ஒரு நல்ல தொடர்கதை , எது என்பதை எவ்விதம் தீர்மானிப்பது? தொடர்கதைகள் என்பவை அளவு சார்ந்தவை அல்ல; வடிவம் சார்ந்தது. கதை நடந்து செல்லும் அமைப்பு, பாத்திர வார்ப்பு, அவற்றின் வளர்ச்சி அல்லது தேய்வு, இவை ஒரு நாவலில் வலுவாக அமைந்து இருக்கும். சம்பவங்கள் இருக்கலாம். ஆனால் அதை காட்சியாக நம் முன்னே எழுத்தில் காட்டும் லாவகம், வேகம், தான் அந்தத் தொடர் நம் நினைவில் நிறுத்துகிறது. தொடர்கதைகள் என்பது தன் விரிவால் ஒரு முழு வாழ்க்கையைச் சொல்லக்கூடியது, சில இடங்களில் தன் குறுக்கத்தால் கூர்மையாகத் தைக்கவும் கூடியது என்கிறார் ஜெயகாந்தன்..ஒரு நாவலைத் தொடராக வாரந்தோறும் தொடர்ந்து படிக்கும்போது வாசகர்கள் அதனோடு ஒன்றிவிடுகிறான். பல இடங்களில் தன்னையும் தான் அறிந்தவர்களையும் அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள்..அப்படி அமைந்த ஒரு தொடர் கதைதான் திருமதி பாரதியின் "தேவ மனோகரி.".ஒரு கல்லூரியில் திசைமாறிய பாத்திரங்களுடன் தொடங்கி மெல்லப் பயணிக்கிறது. பாத்திரங்களின் படைப்புகளிலும் சூழலைக் காட்டுவதிலும் யதார்த்தமிருக்கிறது. ஒரு துணிவான பெண் தன் வாழ்க்கையை எதிர்கொள்ளும் கதையை. தனக்கே உரிய எளிய, ஆனால் ஆழமான நடையில் இந்தத் தொடர் கதையில் சொல்லுகிறார்.