உலகெங்கும் தமிழோசை

உலகெங்கும் தமிழோசை
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

– ஸ்ருதி

சௌதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித தலங்களில் ஒன்றான மெக்காவில் இனி தமிழும் ஒலிக்கப்போகிறது.

இஸ்லாமியர்களின் புனித நாட்களில் ஒன்றான அரஃபா தினம் இசுலாமிய நாட்காட்டியில் பன்னிரெண்டாவது மாதமான துல் ஹஜ் மாதத்தின் 9ஆம் தேதியன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அரஃபா குன்றின் மீது முகமது நபிகள் தமது இறுதிப் பேருரையை நிகழ்த்திய நாளே அரஃபா நாளாக அனுசரிக்கப்படுகிறது.

இந்த  அரஃபா நாள் சொற்பொழிவின் மொழிபெயர்ப்பு நேரலையாக ஒலிபரப்பப்படுவது ஏற்கெனவே 10 மொழிகளில் நிகழ்ந்து வரும் சூழலில் தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளுக்கும் அது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இஸ்லாத்தின் மிதவாதம் மற்றும் சகிப்புத்தன்மைக்கான செய்தி இந்த உலகுக்கு அறிவிக்கப்படும் என்று மெக்கா மற்றும் மதீனாவில் உள்ள இரு புனித மசூதிகளுக்கான பொது தலைமையின் தலைவர் அப்துல் ரகுமான் அல் – சுதைஸ் தெரிவித்துள்ளார்

மெக்காவில் உள்ள அல் நிம்ரா மசூதியில் நிகழ்த்தப்படும் அராஃபத் நாள் சொற்பொழிவு கடந்த ஐந்தாண்டுகளாக அரபு தவிர்த்த உலகின் வெவ்வேறு சில மொழிகளில் மொழிபெயர்த்து ஒலிபரப்பப்பட்டு வருகிறது.ஏற்கெனவே அவ்வாறு ஆங்கிலம், பிரெஞ்சு, மலாய், உருது, பாரசீகம், ரஷ்ய மொழி, சீன மொழி, வங்க மொழி, துருக்கிய மொழி ஹவுசா ஆகிய பத்து மொழிகளில் மொழிபெயர்ப்புகள் நிகழ்ந்து வரும் சூழலில் இந்த ஆண்டு முதல் தமிழ், இந்தி, ஸ்பானிய மொழி மற்றும் ஆப்ரிக்க மொழியான ஸ்வாஹிலி ஆகிய மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த தமிழ் மொழிபெயர்ப்பை   இந்த ஆண்டு 20 கோடி பேர் கேட்பார்கள்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com