மெட்ராஸ் மொசார்ட் ஏ.ஆர். ரஹ்மான் பிறந்த நாள் : பிரபலங்கள் வாழ்த்து!

மெட்ராஸ் மொசார்ட் ஏ.ஆர். ரஹ்மான் பிறந்த நாள் : பிரபலங்கள் வாழ்த்து!
இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இன்று தனது 55 – வது பிறந்த நாள் கொண்டாடுவதையொட்டி பிரபலங்கள் பலரும் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகர் மலையாள திரையுலகில் பிரபல இசையமைப்பாளர் ஆவார். அவர் ஏ.ஆர்.ரஹ்மானின் 9 -வது வயதில், காலமானார். அதன் பின்னர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ்த் திரையுலகில் எம்.எஸ் விஸ்வநாதன், இளையராஜா குழுவில் இணைந்து பணியாற்றினார். விளம்பரப் படங்களுக்கும் இசையமைத்தார்.
1992-ல் வெளியான ரோஜா திரைப்படத்துக்கு முதன்முதலாக ரஹ்மான் இசையமைத்தது – அவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. தேசிய விருதும் கிடைத்தது.
அதன் பின் பாலிவுட், ஹாலிவுட் என கோலோச்கிய ரஹ்மானுக்கு, ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் இசையமைப்புக்காக 2 ஆஸ்கார் விருதுகள் கிடைத்தன.
மெட்ராஸ் மொசார்ட் என்று செல்லமாக அழைக்கப்பட்ட ரஹ்மான் 6 தேசிய விருதுகள், 2 ஆஸ்கார் விருதுகள் உட்பட _ உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் ஏராளமான விருதுகள் குவித்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கதீஜா, ரஹீமா, என்று 2 மகள்களும் அமீன் என்ற மகனும் உள்ளனர். சமீபத்தில் அவரின் மூத்த மகள் கதீஜாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது குறிப்பி. த்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com