
"அந்த வீட்டுல ரெண்டு பொண்டாட்டிகளுக்குள்ள ஒரு விஷயத்துல ஒரே சண்டை!"
"எதுக்குடா?"
"எல்லாம் ஒற்றைத் தலைமை பிரச்னைதான்!
– ப.சோமசுந்தரம், கோவிலம்பாக்கம்
"டாக்டர், என் மாமியாரை நாய் கடிச்சுடுச்சு."
"நான் கால்நடை டாக்டர்மா…"
"தெரியும்… அதான் நான் நாயைக் கூட்டிக்கிட்டு வந்திருக்கேன் டாக்டர்."
– தீபிகா சாரதி, சென்னை
"என் மனைவி பிரஷர் குக்கர் மாதிரி…!"
"எப்படி?"
"குக்கர், விசில் கொடுத்து எச்சரிக்கிற மாதிரி என் மனைவியும் மூணு தடவை வார்னிங் கொடுப்பா…!"
– வி. ரேவதி, தஞ்சை
"ஆனாலும் நம் மன்னர் ரொம்ப மோசம்…"
"ஏன், என்னாச்சு?"
"மகாராணியோட சண்டை போடும் போதுகூட புறமுதுகு காண்பிச்சுக்கிட்டு ஓடறாரே."
– தீபிகா சாரதி, சென்னை
"உன்னை ஏன் கட்சியில் சேர்த்துக்க மாட்டேன்னு தலைவர் சொன்னார்?"
"நிழலுக்குக்கூட புழல் சிறை பக்கம் ஒதுங்கியதில்லைன்னு ஒரு வார்த்தை சொன்னேன்!"
– சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா
"கடந்த ஆறு மாசத்துல உங்க மனைவிக்கு கணிசமா கொலஸ்ட்ரால் குறைஞ்சிருக்கு சார்…!"
"பேச்சு, நடவடிக்கையெல்லாம் பார்த்தால் அப்படி தெரியலையே டாக்டர்?"
– வி. ரேவதி, தஞ்சை