வேட்டிகட்டி  காத்திருக்கும்  “தம்பிக்கு”  வாழ்த்துகள்

வேட்டிகட்டி  காத்திருக்கும்  “தம்பிக்கு”  வாழ்த்துகள்
Published on

"ஒரு நாய் கூட மீறாத சட்டம்"  என்ற எமர்ஜென்சி காலத்தைப்பற்றிய கட்டுரை சூப்பர்,  மிகையில்லாத சரித்திர பதிவு.
– தமிழரசு, ஈரோடு

ரு கட்சியை ஒவ்வொரு தலைவர் மறைவிற்கு பிறகு சின்னம் முடக்கம், பிளவு  என்று பல கட்சிகள் கண்ட போதிலும் அ.இ.அ.தி.மு.க. எம்.ஜி.ஆர்.. மற்றும் ஜெ. மறைந்த தருணத்தில் அக்கட்சி சந்தித்த நிகழ்வுகளைவிட ஒரு தேசிய கட்சி கைப்பாவையாக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருப்பது அதன் தொண்டர்கள் அதிக அளவில் யோசித்து வைத்திருப்பார்கள்.
– சி. கார்த்திகேயன், சாத்தூர்

ப்போதே அக்னிபாத் இருந்திருந்தால்… ஒரு நியாமான குரல்.
– சந்திரமெளலி, மதுரை

சுஜாதா தேசிகன் அவர்களின் "கழுதையும் கல்வெட்டும்" என்ற கடைசி பக்க செய்தியை நான் முதலில் படித்தேன். கடைசி பக்கத்திற்கு கல்வெட்டு எழுத்துக்களில் எப்படி எழுதப்பட்டிருக்கிறது என்பதை பார்த்தவுடன் தலை சுற்றினாலும் மனம்  சுற்றாமல் சந்தோஷப்பட்டேன் . தலைப்பில் கவிதை என்று கொடுத்து விட்டதால் கழுதை பற்றி ஒரு கதையை சொல்லியே ஆகவேண்டும் என்று அவர் சொன்ன நகைச்சுவை கதை ரசித்து படிக்க வைத்தது.
– நந்தினி கிருஷ்ணன், மதுரை

ல்லாம் பாபாவின் அருள் என்று சௌகார் சொன்னது பலருக்கும் நிகழந்திருக்கிறது.
– குலசேகர பாண்டியன், நெல்லை

ரமான படங்களை இயக்கி சமுதாயத்திற்கு கொடுக்கும் சீனு ராமசாமி  நிச்சயம்  ஒரு மாமனிதர்தான். "பெரிய ஹீரோக்களை தேடி  நான் போய் இருக்கிறேன். ஆனால், சில காரணங்களால் என் படத்தில் நடிக்க முன் வரவில்லை" என்று தான் பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்ககாதற்கான  உண்மையான காரணத்தை சொன்ன அவரின் நேர்மைக்கு ஒரு ராயல் சல்யூட்.
– உஷாமுத்துராமன், மதுரை

னதில்  நின்ற மனிதர்களை எழுத்திலும் ஓவியத்திலும் காட்டுவது படிப்பவர்கள் மனதில் நிற்கிறது.
– கமலா சடகோபன், திருச்சி

வ்வொரு வாரமும் அரசியல் நிகழ்வுகளை மட்டுமே தலையங்கத்தில் சாடும்  கல்கியில் மாறுதலாக செஸ் ஒலிம்பியாட் குறித்த தலையங்கம் வெளியாகியிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.  அதில் குறிப்பிட்டிருப்பது போல மிகவும் பெருமிதமான தருணம். வரவேற்க காத்திருக்கும் தமிழ் நாட்டு பாணி  வேட்டிகட்டி  காத்திருக்கும்  "தம்பிக்கு"  வாழ்த்துகள்.
– வண்ணை கணேசன், சென்னை

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com