்டு ஏரிக்கரை பக்கம் சென்றார்.

ரு பெரிய பள்ளத்தில் களிமண் எடுக்க வெட்டிக்கொண்டிருந்தபோது, குயவருக்கு தங்கக் காசுகள் நிறைந்த இரண்டு குடங்கள் கிடைத்தன. வேறு யாரேனும் இதைப் பார்த்துவிட்டால் வம்பாகி விடுமே என்று மேலே நிமிர்ந்து பார்த்தார். அதேநேரம் கந்தசாமி பள்ளத்தின் உள்ளே எட்டிப் பார்த்தார்.

விபூதி பூசிய குயவரின் முகத்தைப் பார்த்ததும், ''அப்பாடா, இனி நாம் சாப்பிடலாம்'' என்ற சந்தோஷத்தில், ''பார்த்துவிட்டேன்பார்த்துவிட்டேன்'' என்று கத்திக்கொண்டே வீட்டுக்கு ஓடினார்.

குயவனார், 'தங்கக் காசுகளைத்தான் பார்த்துவிட்டார் கந்தசாமிஇவன் மற்றவர்களிடம் சொல்லிவிட்டால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடும்' என்று பதற்றமாக, கந்தசாமியை கூப்பிட்டு, ''எனக்கு இரண்டு குடங்கள் நிறைய தங்கக் காசுகள் கிடைத்திருக்கின்றன. உனக்கு ஒரு குடம் தருகிறேன். நீ யாரிடமும் இதைப் பற்றி மூச்சு விடாதே'' என்று கேட்டுக் கொண்டார். கந்தசாமி குடத்துடன் வீடு நோக்கி நடந்தார்.

'விபூதி பூசிய முகத்தைப் பார்த்ததற்கே இத்தனை நல்லது நடக்கிறதே' என்று நினைத்த கந்தசாமி மனம் மாறி, பரம பக்தரானார்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com