கொஞ்சம் சிரிங்க பாஸ்!

கொஞ்சம் சிரிங்க பாஸ்!
Published on

வாசகர் ஜோக்ஸ்

ஓவியம் : ரஜினி

1. "தலைவர் கைலாச யாத்திரைக்குப் புறப்பட்டுப் போனார் என்று தவறுத லாகப் பிரசுரித்ததற்கு வருந்துகிறோம். தலைவர் கைலாஷ் தீவு யாத்திரைக் குப் புறப்பட்டுப் போனார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்." -எல். மகாதேவன், கோவை

2. "என் அப்பா ஒரு கட்சியின் கொறடா." "அப்புறம் உனக்கு என்ன கொறைடா?" -எஸ்.மோகன், கோவில்பட்டி.

3. "பக்தா, உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?" "எனக்குச் சீக்கிரம் கல்யாணம் ஆகவேண்டும் சாமி." "என்ன பக்தா, வரம் கேட்கச் சொன்னால் சாபம் கேட்கிறாயே?" -ஆர் சுந்தரரராஜன், சிதம்பரம்

4. "பொண்ணு சீரியல் நடிகையோ?" "ஏன் அப்படிக் கேட்கிறே?" "இவனா உன் காதலன்? அவன் என்ன ஆனான்? என்றால் இனிமேல் அவனுக்குப் பதில் இவன் என்கிறாள்." -எஸ்.மோகன், கோவில்பட்டி

5. "தீபாவளி பலகாரம் செய்த நான் தீபவாளி லேகியம் செய்ய மறந்துட்டேனுங்க." "அதுக்கென்ன நீ. செய்த பலகாரமே தீபாவனி லேகியம் மாதிரிதானே இருக்கும் மாலா." சி.கே.ஹரிஹரன், கேரளா

6. "மனைவியைக் காணாமப் போய் ஒரு வாரம் கழிச்சு புகார் கொடுக்க வந்திருக்கீங்களே ஏன்?" "தீபாவளி ஷாப்பிங்குக்குப் போறதா சொல்லிட்டுப் போனா இன்ஸ் பெக்டர் அதான் வெயிட் பண்ணிப் பார்த்தேன்." -சி.கே.ஹரிஹரன், கேரளா.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com