நாசர் சார்தான் என்னுடைய முதல் குரு

நாசர் சார்தான் என்னுடைய முதல் குரு
Published on

 – ஜான்ஸன்

அண்மையில்  லயோலா பொறியியில்   நடந்த கலை விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஜீவா கலந்து கொண்டு பேசும்போது,

சூர்யா போன்றோரை வளர்த்த இந்த லயோலா கல்லூரியில் இருப்பது எப்போதும் மகிழ்ச்சியான தருணமே.

நீண்ட நாட்களுக்குப் பிறகு இவ்வளவு கூட்டத்தை பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த சில வருடங்களாக திரையரங்குகளில் கூட இவ்வளவு கூட்டம் இல்லை. மேடையில் இருந்த அனைத்து பிரமுகர்களுக்கும் நன்றி. லயோலா கல்லூரியில் இருப்பது எப்போதுமே ஒரு மகிழ்ச்சியான தருணமே. பல ஆண்டுகளுக்கு முன் நான் இங்கு வந்துள்ளேன்.

எனது முதல் பட நேரத்தில் இங்கு வந்தேன். அப்போது எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. 'காக்க காக்க' படம் வெளியான சமயம் அது. கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் ஆகிவிட்டன.

உங்களிடம் இவ்வளவு அழகான கட்டமைப்பு உள்ளது. நான் இங்கு உள்ள கிரவுண்டில் கிரிக்கெட் விளையாடியுள்ளேன். பல ஜாம்பவான்களையும் சாதனையாளர்களையும் உருவாக்கிய கல்லூரி இது. சூர்யா சார், விஜய் சார், விஷால், உதயநிதி போன்று பலரை உருவாக்கிய இந்த கல்லூரியில் என்னை ஒரு விருந்தினராக அழைத்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

நாசர் சாரை பார்த்தவுடன் நான் பேச வந்ததை மறந்துவிட்டேன். அவருடன் இணைந்து பணியாற்றியதற்கு பெருமைப்படுகிறேன். அவர் தான் எனக்கு வழிகாட்டி. என்னுடைய முதல் படத்திலேயே எனக்கு மாமனாராக நடித்திருந்தார். அப்போது நான் ஒரு தயாரிப்பாளரின் மகனாகதான் அறிமுகமானேன். அவர் என்னைப் பார்த்து "தயாரிப்பாளர் மகன் என்றால் நடிக்க வந்து விடுவீயா? என்றும், ஏன் நடிக்க வந்தீர்கள்" என்றும் கேட்டார். அந்த எளிமையான கேள்விக்கு என்னிடம் இதுநாள் வரை பதில் இல்லை.

நீங்கள் எந்தத் துறைக்குச் சென்றாலும் அனைவருக்கும் ஒரு வழிகாட்டி மற்றும் ஒரு குரு தேவை. அந்த வகையில் எனக்கு நிறைய குரு கிடைத்தார்கள். அந்த வகையில் என் முதல் குரு என்று சொன்னால் அது நாசர் சார் தான். இன்று இந்த மேடையை அவருடனும் பகிர்ந்து கொண்டிருப்பதற்கு நான் பெருமைப் படுகிறேன். நீங்கள் எனக்கு கற்பித்த அனைத்து சிறந்த பாடங்களுக்கும் நன்றி சார். இந்த இடத்தில் உங்களுக்கு நன்றி சொல்வது ஒரு சிறந்த வாய்ப்பாக எண்ணுகிறேன்.

நான் பொறியியல் கல்லூரி மாணவனாக பல படங்கள் நடித்திருக்கிறேன். நீதானே என் பொன் வசந்தம், நண்பன், போன்ற படங்கள். " ஹொவ் டஸ் எ இண்டக்க்ஷன் மோட்டர் ஸ்டார்ட்ஸ்" காட்சி எல்லாம் இங்கு தான் நடித்தேன்.

நான் என்ஜினியர், டாக்டராக நடிப்பது அதிர்ஷ்டம் என்று சொல்வேன். ஆனால், நான்கு வருட அனுபவத்தைப் பெற்ற நீங்கள் என்னை விட அதிர்ஷ்டசாலிகள். நீங்கள் செய்ய வேண்டிய பணிகள், தேர்வுகள் இன்னும் பல இருக்கின்றது. அதனைத் தவிர நீங்கள் உருவாக்கும் நட்பு மற்றும் நினைவுகள் எப்போதும் மங்காது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com