​கதம்பமாலை

​கதம்பமாலை
Published on

​கதம்பமாலை

ஏழு கோட்டை; ஏழு கணங்கள்!

பரிமலையின் பெரிய பாதையில் ஏழு கோட்டைகள் அமைந்துள்ளன. அந்த ஏழு கோட்டைகளையும் ஐயப்பனின் ஏழு கணங்கள் காத்து வருவதாக ஐதீகம். அவை :

எருமேலி கோட்டை வாபுரன்
காளைகட்டி கோட்டை நந்திகேஸ்வரன்
உடும்பாறை கோட்டை ஸ்ரீபூதநாதன்
கரிமலை கோட்டை பகவதி
சபரி பீடம் கோட்டை சபரி துர்கை
சரங்குத்திக் கோட்டை அஸ்த்ர பைரவர்
பதினெட்டாம்படி கோட்டை கருப்பசுவாமி.

எஸ்.மாரிமுத்து, சென்னை

பகவானே வணங்கும் பக்தர்கள்!

ஜீவாத்மாக்கள் அனைத்தும் இறைவனை வணங்குகின்றன. ஆனால், பரம்பொருளான
ஸ்ரீ கிருஷ்ணனே சில பக்தர்களை கைகூப்பி வணங்குகின்றார். அவர்கள் :
பிராதஸ்நாநி அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் நீராடுபவர்.
அச்வத்த ஸேவி அரசமரத்தை வலம் வந்து வணங்குபவர்.
தருணாக்ஹோத்ரி தினமும் அக்னிஹோத்ரம் செய்பவர்.
நித்யான்னதாதா தினமும் அன்னதானம் செய்பவர்.
சதாபிஷேகி நூறாண்டு நிறைவு விழா கொண்டாடுபவர்.
பிரம்ம ஞானி பிரம்மத்தை உணர்ந்த ஞானியர்.
இவர்களே கண்ணனால தொழுப்பெறும் பேறு பெற்றவர்கள்.

மகாலெக்ஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்

அத்தி மர மகாலக்ஷ்மி!

சென்னை புறநகர், குன்றத்தூரில் அஷ்ட லக்ஷ்மிகள் சுற்றி நின்றருளும் லக்ஷ்மி கோபுரம் பல்லவர் காலத்துக் கட்டடக் கலைக்குச் சான்றாக விளங்குகிறது. இந்த கோபுரத்தினுள் சுமார் ஒன்றரை அடி உயரத்தில் அத்தி மரத்தாலான ஸ்ரீ மகாலக்ஷ்மி காட்சி தருகிறாள். இந்த அத்தி மர மகாலக்ஷ்மியை ஒவ்வொரு பௌர்ணமி தினமும் காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணி வரை பூஜை காலங்களில் மட்டுமே தரிசிக்க முடியும். மற்ற சமயங்களில் தரிசிக்க முடியாது. ஒருவர் தம் வாழ்நாளில் ஆறு பௌர்ணமி தினங்களில் இந்த அத்தி மர மகாலக்ஷ்மியை தரிசித்தால் அவரது வறுமை விலகும். கடன் நிவாரணம் ஆகும். காரிய ஸித்தி உண்டாகும். வாழ்வில் பூர்வ புண்ணியம் இருந்தால் மட்டுமே இந்த தேவியை தரிசிக்க முடியும். குன்றத்தூர் ஸ்ரீ காத்யாயனி தேவி கோயில் அருகே உள்ள லக்ஷ்மி கோபுரம் கருவறைக்குள் இந்த சக்தி வாய்ந்த அத்தி மர மகாலக்ஷ்மி விக்ரஹம் உள்ளது.

ஆர். சாந்தா, சென்னை

முடி காணிக்கை தத்துவம்!

வேண்டுதல்கள் நிறைவேறவும் மற்ற சில காரணங்களுக்காகவும் பலர் முடியை காணிக்கையாகச் செலுத்துகின்றனர். ஆனால், தலையை மொட்டை அடித்துக்கொள்வதன் தத்துவம் பலருக்குத் தெரிவதில்லை. முடியை காணிக்கையாக அளிப்பதன் மூலம் கொடுப்பவரின் அழகு குறைகிறது. அழகு குறையும்போது ஆணவம் குறைகிறது. ஆணவம் குறைந்தவர்களால் மற்றவர்களுக்கு துன்பம் இல்லை. அதனால்தான் தலைமுடியை காணிக்கையாகக் கொடுக்க மொட்டையடிக்கும் வழக்கம் ஏற்பட்டது.

எஸ்.பி.பாலு, கோவிந்தபுரம்

ஆருத்ராவில் சுந்தரமூர்த்தி தரிசனம்!

லங்குடி தட்சிணாமூர்த்தி சுவாமி கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் சன்னிதியில் அருளும் சுந்தரமூர்த்தி விக்ரஹத்தில் வைசூரி தழும்புகள் காணப்படுகின்றன. இவரது உயரம் மூன்றரை அடி. இவர் வருடந்தோறும் ஆருத்ரா தரிசனத்தின்போது மட்டுமே வெளியே வருகிறார்.

ஒரே லிங்கத்தில் 1008 லிங்கங்கள்!

காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோயில், தென்காசி ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் பிராகாரங்களில் ஒரே லிங்கத்தில் 1008 லிங்கங்கள் காட்சி தரும் அபூர்வ லிங்கத்தை தரிசிக்கலாம்.

எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம்

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com