0,00 INR

No products in the cart.

மார்கழி மகோத்ஸவம்!

மார்கழி என்பதை வடமொழியில், ‘மார்கசீர்ஷம்’ என்பர். இதில், ‘மார்கம்’ என்றால் வழி என்றும், ‘சீர்ஷம்’ என்றால் தலைசிறந்தது அல்லது உயர்ந்தது என்றும் பொருள்படும். இறைவனைச் சேரும் உன்னத வழியைக் கூறும் மாதமாக மார்கழி திகழ்கிறது என்பதே இதன் பொருளாகும்.

ஓராண்டு காலம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். இதில் பகல் பொழுதை உத்தராயணம் என்றும், இரவுப் பொழுதை தட்சிணாயணம் என்றும் கூறுவர். உத்தராயணமாகிய பகல் பொழுது தொடங்கும் முன், வருகின்ற மார்கழி மாதமே தேவர்களுக்கு அதிகாலை நேரமாகும். இறைவனைப் போற்றி வழிபட, தேவர்களின் அதிகாலைப் பொழுதான மார்கழி மாதமே உன்னத காலமாகும். அதனால்தான் மார்கழியின் அதிகாலை நேரத்தில் இறைவனை துயிலெழுப்பும் விதமாக கோயில்களில் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி போன்றவை பாடப்படுகின்றன.

பொதுவாக ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங்களில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறாது. ஆடி மாதம் அம்மன் வழிபாட்டுக்கும், புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டுக்கும், மார்கழி மாதம் அனைத்து தெய்வ வழிபாட்டுக்கும் உரியதாகக் கொள்ளப்பட்டது. சிலர் மார்கழி மாதத்தை ‘பீடை மாதம்’ என்றும் கூறுவர். ‘இறைவனை வழிபட்டு ஏற்றம் பெற, பீடுடைய மாதம் மார்கழி’ என்று இதனைக் கொள்ள வேண்டும். மார்கழி மாதத்தில் வீட்டு விசேஷங்களை வைத்தால், இறைவழிபாட்டுக்கு இடையூறு ஏற்படும் என்பதற்காகவே, நமது முன்னோர்கள் இம்மாதத்தில் சுப நிகழ்ச்சிகளை வைக்கவில்லை. அதனால்தான், ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ என்று, ஸ்ரீ கிருஷ்ண பகவான் தனது கீதையில் கூறியுள்ளார்.

இறைவனை அடையும் மார்க்கங்களில் ஒன்று சரணாகதி. அப்படிச் சரணாகதி செய்து இறைவனைச் சேர்ந்தவர்களில், சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாம் ஆண்டாள் நாச்சியாரும், அரசப் பணியை விட ஆண்டவன் பணியே உயர்ந்தது எனக்கொண்ட மாணிக்கவாசகரும் முக்கியமானவர்கள். ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவையும், மாணிக்கவாசகர் போற்றித் துதித்த திருவெம்பாவையும் மார்கழியில் இறைவனைப் போற்றித் துதித்து வழிபட உகந்தவையாகும். ஆகவேதான், மார்கழி மாதத்தை மாண்புக்குரியதாக மாற்றியமைத்ததில் இவர்களின் பங்கு போற்றுதலுக்குரியது எனக் கூறப்படுகிறது.

இனி, மார்கழி மாதத்தில் நடைபெற்ற சில புராண நிகழ்வுகளையும், இம்மாதத்தின் சில சிறப்புகளையும் காண்போம்.

lமார்கழி மாதத் தொடக்கத்தில்தான் பாரதப் போர் தொடங்கியது. பதினெட்டு நாட்கள் நடைபெற்ற இந்தப் போரின்போதுதான் ஸ்ரீ கிருஷ்ணன், உலக மக்கள் உய்ய, அர்ச்சுனன் பொருட்டு புனித கீதையை உரைத்தருளினான்!

lபாரதப் போரின் இறுதியில் பிதாமகர் பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருந்தபடி, விஷ்ணு

சகஸ்ரநாமத்தை உலக மக்களுக்காகத் தந்தருளியது மார்கழி மாதமே!

lவைணவத் திருத்தலங்களில் பெரும் உத்ஸவமாகக் கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசி திருநாள் வருவது மார்கழி மாதத்தில்தான்!

lமார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரம் அன்றுதான் நடராஜப்பெருமானுக்குரிய விசேஷமான ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது!

lமார்கழி மாத அமாவாசை மூலம் நட்சத்திரத்தன்றுதான் வாயு புத்திரனாம் ஆஞ்சனேயனின் ஜயந்தி தினம் கொண்டாடப்படுகிறது.

lமார்கழி விடியற்காலையில், ஓசோன் படலம் நிலவுலகத்தில் சற்று அதிகமாகப் பரவுகிறது. இந்த ஓசோன் படலம் சூரியனிடம் இருந்து வருகின்ற, கேடு விளைவிக்கின்ற
புற ஊதாக்கதிர்களை உறிஞ்சி, உயிரினங்களைப் பாதுகாப்பதோடு, உடலுக்குப் புத்துணர்ச்சியும், உள்ளத்துக்கு இதமும் தருகிறது.

lபெண்கள் நோன்பு ஏற்கத் தகுந்த மாதம் மார்கழியாகும். ஆயர்பாடி கன்னியர், மார்கழி மாத முப்பது நாட்களும் கௌரி நோன்பு நோற்று, காத்யாயனியை (பார்வதி) வழிபட்டதாக, பாகவதப் புராணத்தில் ஒரு குறிப்பு காணப்படுகிறது.

lஆண்டாள் நாச்சியார் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்கழி மாதத்தில் நீராட்டு, தைலக்காப்பு விழா விமரிசையாக நடைபெறுகிறது.

lஆவுடையார்கோவில், மதுரை, சிதம்பரம், திருநெல்வேலி, குற்றாலம் முதலிய சிவத்தலங்களில் மார்கழி மாதத்தில் மாணிக்கவாசகர் திருவெம்பாவை உத்ஸவம் மிகச்சிறப்பாக நடைபெறும்.

தொகுப்பு : கே.காந்திமதி

1 COMMENT

எம்.கோதண்டபாணி
கோதண்டபாணி 32 ஆண்டு கால பத்திரிகை பணி. கல்கி குழுமத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக தீபம் இதழின் உதவி ஆசிரியர் பணி. ஆன்மீகக் கட்டுரைகள் எழுதுவது... இந்து சமய பெருமையை எழுதுவது பிடித்தம். Ponniyin Selvan நாவலில் வந்த கோயில்களை தொகுத்து PONNIYIN PAATHAIYIL எனும் தொடர் வெளியாகி தனி புத்தகமாக தயாராகிக் கொண்டிருக்கிறது.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

​அம்பிகையின் அருள்!

0
- வி.ரத்தினா, ஹைதராபாத் எனது அண்ணி அம்பாளின் மீது மிகுந்த பக்தியும் ஈடுபாடும் கொண்டவர். தினமும் பூஜைகள் செய்து அம்மனைப் போற்றி பல பாடல்களை உருக்கமாகப் பாடுவார். அதுமட்டுமின்றி; எப்போதும் அம்பாளின் நினைவுடனே இருப்பார்....

இறைவன் ஏற்கும் விசேஷ நிவேதனங்கள்!

0
lகொல்லூர், ஸ்ரீ மூகாம்பிகைக்கு இரவு அர்த்த ஜாம பூஜையின்போது சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், லவங்கம், சர்க்கரை சேர்த்துத் தயாரிக்கப்படும் மணமிக்க கஷாயமே நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. lசிதம்பரம், ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு கிச்சடி சம்பா...

​பலன் தரும் ஸ்லோகங்கள்!

0
- எம்.வசந்தா ​உடல் உஷ்ணம் குணமாக... ‘பத்ம ஹஸ்த பரம் ஜ்யோதி பரேஸாய நமோ நம அண்டயோனே மஹாஸாக்ஷின் ஆதித்யாய நமோ நம கமலாஸன தேவேஸ பானு மூர்த்தே நமோ நம தர்மமூர்த்தே தயாமூர்த்தே தத்வமூர்த்தே நமோ நம’ பொருள் :...

​தீபப் பலன்!

1
- பொ.பாலாஜிகணேஷ் ‘விளக்கேற்றிய வீடு வீண் போகாது’ என்று கூறுவர். தீபச் சுடருக்குத் தன்னைச் சுற்றியுள்ள தேவையற்ற கதிர்களை (நெகடிவ் எனர்ஜி) ஈர்க்கும் சக்தி உண்டு. அவ்வாறு ஈர்க்கும்போது நம்மைச் சுற்றி பாசிடிவ் எனர்ஜி...

​கடவுள் தரிசனம்!

0
- சுந்தரி காந்தி துறவி ஒருவர் ஆற்றில் நீராடிவிட்டு, கரையில் இருந்த மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்தார். இதை மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் பார்த்தான். நீண்ட நேரம் கழித்து துறவி தியானம் கலைந்து...