எம். எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் நினைவு தினம் இன்று!

எம். எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் நினைவு தினம் இன்று!
இசையரசி எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்கள் 2004-ம் ஆண்டு இதே நாளில் (2004) மறைந்தார்.
இசையுலகில் கொடி கட்டிப் பறந்த எம்.எஸ்-சுக்கு ஆரம்ப நாட்களில் அவரது தாயார் மதுரை சண்முகவடிவு குருவாக விளங்கி கர்னாடக இசையை போதித்தார்.
இந்தியில் வெளியான மீரா திரைப்படத்தில் எம்.எஸ் – சின் கானத்தைக் கேட்டு, பிரதமர் ஜவஹர்லால் நேரு ° இந்த இசைப் பேரரசி முன் நான் சாதாரண பிரதமர் ." என்று புகழ்ந்தார்.
ஐ.நா சபையில் பாடிய முதல் இந்தியப் பெண்மணி என்பது உட்பட பல பெருமைகள் கொன்ட எம்.எஸ் அம்மா, மகசேசே விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷன் உட்பட பல உயரிய விருதுகள் பெற்றவர்.
அவரது இனிய குரலில் வேங்கடேச சுப்ரபாதம் , காற்றினிலே வரும் கீதம், குன்றயொன்றுமில்லை போன்ற பாடல்கள் அழியா புகழ் கொண்டவை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com