மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு : இன்று களம் காண்கிறது!

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு : இன்று களம் காண்கிறது!

மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 4 மணி வரை நடக்கிறது.

உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு வருடந்தோறும் தை மாதம் 2-ம் தேதி நடத்தப்படும்.

இந்த வருடம் ஜல்லிக்கட்டு கொரோனா பாதிப்பின் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை மாடுபிடி வீரர்களும், காளகாளைகளின் உரிமையாளருக்கும் கட்டாயம் கடைபிடிக்க கூடிய வழிமுறைகளை அரசு அறிவித்துள்ளது அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது.

பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்கக் கூடிய மாடுபிடி வீரர்களும் , காளையின் உரிமையாளர்களும் ஏற்கனவே ஆன்-லைன் மூலம் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தனர்.

இந்த பாலமேடு ஜல்லிக்கட்டு பொறுத்தவரை 300 மாடுபிடி வீரர்களும் 700 ஜல்லிக்கட்டு காளைகள் களம் காண உள்ளது.

ஆன்-லைனில் விண்ணப்பித்திருந்த ஜல்லிக்கட்டு காளைகளுக்கு முறையான மருத்துவ பரிசோதனை செய்வதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக கால்நடைத்துறை இணை இயக்குனர் தலைமையில் பத்து மருத்துவ குழு இங்கு மருத்துவ பரிசோதனையை துவங்கியுள்ளனர்.

இதே போல் மாடு பிடிவீர்ர்களுக்கும் மருத்துவ குழு பரிசோதனைகள் நடத்துகின்றனர்.

இந்த மருத்துவ குழுவினர் அரசு விதித்துள்ள விதிமுறைகள் படி காளைகள் இருக்கின்றதா என்ற பரிசோதனை மேற்கொள்வார்கள் இவர்கள் மேற்கொண்டு பரிசோதனை மேற் கொண்ட பின்புதான் காளைகள் வாடி வாசல் வழியாக திறந்து விடுவதற்காக அனுமதிக்கப்படும்..

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மருத்துவ காளைகளுக்கு ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்க வாடிவாசல் அருகிலேயே கால்நடை மருத்துவர்கள் முழுமையாக இருப்பார்கள் படுகாயமடைந்த காளைகளை மேல் சிகிச்சை எடுத்துச் செல்வதற்கு அவசரகால உறுதியும் வைக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com