சுண்டல் சுவை கூட..

சுண்டல் சுவை கூட..
Published on
வாசகர் ஜமாய்க்கிறாங்க
– ஆர்.ஜெயலெட்சுமி

* சுண்டலுக்கான கொண்டைக் கடலையை ஊறவைத்த பின்பு, வெயிலில் ஒரு மணி நேரம் வைத்துவிட்டு வேக வைத்தால் சுண்டல் சுருக்கமின்றி பெரிது பெரிதாக இருக்கும்.

* பட்டாணி சுண்டலை வேகவைத்து இறக்கும்போது கறிவேப்பிலை பொடி, மிளகுப் பொடி தூவி இறக்கினால் வித்தியாசமான சுவையாக இருக்கும்.

* வெள்ளை மொச்சையை சுண்டல் செய்ய முதல் நாளே ஊற வைத்தால் நன்கு வேகும். சுவையும் கூடும்.

* தட்டாம் பயிறு சுண்டலை வேக வைத்து கீழே இறக்கும்போது மல்லித்தூள், கருவேப்பிலை சேர்த்தால் கமகமக்கும். தட்டாம் பயறை கவனமாக வேக வைக்கவில்லையெனில் குழைந்து இரண்டு இரண்டாகப் பிரிந்துவிடும்.

* கருப்பு கொண்டைக் கடலையை வெந்ததும் மிளகாய் வத்தல், தேங்காய் துருவல் அரைத்த பேஸ்டை போட்டு தனியாத் தூள் சேர்த்து தாளித்தால் சுவையே தனிதான்.

* பயறு சுண்டல் செய்ய எட்டு மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடித்து ஹாட்பேக்கில் போட்டு மூடி, மறுநாள் திறந்து பார்த்தால் முளைக்கட்டிய பயறு தயார் ஆகிவிடும்.

* கடலைப் பருப்பு சுண்டலுக்கு கடலைப் பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து, நீரை வடித்து குக்கரில் போட்டு லேசாகத் தண்ணீரைத் தெளித்து ஒரு விசில் வந்தவுடன் திறந்தால் பூவாக மலர்ந்திருக்கும்.

சுண்டல் – பொதுவான டிப்ஸ் :
* கொலுவிற்கு கார சுண்டல் செய்யும்போது காரம் அதிகமாகிவிட்டால் கார்ன்ப்ளேக்கை பொடித்துத் தூவி விட்டால் காரம் குறைந்துவிடும்.

* எந்த சுண்டல் செய்தாலும் தேங்காய்த் துருவலையும், பாதாம் துருவலையும் சேர்த்தால் சுவை சூப்பராக இருக்கும்.

* உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, தனியா, மிளகாய் வற்றல், பெருங்காயம், கறிவேப்பிலை இவற்றை வறுத்து, சிறிது உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். சுண்டல் செய்யும்போது வேகவைத்து கடுகு தாளித்ததும் தயார் செய்த பொடியை தேவையான அளவு மேலே தூவுங்கள். காரம், உப்பு ஒன்றாகக் கலந்தால் சுண்டல் ருசியாக இருக்கும்.

* சுண்டல் மீந்துவிட்டால் சிறிது வெங்காயம், தக்காளிப் பழங்களை வதக்கி மசாலாத் தூள் சேர்த்து சுண்டலையும் கலந்து கொதிக்க வைத்து, கொத்துமல்லித் தழை தூவி இறக்கி டிபனுக்கு தொட்டுக் கொள்ளலாம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com