
பெண் – ஆணை விட இருபது சதவீதம் எடை குறைவு. ஆணைப்போல வேகமாக ஓடவோ, தாவவோ முடியாது. கால்களில் பலம் குறைச்சல். இதயமும், சுவாசப்பையும் அவளுக்குக் கொஞ்சம் சின்னது. வியர்வை அதிகம். சின்ன வயதிலிருந்தே ஆணைவிட, அவள் அதிகம் புன்னகை செய்கிறாள்.
ஆணைவிடச் சிறிய பொருட்களை விரும்புகிறாள். சின்ன குடைகள், சின்ன பர்ஸ்கள், கைக்குட்டைகூட சின்னது. சைக்கிள், ஸ்கூட்டி போன்ற சின்ன வாகனங்கள்.இப்படியே அவள் பயன்படுத்தும் அத்தனை வஸ்துக்களும் சிறியது. புத்தகங்களை எப்போதும் நெஞ்சோடு அணைத்துச் செல்வாள். ஆண்களைப் போல் பக்கவாட்டில் இல்லை.
அவளுடைய எலும்பு அமைப்பு நளினமானது. தசை நார்கள் முப்பது சதவிகிதம் வலிமை குறைவு. தொண்டை சிறியது. அதனால் கீச்சுக்குரல், இடை கொஞ்சம் பெரியது. அவள் ரத்தத்தின் அடர்த்தி கொஞ்சம் குறைவு. அதில் ஹீமோக்ளோபின் குறைவு. நாடித்துடிப்பு ஆண்களை விட அதிகம். 'படக்'கென்று வெட்கப்பட்டு கன்னம் சிவப்பாள்.
அவள் உடலில் கால்சியம் ஸ்திரமாக அமைவதில்லை. மாதவிலக்கின் போதும், கர்ப்பகாலத்திலும் அவள் நிறைய கால்சியம் இழக்கிறாள். அதனால் தைராய்ட் சுரப்பி மாறுபாட்டால் எண்டாக்ரின்களால் நரம்புகள் பாதிக்கப்பட்டு, அவள் ஆணைவிடக் கொஞ்சம் அதிகமாக உணர்ச்சி வசப்படுகிறாள். அதிகம் அழுகிறாள்…அதிகம் சிரிக்கிறாள்… அதிகக் கவலையும் கொள்கிறாள்.
ஆயுட்காலம் ஏறக்குறைய ஆண்கள் அளவுதான். ஆனால், அதிக தினங்கள் உடல் நலமில்லாமல் இருக்கிறாள். தன்னை ஒழுங்காகக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத நாட்கள்தான் அவளுக்கு அதிகம். போதுமா…?
இத்தனை கஷ்டத்துடன் பெண்களின் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் தனது குடும்பத்தோடு பின்னிப் பிணையப்பட்டுள்ளது. இந்நிலையில்தான், ஒரு பெண் தனது கணவனுடைய ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறாள். ஆண்களே, சற்று யோசியுங்கள்!