காதல் என்றால் ஒன்றும் கெட்ட வார்த்தை இல்லை.

காதல் என்றால் ஒன்றும் கெட்ட வார்த்தை இல்லை.
Published on

'ராஜய்யா  இட்லி வண்டி' சிறுகதை படித்ததில் புரிந்தது, இல்லாதவன் தான் இல்லாதவன் நிலை அறிந்து உதவிய உன்னதக் குணத்தை உணர்த்தியது.

சிறந்த பக்தன்  பரமாத்மாவை சரணடைய  பக்தி மார்க்கத்தில் பக்தி வழி எது என்பதை வழிகாட்டியது.
– மதுரை குழந்தைவேலு, சென்னை

காதலர் தினம் கொண்டாடவிருக்கும் இந்த வாரத்தில் "காதல் என்பது தூங்கும் மிருகம் மனசுக்குள் விழித்திருக்கும்" என்ற அழகான வரிகள் மூலம் காதலைப் பற்றி சொன்ன "காதலின் பொன் வீதியில்"   உல்லாசமாக நடந்து சந்தோஷமாக காதலை உணர்ந்தேன். காதல் செய்யுங்கள், காதலை கொண்டாடுங்கள், மகிழ்ச்சியைப் பரப்புங்கள்,  நம்மைச் சார்ந்து இருப்பவர்கள் மகிழ்ச்சியாக வைத்திருங்கள் என்று அழகாக காதலைப்பற்றி விரசம் இல்லாமல் சொன்ன "கல்கி" இதழுக்கு பாராட்டுக்கள்.
– ராதிகா, மதுரை

"இந்த வார "தலையங்கம்" மனதை உருக்கியது. ஆளுநர் ஆட்சியில் மாணவர்கள் எப்படி அல்லல்படுகிறார்கள் என்றும் "தமிழக அரசியல்வாதிகளுக்கு மாநில உரிமைகளுக்காக போராடும் உரிமை மட்டுமல்ல, தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை காக்கும் கடமையும் இருக்கிறது" என்று தைரியமாக புரியவைத்த கல்கி இதழுக்கு பாராட்டுக்கள்.
– பிரகதா நவநீதன், மதுரை

பாரதி அவர்கள் எழுதும் "தேவ மனோகரி" தொடர்கதை ஒவ்வொரு வாரமும் மிளிர வைக்கிறது.  தொடர்கதை படித்துக்கொண்டிருக்கும் எனக்கும் 'ரத்தினசாமி வீட்டில் என்ன நடக்குமோ' என்று மனோகரி போலவே படபடக்க வைத்தது. மிக அருமையான தொடர்கதை.
– நந்தினி கிருஷ்ணன், மதுரை -6

புள்ளிவிபரங்களை நம்பலாமா? என்ற கேள்விக்கு தராசாரின் பதில் அருமை. பல சமயங்களில் நம்மை குழப்பத்தில் ஆழ்த்தும் இந்த விஷயத்தை  தெளிவாக விளக்கி விட்டார்.
– ஶ்ரீரஞ்சனி, திருச்சி

மாலனின்  நூல் அறிமுகம் அருமை. ஒரு  நாவலின் கதைகளத்தில் நிகழ்ந்ததை சான்றுகளாக  சுட்டிக் காட்டி அதை அறிமுகம் செய்திருப்பது புதுமை.
– உமா மகேஸ்வர், பெங்களூரு.

'இந்த வாரம் இவர்' ஒவ்வொரு வாரமும் மிகப்பொருத்தமான  நபரின் படத்தை அழகான ஸ்கெட்ச் ஓவியத்துடன் வெளியிடுகிறீர்கள். ஓவியங்கள் பேசுகின்றன.
– கண்ணன், மதுரை

'ஒரு கலைஞனின் வாழ்க்கையில்' மம்மூட்டி  எழுதும் தொடர் கட்டுரையில் அவர் விவரிக்கும் காட்சிகள் திரைப்படம் போல கண்முன்னே வருகிறது. ஒவ்வொன்றும் ஒரு சிறுகதை போல் இருக்கிறது. அவர் இவ்வளவு நல்ல எழுத்தாளர் என்பது என்போன்றவர்களுக்கு இத்தனை நாள் தெரியாது.

ஹைதராபாத்தில் நிறுவப்பட்டிருக்கும் இராமானுஜர் சிலை குறித்த கட்டுரையில் பல புதிய தகவல்கள்.  ஆனால் 'சமூக நீதி காத்த தமிழன்' என்று சொல்லுவது  சரியில்லை. இன்றைக்குப் பேசப்படும் அரசியல் சமூக நீதியை அவர் அன்று சொல்லவில்லை. அவர்களின் தர்மத்தைக் கடைப்பிடிப்பதை எல்லோரும் தவறாது செய்ய வேண்டும் என்பதைத்தான்  வலியறுத்தினார்.
– இராகவன், ஶ்ரீரங்கம்

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com