
கோலங்கள் :
முதல் நாள் – பொட்டு
இரண்டாம் நாள் – கட்டம்
மூன்றாம் நாள் – மலர்
நான்காம் நாள் – படிக்கட்டு
ஐந்தாம் நாள் – பறவையினம்
ஆறாம் நாள் – தேவி நாமம்
ஏழாம் நாள் – திட்டாணி
எட்டாம் நாள் – பத்மம்
ஒன்பதாம் நாள் – ஆயுதம்.
அபிஷேகங்கள் :
முதல் நாள் – அரிசி மாவு
இரண்டாம் நாள் – கோதுமை மாவு
மூன்றாம் நாள் – முத்து
நான்காம் நாள் – அட்சதை
ஐந்தாம் நாள் – கடலை
ஆறாம் நாள் – பருப்பு
ஏழாம் நாள் – மலர்
எட்டாம் நாள் – காசு
ஒன்பதாம் நாள் – கற்பூரம்.
சுமங்கலிகளுக்கும் கன்னிப் பெண்களுக்கும் நீராடக் கொடுக்க வேண்டியவை :
முதல் நாள் – பச்சிலை
இரண்டாம் நாள் – பூலாங்கிழங்கு
மூன்றாம் நாள் – சண்பக மொட்டு
நான்காம் நாள் – கஸ்தூரி மஞ்சள்
ஐந்தாம் நாள் – திரவியப் பட்டை
ஆறாம் நாள் – காசுக்கிட்டி
ஏழாம் நாள் – லாக்ஷராஸம்
எட்டாம் நாள் – கஸ்தூரிகா பத்ரம்
ஒன்பதாம் நாள் – கோரோஜனம்.
சிறுமிகளுக்குக் கொடுக்க வேண்டியவை :
முதல் நாள் – எண்ணெய்
இரண்டாம் நாள் – மஞ்சள்
மூன்றாம் நாள் – குங்குமம்
நான்காம் நாள் – பன்னீர்
ஐந்தாம் நாள் – சந்தனம்
ஆறாம் நாள் – வாசனைத் தைலம்
ஏழாம் நாள் – நலங்கு மஞ்சள்
எட்டாம் நாள் – மருதோன்றி
ஒன்பதாம் நாள் – புஷ்ப நீர்.
பாட வேண்டிய ராகங்கள் :
முதல் நாள் – தோடி
இரண்டாம் நாள் – கல்யாணி
மூன்றாம் நாள் – காம்போதி
நான்காம் நாள் – பைரவி
ஐந்தாம் நாள் – பந்துவராளி
ஆறாம் நாள் – நீலாம்பரி
ஏழாம் நாள் – பிலஹரி
எட்டாம் நாள் – புன்னாகவராளி
ஒன்பதாம் நாள் – வஸந்தா.
அணிவிக்க வேண்டிய மாலைகள் :
முதல் நாள் – மல்லிகை
இரண்டாம் நாள் – முல்லை
மூன்றாம் நாள் – சம்பங்கி
நான்காம் நாள் – ஜாதி
ஐந்தாம் நாள் – பாரிஜாதம்
ஆறாம் நாள் – செம்பருத்தி
ஏழாம் நாள் – தாழம்பூ
எட்டாம் நாள் – ரோஜா
ஒன்பதாம் நாள் – தாமரை.
சார்த்த வேண்டிய இலைகள் :
முதல் நாள் – வில்வம்
இரண்டாம் நாள் – துளசி
மூன்றாம் நாள் – மரு
நான்காம் நாள் – கதிர்ப்பச்சை
ஐந்தாம் நாள் – விபூதிப்பச்சை
ஆறாம் நாள் – சந்தன இலை
ஏழாம் நாள் – தும்பை இலை
எட்டாம் நாள் – பன்னீர் இலை
ஒன்பதாம் நாள் – மருக்கொழுந்து.
வைத்துக் கொடுக்க வேண்டிய பழங்கள் :
முதல் நாள் – வாழை
இரண்டாம் நாள் – மா
மூன்றாம் நாள் – பலா
நான்காம் நாள் – கொய்யா
ஐந்தாம் நாள் – மாதுளை
ஆறாம் நாள் – நாரத்தை
ஏழாம் நாள் – பேரீச்சை
எட்டாம் நாள் – திராட்சை
ஒன்பதாம் நாள் – நாவல்.
பிரசாதங்கள் :
முதல் நாள் – வெண்பொங்கல்
இரண்டாம் நாள் – புளியோதரை
மூன்றாம் நாள் – சர்க்கரைப் பொங்கல்
நான்காம் நாள் – கதம்பம்
ஐந்தாம் நாள் – ததியோதனம்
ஆறாம் நாள் – தேங்காய் சாதம்
ஏழாம் நாள் – எலுமிச்சம் பழ சாதம்
எட்டாம் நாள் – பாயஸான்னம்
ஒன்பதாம் நாள் – அக்காரவடிசல்.