மதுரை ஜல்லிக்கட்டுப் போட்டி; வீரர்களுக்கான முன்பதிவு இன்று தொடக்கம்!

மதுரை ஜல்லிக்கட்டுப் போட்டி; வீரர்களுக்கான முன்பதிவு இன்று தொடக்கம்!

மதுரை ஜல்லிக்கட்டில் பங்கேற்க விரும்பும் வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 3 மணிக்கு தொடங்கவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அரீக்கை:

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அலங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில்,மதுரை ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளை,மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 3 மணிக்கு தொடங்கவுள்ளது.அதன்படி,ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க விரும்பும் வீரர்கல் https://madurai.nic.in/என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறூ அரசு தெரிவித்துள்ளது.

மேலும் ,ஜல்லிக்கட்டு போட்டிகளில் கடைபிடிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளாக, ஜல்லிக்கட்டு வீரர்கள் இரு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. மேலும் சில விதிமுறைக;ள்:

  • ஜல்லிக்கட்டில் பங்குபெறும் வீரர்களுக்கு, நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து 3 நாட்கள் முன்பாக பதிவு செய்து, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்.

அடையான அட்டை இல்லாத நபர்களுக்கு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்குள் நுழைய அனுமதி இல்லை.

  • ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது. எருது விடும் நிழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது.
  • மொத்தம் 150 பார்வையாளர்களுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 50% என்ற எண்ணிக்கையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com