படித்தேன்; ரசித்தேன்!

படித்தேன்; ரசித்தேன்!

– அபர்ணா சுப்ரமணியம்

புகழை உயர்த்தும் வித்தை!

பொறுமை என்ற வாளை ஏந்தியவனால் எந்த விரோதியையும் கொல்ல முடியும். துளி கூட கடுஞ்சொற்கள் பேசாது இருத்தல், தீயவர்களைப் புகழ்ந்து வணங்காது இருத்தல்-இந்த இரண்டும் ஒருவனது புகழை உயர்த்தும் ஒன்றாகும். தான தருமம் செய்யாத பணக்காரன், கடவுள் பற்று இல்லாத ஏழை- இந்த இரண்டு பேரும் கழுத்தில் கட்டப்பட்ட கல்லோடு தண்ணீரில் விழுந்தவர்கள் போல அழிந்து போவார்கள்.

விதுர நீதி

இறைவனுக்காக நேரத்தை ஒதுக்குங்கள்!

நீங்களே உங்களுடைய சொந்தப் பகைவன். அது உங்களுக்கே தெரிவதில்லை. அமைதியாக அமர்ந்திருக்க நீங்கள் கற்றுக்கொள்வதில்லை. இறைவனுக்காக நேரத்தை ஒதுக்க நீங்கள் கற்றுக்கொள்வதில்லை. மேலும், நீங்கள் பொறுமையற்றவர்களாக இருப்பதுடன் சுவர்க்கத்தை உனடியாகப் பெற வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள். அதைப் புத்தகங்களைப் படிப்பதாலோ அல்லது சொற்பொழிவுகளைக் கேட்பதாலோ அல்லது தருமச் செயல்களைச் செய்வதாலோ பெற முடியாது. ஆழ்ந்த தியானத்தால் இறைவனுக்கு உங்களுடைய நேரத்தைக் கொடுப்பதால் மட்டுமே பெற முடியும்.

ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தா

பயத்தை விலக்கு!

யம் இருக்கும்வரை வியாதிகளும் இருக்கும். வியாதிகள் இருக்கும்வரை மருந்துகளும் இருக்கும். பயத்தை விடுத்து பக்தியில் மனதை செலுத்தும்போது, எந்தவித தொந்தரவுகளும் நம்மை பாதிக்காது.

நல்ல சம்பாத்தியம் இருந்தும், பணம் வீண் விரயமாகிக் கொண்டேயிருந்தால் தினமும் காலை வேளையில் பறவைகளுக்கு இனிப்பு, பிஸ்கெட்டுகள் வழங்க, வீண் விரயம் கட்டுப்படும்.

ஸ்ரீ மஹா பெரியவா

ஞானம் பெறுவோம்!

ஞானம் பெற்ற பிறகு இல்லறத்தில் வாழலாம். ஆனால், முதலில் ஞானம் பெற வேண்டும். இல்லறமாகிய தண்ணீரில் மனமாகிய பாலை வைத்தால் கலந்து விடும். ஆகவே, மனமாகிய பாலைத் தயிராக்கி, தனிமையில் வைத்துக் கடைந்தால் வெண்ணெயை எடுத்து, அதை இல்லறமாகிய தண்ணீரில் வைக்க வேண்டும். அப்போது வெண்ணெய் தண்ணீரில் கலக்காது.

பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணர்

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com