எம்மா ராடுகானு – டென்னிஸ் உலகின் புதிய நட்சத்திரம்!

எம்மா ராடுகானு – டென்னிஸ் உலகின் புதிய நட்சத்திரம்!
Published on
-Sankalp Harikrishnan, தமிழாக்கம் : மங்கை ஜெய்குமார்

செப்டெம்பர் 11, 2021 சனிக்கிழமை நியூயார்க் நகரின் ஆர்தர் ஆஷெ ஸ்டேடியத்தில் 18 வயது எம்மா ராடுகானு என்ற ஒரு புதிய தாரகையைக் கண்டெடுத்தது டென்னிஸ் உலகம். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸில் மகளிர் ஒற்றையர் பிரிவில், மற்றொரு இளம் வீராங்கனை லேலா ஃபெர்னாண்டசை தோற்கடித்து, எம்மா சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். மறக்க முடியாத அரிய பெரும் சாதனை இது!

இந்தப் போட்டிக்கு முன்னர் எம்மா டென்னிஸ் உலகின் தர வரிசையில் 150வது இடத்தில் இருந்தார். விம்பிள்டன் போட்டிகளில் நான்காவது சுற்று வரை வந்து சாதித்தது ஒரு திருப்புமுனையாக அமைந்த போதும், இந்த இளம் இங்கிலாந்து வீராங்கனை, அமெரிக்க ஓபன் டென்னிஸில் இத்துணை சாதனை புரிவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை!

இந்தப் போட்டியில் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஒலிம்பிக் வீராங்கனை பெலிண்டாபென்செக் மற்றும் மரியா சக்காரி போன்ற வர்களை வீழ்த்தி, எந்த ஆட்டத்திலும் ஒரு செட் கூட இழக்காமல் எம்மா வெற்றி பெற்றுள்ளார்.

எம்மாவின் இந்த சாதனை வெற்றியைப் பாராட்டி, இவருக்கு உலகெங்கும் பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. பில்லி ஜீன் கிங், மார்டினா நவரத்திலோவா, கிரிஸ் எவெர்ட் போன்ற புகழ் பெற்ற டென்னிஸ் சாதனையாளர்களின் பாராட்டுகளும் இதில் அடக்கம். இங்கிலாந்து ராணி தனது வாழ்த்துச் செய்தியில், "இளம் வயதில் மிகச் சிறந்த சாதனையை எம்மா செய்துள்ளார். உங்களின் திறமையிலும், உங்களுடன் மோதிய பெர்னாண்டஸ் திறமையி்லும் எனக்கு துளியும் சந்தேகமில்லை. இருவரும் எதிர்கால டென்னிஸ் தலைமுறையின ருக்கு தூண்டுகோலாக இருப்பர்" எனத் தெரிவித்துள்ளார்.

விளையாட்டு உலகில் புயலைக் கிளப்பிய சாம்பியன் எம்மா பற்றிய சுவையான செய்திகள் இதோ :

பெயர் – எம்மா ராடுகானு

பிறந்த தேதி – 13 நவம்பர் 2002

பிறந்த இடம் – டொரன்டோ, கனடா

வசிப்பது – லண்டன், யு.கே.

தற்போதைய தர வரிசை – 23

பெற்றோர் – தந்தை இயான் (ரோமானியா)

தாய் ரெனீ (சைனா)

முன்மாதிரி – லை நா, சிமோனாஹலெப்

சாதனைகள் :

தகுதிச்சுற்று வழியே முன்னேறி வந்து, வாகை சூடிய முதல் போட்டியாளா்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அதிகம் பங்களிப்பு இல்லாம லேயே பட்டம் வென்ற வீராங்கனை.

44 வருடங்களுக்குப் பிறகு சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த முதல் இங்கிலாந்து வீராங்கனை.

ஒரே போட்டியில் அதிக புள்ளிகள் பெற்றவர் – 2040 புள்ளிகள். (40 புள்ளிகள் தகுதிச் சுற்றிலும் 2000 புள்ளிகள் முக்கிய போட்டியிலும்)

பெண்கள் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக இளம் வயது வீராங்கனை.

விடாமுயற்சி, போராடும் மனப்பான்மை, தன்னிகரில்லா உத்வேகத் துடன், அடிமட்டத்திலிருந்து இந்த இமாலய சாதனை புரியுமளவிற்கு முன்னேறியுள்ள எம்மாவின் வாழ்க்கைப் பயணம் போற்றுதலுக்குரி யது. எதிர்காலத்தில் இந்த இளம் டென்னிஸ் ராணியின் சாதனை களைக் கண்டு களிக்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com