வெள்ளை மாளிகையில் தீபாவளி

வெள்ளை மாளிகையில் தீபாவளி
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

வெள்ளை மாளிகையில் விளக்கேற்றி தீபாவளி கொண்டாடிய பைடன்

மெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 40 லட்சம் பேர் வசிக்கின்றனர். இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த ஆண்டு திபாவளி தினத்தன்று அவர்களுக்கு கிடைத்த இனிப்பான செய்தி அண்மையில்  அமெரிக்காவில் தீபாவளியை அரசு விடுமுறை தினமாக அறிவிக்கும் மசோதா, நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது என்பதுதான். அனேகமாக நிறைவேறிவிடும் வாய்ப்பிருக்கிறது.

ஒபாமா அதிபரானதிலிருந்து வெள்ளை மாளிகையில் தீபாவளி அதிகாரபூர்வமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் தனது மனைவி ஜில் பைடனுடன் சேர்ந்து குத்து விளக்கேற்றி தீபாவளியை கொண்டாடினார்.

இருவரும் வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,  "இருளில் அறிவு, ஞானம் மற்றும் உண்மை மறைந்து உள்ளது என்பதை தீபாவளியின் ஒளி நினைவூட்டுகிறது" என்றனர்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com