கொஞ்சம் சிரிங்க பாஸ்

கொஞ்சம் சிரிங்க பாஸ்
Published on

வாசகர் ஜோக்ஸ்                                                     ஓவியம் : ரஜினி

"தலைவர் பேசின பொதுக்கூட்டத்துல பெரிய கலாட்டா ஆயிடிச்சு."

"அப்புறம்… தடியடி நடத்தினாங்களா?"

"இல்ல… உண்டியல் குலுக்கினதும் கூட்டம் தெறிச்சு ஓடிப்போயிடுச்சாம்!"

–  வி.ரேவதி, தஞ்சை

நோயாளி : "உட்கார்ந்தா எழுந்துக்க முடியலை டாக்டர்."

டாக்டர் : "கிட்ட வாங்க. என்னால எழுந்துகிட்டா உட்கார முடியாது."

– தீபிகா சாரதி, சென்னை


தலைவர் :
"சில விஷயங்களை  ஊடகங்களுக்குச் சொல்ல முடியாதுய்யா!"

தொண்டர் : "அப்ப  பூடகமாவாச்சும் சொல்லுங்க தலைவா!"

– வி.ரேவதி, தஞ்சை

"அந்த டெய்லர் பெரிய லேடீஸ் ஸ்பெஷலிஸ்ட்!"

"இருக்கட்டும்… அதுக்காக
கடைக்கு 'ஜாக்கெட்ரி'ன்னா
பெயர் வைப்பாரு!"

– ப.சோமசுந்தரம், சென்னை

"உங்க வீட்டுல மூணு கடிகாரமும் மூணு விதமான டைம்  காட்டுதே… ஏன்?"

"நான்தான் சொன்னேனே… எனக்கு டைமே சரியா இல்லைன்னு!"

–  வி.ரேவதி, தஞ்சை

"அந்தப் படம் க்ரைம்
சப்ஜெக்ட்டா எப்படி?"

"ஆமாம்… டைரக்டர்
படத்தை கொடூரமா கொலை பண்ணிட்டாரு."

– தீபிகா சாரதி, சென்னை

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com