அற்புதமாக கொண்டாடி அசத்தி விட்டார்

அற்புதமாக கொண்டாடி அசத்தி விட்டார்

Published on

உங்கள் குரல்

குழம்பிய மனநிலையில் இருந்த எனக்கு மகாசுவாமிகளின் அருளுரையை படித்த பிறகு மனத்தெளிவும், உறுதியும் கிடைக்கப் பெற்றேன்.
– கலைமதி, நாகர்கோவில்

சுஜாதா தேசிகன் வெளிநாடு குறித்து சுஜாதா அன்று கூறியதாக கடைசி பக்கத்தில் பதிவிட்டது இன்றும் பொருந்தும். இன்றைய இளைஞர்கள் பலர் பணம் / ஆசைக்கு ஆட்பட்டு வெளிநாடு சென்று விடுகின்றனர்.  இங்கே முதியவர்களான பெற்றோர்கள்  பணம் இருந்தும், உறவு / பற்றின்றி வாழ்க்கையை கடத்துகின்றனர்.
– மதுரை குழந்தைவேலு, சென்னை-600129

டைசிப் பக்கத்தில், 'சுஜாதாவும் வெளிநாடும் ' தலைப்பில், சுஜாதா தேசிகன், அந்த மகா எழுத்தாளரின் பிறந்த நாளை ஆத்மார்த்தமாக – அற்புதமாக கொண்டாடி அசத்தி விட்டார்! தனக்கு எதிராக வரும் பந்தினை, கனகச்சித லாவகத்துடன் அடித்து, பவுண்டரி – சிக்ஸரை அள்ளுவதில் தேர்ந்த வல்லுநர் அவர் என்பதை சொல்லாமல் சொல்லி, விளக்கியிருந்த நேர்த்திக்கு சபாஷ் சொல்லியே ஆக வேண்டும். இன்னொன்று…கல்கி இதழின் பொன்விழாவில், இடைவேளை நேரத்தில், பலாவில் ஈ மொய்த்த மாதிரி,  வாசகர்கள் அவரை சூழ்ந்து நின்று, கோஷம் போடாத குறையாய், குஷியாக உரையாடி, உற்சாகம் பெற்ற அந்த நாள் நினைவுகள் மனதில் மலர்ந்து, மகிழ்ச்சியைத் தந்தன.
– நெல்லை குரலோன், பொட்டல்புதூர்

'பிரம்படி வாத்தியார்' சிறுகதை படித்தேன். பள்ளி காலத்தின் பசுமையான  நினைவுகளை அசைப்போட வைத்தது . 'வலது கை செயலிழந்து விட்டால் இடது கையில் அடியுங்கள் அப்போதுதான் எனக்கு வலிக்கும் சார் ' என்று செல்லபாண்டி, கோபால் வாத்தியாரிடம்  கூறியது நெஞ்சை பிழிந்தது. கணக்கு வாத்தியார் கோபால் அன்றோடு பிரம்புகளை தூக்கி வீசியது நெகிழ வைத்தது. ' என் இதயத்தில் என்றும் வாழும் தெய்வம் ' என்று தனக்கு பாட புத்தகங்கள் , உடைகள் வழங்கியதோடு, வீட்டிற்கு வரவழைத்து பாடம் நடத்திய கோபால் ஆசிரியருக்கு செல்லபாண்டி நாளிதழில் கண்ணீர் அஞ்சலி செலுத்தியது கண்ணீரை வரவழைத்து .  அன்பு, ஒழுக்கம் , பணிவு, உழைப்பு  அறவாழ்க்கையின் தூண்கள்.

'இலக்கியத்தின் வாசல்கள் ' கட்டுரை படித்தேன்.  இந்தாண்டு புத்தக விழாவில் ஆன்மிக புத்தகங்கள் அதிகமாக வாங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.  அமரர் 'கல்கி'யின் நூல்கள் போன்றே புதுமைப்பித்தனின் நூல்களும் அதிகமாக வாங்கப்பட்டுள்ளது ' புத்தகங்கள்  வாசிக்கும் பழக்கம்' அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகிறது. கட்டுரையில் கல்கி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் படைப்புகளை ஆராய்ந்து விளக்கியுள்ளது தித்தித்தது. கல்கி தெய்வமாகி 65 ஆண்டுகள் ஆகியும் அவரது படைப்புகள் இன்றும் தலைமுறை தலைமுறையாக ஈர்க்கப்பட்டு வருவதற்கு காரணம் அவரது  இயற்கை நடையும் , அபரா கற்பனை வளமும், சமூகத்தின் மீது அவர் வைத்துள்ள அக்கறையும் தான் பற்பல ஆண்டுகள் கழித்தும் படைப்புகள் வாசிக்கபடுகிறது என்றால் அது தான்   இலக்கியம்!
– ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம் .

முகநூல்  பக்கத்தில் டாக்டர் மரியா பற்றி படித்ததும் கண்ணில் நீர் வந்தாலும் அவர்களின் தன்னம்பிக்கை அந்த கண்ணீரை துடைத்து விட்டது.  அவர்கள் மருத்துவமனையில் சாதனைகள் புரிய  வாழ்த்துகிறேன்.  சக்கர நாற்காலியில் அமர்ந்தாலும்  அவர்கள் உலகத்தைச் சுற்றி வந்து சாதனை புரிய முடியும் என்று புரிய வைத்தது. அருமையான முகநூல் பக்கம் பாராட்டுக்கள்.
– ராதிகா, மதுரை

 "பிரம்படி வாத்தியார்" சிறுகதை மனதை நெகிழ வைத்தது.  ஆசிரியர் அடித்தால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தங்களது நல்லதிற்குத்தான் என்று எடுத்துக் கொண்டதால்தான் அவர்கள் சமுதாயத்தில் ஒரு நல்ல இடத்தைப் பெற முடிந்தது. மிகவும் அருமையான சிறுகதை  படிப்பினையாக சொன்ன கல்கி இதழுக்கு பாராட்டுக்கள்.
 – பிரகதாநவநீதன், மதுரை

லையங்கத்தில் "காங்கிரஸ் காப்பாற்றப்படவேண்டும்" என்று மிகத் தெளிவாக சொன்ன கல்கிக்கு ஒரு சபாஷ். மக்களும் இதை எதிர்பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
–  திருவரங்க வெங்கடேசன் பெங்களுரு

ல்கியில் வெளிவந்து கொண்டிருக்கும் புத்தக அறிமுகம் பகுதியை படித்தேன். சுவாரஸ்யமாக இருக்கிறது.
– சச்சிதா, திருச்சி

டைசிப் பக்கத்தில் இன்று காணப்படும் பல விஷயங்களில் இழந்திருப்பேன் இந்த கடைசிப் பக்கம் உட்பட என்று அவர் எழுதியிருந்தது உண்மையின் உரைகல். வெளி நாடுகளில்  பல வசதிகள் இருந்தாலும்  உறவுகளை நாம்  இழந்தே வாழ்கிறோம் என்பதை அழகாகவும் தெளிவாகவும் சொன்னதை மனம் நினைத்து நினைத்து யோசிக்க வைத்தது.
– நந்தினி கிருஷ்ணன், மதுரை -6

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com