0,00 INR

No products in the cart.

அன்புவட்டம்!

அனுபவசாலிகள் என்பவர் யார்?
– வாணி வெங்கடேஷ், சென்னை

ஞ்சாப் சென்ற அவரது கான்வாய், நட்ட நடு மேம்பாலத்தில் நகர முடியாதபடி நிறுத்தப்பட்டது. ஒரு நாட்டின் பிரதம மந்திரியின் பாதுகாப்பு வளையத்துக்குள் ஓர் அடி நுழைந்தாலே, சல்லடையாகச் சுட்டு வீழ்த்த அனுமதியிருந்தும், எதுவுமே நடக்காத மாதிரி அமைதியாகத் திரும்புகிறார் மோடி ஜி! பெரிய கலவரம் நடக்கும் என்ற எதிர்ப்பாளர்களின் எண்ணத்தில் மண்!

எதிர்க்கட்சிகளின் கிண்டல் (‘எப்படி இருந்தது அந்த ஜோஷ் பி.எம் ஜி?’) ‘கூட்டம் வராததால் மோடி நிகழ்ச்சியை ரத்து செய்தார்’ என்று ஊடகங்கள் கயிறு திரித்தன. கிளர்ச்சியாளர்கள் மார்தட்டிக் கொண்டாடினர். துளிகூட அசரவில்லையே பிரதமர். சட்டப்படி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயிலில் பயணம் செய்த ஒரு வி.வி.ஐ.பி, சக பயணியை அறைந்த காட்சி, ஆர்வக்கோளாறால் செல்ஃபி எடுத்த ரசிகரின் செல்ஃபோனைத் தட்டி உடைத்த நடிகர்… இவங்களுக்கே அப்படியொரு கோபம் வருமென்றால், ஒரு பிரதம மந்திரியின் உயிருக்குத் திட்டமிட்ட அச்சுறுத்தல் வந்தபோது, அவர் நடந்துகொண்ட விதம்… உண்மையிலேயே பெருமையாக உள்ளது. அனுபவசாலிகள் என்பவர்கள் வயதைக் கடந்து வருபவர்கள் அல்ல; வலியைக் கடந்து வருபவர்கள்!

முருகன், பிரம்மா போன்ற தெய்வங்களுக்கு தலைகள், கைகள் அதிகமிருந்தும், கால்கள் மட்டும் இரண்டுதானே இருக்கின்றன?
– வாசுதேவன், பெங்களூரு.

‘ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்’ கேட்டிருப்பீங்களே ஸார்… அதுல, ‘சகஸ்ராக்ஷா, சகஸ்ரபாத்’ என்று வரும். ஆயிரம் கண்கள், ஆயிரம் கால்கள் உடையவராகவே திருமால் வர்ணிக்கப்படுகிறார்.

அதேபோல, மகாகாளிக்கு பத்து முகங்கள், பத்துக் கால்கள் இருப்பதாக மகாகவி காளிதாசர் குறிப்பிடுகிறார். குபேரனுக்கோ மூன்று கால்கள்; எட்டு பற்களாம்!

தெய்வங்களின் கரங்களுக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. அபயம் தர, வரம் கொடுக்க, உதவிக்கரம் நீட்ட, வாழ்த்த, ஆயுதங்கள் ஏந்த… இப்படிப் பற்பல!

ஆனால், திருப்பாதங்கள் நாம் சரண் அடைய மட்டுமே! அதற்கு இரண்டு போதுமே! சிம்ப்ளி சரண்டர்! அதனால்தானோ, நம்ப வள்ளுவர் அய்யா கூட, ‘கடவுள் வாழ்த்து’ பகுதியில், ‘தாள்’, ‘அடி’ என்று மட்டுமே சொல்லி சமாளித்திருக்கிறார்.

‘சிங்கமுகம்’, ‘ஆறுமுகம்’, ‘ஜடாதரன்’, ‘ஆனைமுகம்’ என்றெல்லாம் சொன்னால் இன்ன தெய்வம் என்று, ‘க்ளு’ கொடுத்ததுபோல ஆகிவிடுமே!
(‘நற்றாள் தொழாஅர் எனின்’, ‘இலானடி சேர்ந்தார்க்கு’, ‘தாள் சேர்ந்தார்க்கல்லால்’, ‘தாளை வணங்காத் தலை’…) என்ன ஒரு புத்திசாலித்தனம்? ஜீனியஸ் சாமி நீங்க!

அனுஷா ரசித்த கவிதை?
– வி.வித்யா பிரசாத், நங்கநல்லூர்.

விஞர் கவிதா பாரதியின் கவிதை! ஒவ்வொரு மழையின்போதும் நினைவுக்கு வந்து மழையை மேலும் அழகாக்கும்!

 • மழையில்
  நனையும்போது
  கவலைப்பட்டேன் வழியில்
  எங்கேனும்
  நீயும் நனைகிறாயோ
  என்று!
  பிறகு,
  உன்மேல் பொழியும்
  மழைதான்
  என் மேலும் பொழிகிறதென
  மகிழவும் செய்தேன்!
  உனக்கும் எனக்கும்
  பொதுவான
  அந்த மழை
  பெய்யவேயில்லை
  என்பதறிய
  ரொம்ப காலமாயிற்று!
 •  ‘மழை பிடிக்கும்’
  என்றுதான்
  சொல்கிறார்கள்;
  கையில் குடையிருக்கும்
  எல்லாப் பெண்களும்!
  (கடைசி வரிகள் நம்பகூட அப்படியே மேட்ச் ஆகுதுல்ல?!)

நடிகை ஊர்வசி எழுநூறு படங்களுக்கு மேல் நடித்துள்ளாராமே?
– எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன்.

பெரும்பாலும், மலையாளப் படங்களை ஒரு இருபது இருபத்தைந்து நாட்களுக்குள் எடுத்து முடித்துவிடுவார்கள் என்பதாலும், ஊர்வசி அதிகபட்சமாக மலையாளத்தில் நடித்திருப்பதாலும் இந்த எண்ணிக்கை சாத்தியமாகியிருக்கும். முக்கியமாக, ஊர்வசி ஒன் டேக் ஆர்டிஸ்ட்! அதுவும் ஒரு காரணம்!

பொதுவா, கமல்ஹாசன் யாரையும் அவ்வளவு லேசுல பாராட்டி விட மாட்டார். அவரே, ‘நடிப்பு ராட்சசி… கொஞ்சம் விட்டா டாமினேட் செஞ்சுருவாங்க’ன்னு பாராட்டுறாருன்னா, அது ஊர்வசியோட சேர்ந்து நாமும் பெருமைப்பட்டுக்க வேண்டிய விஷயம்தான்!

‘முந்தானை முடிச்சு’ படம் அவருடைய அறிமுகப் படம்! ‘பரிமளம்’னு பேர் வெச்சாலும் வெச்சாங்க, ஊர்வசியின் கேரியர் பூரா கம கம வாசனை!
குறும்புத்தனமான, அப்பாவியான, பொய் பேசக்கூடிய… மொத்தத்தில் மிக யதார்த்தமான கேரக்டர்களுக்கு ஏற்ற துறுதுறு முகம் + கரகர குரல்! அதை அப்படியே என்கேஷ் செய்துகொண்டு ஜமாய்த்து வருகிறார் இந்த சகலகலாவல்லி!

இல்லாட்டி, கேரளாவின் ஸ்டேட் ஃபிலிம் அவார்ட்டுகளை ஐந்து முறை அள்ளியிருக்க முடியுமா?! எஸ்… மேக் இட் ஈஸி ஊர்வசி!

1 COMMENT

 1. அனுபவசாலிகள் என்பவர் வயதை கடந்து வருபவர்கள் அல்ல; வலியைக் கடந்து வருபவர்கள் பதில் நச்.அசத்தல்.

  ஆ. மாடக்கண்ணு
  பாப்பான்குளம்

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

அன்புவட்டம்!

மேடம், ‘அக்னிபாத் திட்டம்’ என்றால் என்ன? அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? - வி. கலைமதி சிவகுரு, நாகர்கோவில் அது ‘அக்னிபாத்’ அல்ல! அக்னிபத்! ‘அக்னிப்பாதை’ என்று பொருள், கலைமதி! “17.5 முதல் 23 வயதுக்கு...

அன்புவட்டம்!

இடைவிடாமல் வேலை செய்யும் எமதர்மன் இரண்டு நாட்கள் லீவில் சென்றால்...! - வாசுதேவன், பெங்களூரு ‘வென்டிலேட்டர் எடுத்தால் முடிஞ்சுடும்’ என்ற கேஸ்கள் கூட வென்டிலேட்டர் எடுத்த பின்னும் இரண்டு நாட்கள் சுவாசிப்பார்கள். - மெடிக்கல் மிராக்கிள்! கூலிப்படையை வெச்சு...

அன்புவட்டம்!

மாம்பழ சீஸனாச்சே? நீங்க விரும்பியப்படி ஒரு பழமாவது நசுக்கி, கசக்கி, ஜூஸாக்கி, ஓட்டைப் போட்டு உறிஞ்சினீங்களா? நேரம் இருந்ததா? இல்ல வாசகர்களுக்கு பதில் சொன்னதோடு சரியா? -ஜெயகாந்தி மகாதேவன், பாலவாக்கம் இவ்ளோ பழகியும் என்னைப் புரிஞ்சுக்கிட்டது...

ஒரு வார்த்தை!

அந்த விளையாட்டுக்கு உங்க ஊருல என்ன பேர்னு தெரியல... நாங்க வெச்ச பேரு ‘தோசை! சீட்டுக் கட்டில் உள்ள அத்தனை சீட்டுக்களையும் குப்புற பரப்பி வெச்சுடணும். ஆளுக்கு இரண்டு சீட்டுக்களைக் குருட்டாம் போக்கில் எடுக்கணும்....

அன்புவட்டம்!

நடிகை நயன்தாரா திருமணப் பத்திரிகை வந்தால் போவீர்களா? (ஸாரி, ‘குமுதம்” – அரசு பதில்களில் கேட்க வேண்டியக் கேள்வி... ஒரு ஆர்வக் கோளாறில்...?!) -ஆர். நாகராஜன், செம்பனார்கோவில் ‘தவறான கேள்விக்குப் பதில் எழுத முயற்சி செஞ்சாலே, முழு...