இது சாப்பாட்டுத் தத்துவம்!

இது சாப்பாட்டுத் தத்துவம்!
Published on
வாசகர் ஜமாய்க்கிறாங்க!

* தோல்வி என்பது பெருங்காயம் போல… தனியாகச் சாப்பிட்டால் கசக்கும்; வெற்றி என்னும் சாம்பாரில் கரைந்து விட்டால் மணக்கும்!

* ஒரு குக்கரைப் போல இருங்கள்… பிரஷர் அதிகமாகும்போது விசிலடித்துக் கொண்டாடுங்கள்!

* சோம்பேறித்தனம் என்பது மிளகாய்க் காம்பு போல… கிள்ளி எறிந்து விட வேண்டும்!

* வாழ்க்கை சிக்கலான இடியாப்பம்தான். அதில் அன்பு என்னும் தேங்காய்ப்பாலைக் கலந்தால் சுவைக்கும்!

* கோபத்தை உப்பைப் போல பயன்படுத்துங்கள். அதிகமானால் வாழ்க்கை சுவைக்காது!

* தன்னம்பிக்கைச் சூத்திரங்கள் என்பவை சமையல் ரெசிபி போல… சமைப்பது உங்கள் கையில்தான்!

* வெற்றி என்பது இட்லியை போல வேகுவது தெரியாது… வெந்த பின்தான் தெரியும்!

வெற்றி என்ற இட்லியை தனியே உண்ண முடியாது… நட்பு என்ற சட்னி வேண்டும்!

– நிர்மலா தேவி, மதுரை

பித்தம் போக்கும் சித்த மருத்துவம்!

* பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீங்கி, உடல் பலம் பெறும்.

* இஞ்சி துண்டை தேனில் ஊற வைத்து, 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

* ரோஜாப்பூ கஷாயம், பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர், சிறுநீருடன் வெளியேறும்.

* வாரத்தில் மூன்று நாட்கள் காலையில் எலுமிச்சை சாதம் சாப்பிட்டால் பித்தம் தணிக்கும்.

* சாப்பாட்டில், ஊறுகாய்க்கு பதிலாக உப்பு நார்த்தங்காய் சேர்த்துக் கொள்வதால் பித்தம் அறவே நீங்கும்.

* அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்.

* ஆரஞ்சு பழம் சாப்பிட்டால் பித்தம் தணியும்.

* பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்த பாண்டு தீரும்.

* பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து, அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி, பின் ஆற வைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

* எலுமிச்சை இலையை மோரில் ஊற வைத்து, அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால், பித்தம் தணியும்.

* பச்சரிசியை பசும்பாலில் போட்டு நன்றாக வேகவைத்து கஞ்சியாக்கினால் கிடைப்பதே பால் கஞ்சி. இதைக் குடிப்பதால் உடலின் உள் சூடு தணிந்து, பித்தம் மற்றும் அதனால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும்.

– பி.மஹதி

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com