உயிரோடிருந்தால் சுகிக்கலாம்!

உயிரோடிருந்தால் சுகிக்கலாம்!
Published on

ராஜி ரகுநாதன்

'ஜீவன் பத்ராணி பஸ்யந்து' என்கிறது வால்மீகி ராமாயணம். 'உயிரோடிருந்தால் சுகங்களைப் பார்க்கலாம்' என்பது இதன் பொருள். ஸ்ரீமத் ராமாயணம் சுந்தர காண்டத்திலுள்ள வாக்கியம் இது.

அவநம்பிக்கையையும் ஊக்கமின்மையையும் நம் சனாதன தர்மம் என்றுமே அங்கீகரித்ததில்லை. மேலும், வாழ்க்கை மிகவும் மிதிப்பு மிக்கதென்று உரத்துத் தெரிவிக்கிறது. அற்பமான சுகங்களுக்காக ஆயுளையும் உடல் வலிமையையும் வீணடிக்க வேண்டாமென்றும், இந்த உடல் தர்மச் செயல்களுக்காகக் கிடைத்துள்ள உயர்ந்த கருவி என்றும் போதிகிறது. நல்ல பழக்க வழக்கங்களோடும் நியம நிஷ்டையோடும் உடலை திடமாகவும் வலிமை மிக்கதாகவும் காத்துக்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஆரோக்கியமான உடலையும் பவித்திரமான மனதையும் சாதிப்பதே உண்மையான வாழ்க்கை என்று பல விதங்களில் எடுத்துரைக்கிறது.

ஆனால், பலரும் தற்காலிக உணர்ச்சிப் பெருக்கிற்கு ஆளாகி, வாழ்க்கையை அழித்துக்கொள்ள முயற்சிக்கின்றனர். அது தவறு என்று கூறுவதற்கு மேற்சொன்ன ஒரு வாக்கியம் போதும். இந்த உயிர் காக்கும், 'ஆப்த' வாக்கியத்தை மனதில் நிறைத்துக் கொண்டால் மிகவும் தைரியம் கிடைக்கும்.

'விநாசே பஹவோ தோஷா: ஜீவன் பத்ராணி பஸ்யந்து'

'மரணிப்பதில் பல குற்றங்கள் உள்ளன. உயிரோடிருந்தால் மங்களங்களைப் பார்க்கலாம்.' ஒரு கணம் எல்லாம் சூனியமாகத் தோற்றமளிக்கலாம். இனி, உயிர் வாழ்வதே வீண் என்றும் தோன்றலாம். ஆனால், அந்தக் கணம் நிலையானது அல்ல. எதிர்காலம் நம் கற்பனைக்கு எட்டாதது. அப்போது மீண்டும் நல்லது நடக்கலாம். அதற்குள் அவசரப்பட்டு மரணத்தை வரவேற்றால் எதிர்காலத்தில் நடக்கப்போகும் நன்மையைப் பார்க்கும் வாய்ப்பே இல்லாமல் போகும். இந்த ஒரு வாக்கியத்தில் எத்தனை நம்பிக்கையும் நேர்மறை சிந்தனையும் இருக்கிறதென்பதை கவனியுங்கள்.

வ்வளவு தேடியும் சீதையைக் கண்டுபிடிக்க முடியாமல் ஹனுமன்
ஏமாற்றமடைந்தார்
. 'இலங்கை முழுவதும் அலைந்து பார்த்தாயிற்று. இனி, தேட வேண்டிய இடமே இல்லை. என் முயற்சி வீணாயிற்று' என்று வருந்திய அனுமனுக்கு வாழ்க்கை மீது விரக்தி ஏற்பட்டது. அந்த நேரத்தில் கூட தீரன் நம்பிக்கையை வளர்த்துக் கொள்வான். அவருடைய நம்பிக்கை பலித்தது. அடுத்து, அசோகவனத்தைப் பார்த்ததும், சீதையை அடையாளம் கண்டதும் நடந்தது. 'பத்ரம்' என்னும் சுபமங்களம் கிடைத்தது.

எனவே, கவலை ஏற்பட்டவுடன் அந்த திகிலே முழு வாழ்க்கையும் என்றெண்ணி கவலையில் மூழ்கிவிடக் கூடாது. அந்த ஒரு கணம் மட்டுமே நிரந்தரம் என்று கற்பனை செய்துகொண்டு குழம்பக் கூடாது.

எதிர்காலத்தில் நன்மை விளையும் என்ற நம்பிக்கை மிக மிகத் தேவை. கடவுள் கொடுத்த உடலை அழித்துக்கொள்ளும் உரிமை நமக்கு இல்லை. அவ்வாறு செய்து கொண்டால் இறைவனின் ஆற்றலுக்கு இருப்பிடமான நமது உடலை அழித்துக்கொண்ட மகா பாவம் வந்து சேரும். அதற்குப் பரிகாரமே இல்லை. தன்னைத்தான் அழித்துக்கொள்ளும் உரிமை எந்த உயிருக்கும் இல்லை.

வாழ்க்கை துயரம் மிகுந்ததாக இருக்கலாம். ஆனால், மரணம் அதற்குத் தீர்வு அல்ல. வைராக்கியத்தோடு நற்செயல்களைச் செய்து ஞானம் பெறுவதே உண்மையான வாழ்க்கை.

'வைராக்கியம்' என்பதற்கு விரக்தி என்று சிறிய பொருளை மட்டும் கொள்வது சரியல்ல. தேவையற்ற பாசத்தை விடுவதே வைராக்கியம். நாம் பாசம் வைத்த பொருள் நம்மிலிருந்து வேறுபட்டது. அதனைப் பெறுவதற்கு முன்பும் நாம் இருந்தோம்; அது போனாலும் இருப்போம். 'நான்' என்பது மட்டுமே சாஸ்வதமானது.

பொறுமையோடு இருந்தால் சற்று நேரத்திலேயே நம் ஆலோசனையில் இருக்கும் தவறு நமக்கே புரிந்து விடும். மிகவும் மதிப்பு வாய்ந்த வாழ்வை ஞானத்தால் உயர்வாக்கிக் கொள்வதே மானுடனின் கடமை.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com