​அம்பிகையின் அருள்!

​அம்பிகையின் அருள்!
Published on

வி.ரத்தினா, ஹைதராபாத்

னது அண்ணி அம்பாளின் மீது மிகுந்த பக்தியும் ஈடுபாடும் கொண்டவர். தினமும் பூஜைகள் செய்து அம்மனைப் போற்றி பல பாடல்களை உருக்கமாகப் பாடுவார். அதுமட்டுமின்றி; எப்போதும் அம்பாளின் நினைவுடனே இருப்பார். அம்பாளின் அருகாமையை தான் பல முறை உணர்ந்திருப்பதாக வீட்டில் உள்ளவர்களிடம் பல முறை கூறிப் பரவசப்பட்டிருக்கிறார்.

தசரா பண்டிகையின்போது எங்கள் குடும்பத்தில் நடைபெற்ற அன்மிக அனுபவம் ஒன்றை சக வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். சாதாரண நாட்களிலேயே அம்மனை விசேஷமாக வழிபடும் எனது அண்ணி, அம்மனுக்கு விசேஷமான நவராத்திரி பண்டிகை என்றால் விடுவாரா? ஒவ்வொரு நாளும் அம்பிகையை விதவிதமான மலர்களால் அலங்கரித்து பூஜை செய்து வணங்கி வந்தார். அதுமட்டுமின்றி, வீட்டிற்கு பூஜைக்கு வரும் பெண்கள் அனைவரையும் அம்பாளாகவே பாவித்து அவர்களை உபசரித்தார்.

வராத்திரியின் கடைசி நாளான விஜய தசமியன்றும் அம்பிகைக்குத் திருப்தியாக பூஜை செய்து முடித்து, அனைவருக்கும் பிரசாதங்களை வழங்கும்போது அண்ணன் வேடிக்கையாக, "நிறைவாக பூஜை செய்து முடித்துவிட்டேன் என்று நீயாக திருப்திப்பட்டுக் கொண்டால் எப்படி? நீ செய்த பூஜையை அம்பாள் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டாள் என்பதை நாங்கள் எப்படி நம்புவது?" என்று கேட்டார். அதைக்கேட்ட அண்ணி, "நிச்சயம் எனது பூஜையை அம்பிகை மனதார ஏற்றுக்கொண்டதை இன்று எனக்கு உணர்த்துவார்" என்று உறுதியாகக் கூறினார்.

ன்று மாலை எனது அண்ணி வழக்கம்போல் அருகிலுள்ள கோயிலுக்குச் சென்றபோது துர்கை அம்மன் சன்னிதியில் ஓரளவே கூட்டம் இருந்தது. தாயாரை வணங்கிவிட்டுத் திரும்பும் சமயம், கருவறையில் அம்மனுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர் அண்ணியை மட்டும் சற்று நேரம் இருக்கச் சொல்லி, அவருக்குப் பூ, வெற்றிலைப் பாக்கு, பழத்துடன் ஒரு அழகான புடைவையையும் தாம்பாளத் தட்டில் வைத்துக் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்ட அண்ணிக்கு மெய் சிலிர்த்தது. தாம் அன்றாடம் வழிபடும் அன்னை, தாம் செய்த பூஜையில் திருப்தி அடைந்தாள் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை என்பதை உணர்ந்தாள். அதை மெய்ப்பிப்பது போலவே கருவறையில் தாயாரும் புன்னகையுடன் அவளைப் பார்த்து வீற்றிருந்தார். 'அம்மா' என்று அழைத்ததும் நம்மை அரவணைக்க ஓடோடி வருபவள் அல்லவா அம்பிகை!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com