
"நான் பேசப்போற கூட்டத்துக்கு சேர் எல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சா?"
"எதுக்குத் தலைவரே பணத்தை வேஸ்ட் பண்ணணும்? உங்க வீட்ல இருந்து நாலு சேர் கொண்டு வந்திட்டேன்!"
– சி.ஆர்.ஹரிஹரன், ஆலுவா, கேரளா
"பாட்டாளிகளின் சின்னம், ஏரோப்ளேன்.!"
"விவசாயிகளின் சின்னம், ஏரோப்ளேன்!"
"நெசவாளிகளின் சின்னம், ஏரோப்ளேன்!"
– வி.ரேவதி, தஞ்சை
"கபாலி, உன் மனைவியோட பிறந்த நாளுக்குப் புதுப் புடைவை எடுக்கலையா?"
"எங்கபா எடுக்கறது… இப்போ கண்காணிப்புக் கேமரா இல்லாத ஜவுளிக்கடையே இல்லையே!"
– சி.ஆர்.ஹரிஹரன், ஆலுவா, கேரளா
"ரசம் பிரமாதமா இருக்கே… யார் பண்ணியது?"
"என் மனைவியும், என் அம்மாவும் 'சமரசம்' ஆகி பண்ணியது."
– ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்
"ஆமாம்… சினிமாவை விட அரசியலுக்கு நடிப்புத் திறமை பல மடங்கு வேணுமாம்!"
"பேட்டி எடுத்த அந்த ரிப்போர்ட்டர் தலைவர்கிட்ட ஏதோ ரகசியமா கேட்டவுடன் தலைவர் ஏன் அப்படி கடுப்பாயிட்டாரு?"
" 'புழல், வேலூர், பாளையங்கோட்டை…
இந்த மூணு ஜெயில்ல, களி ருசியா இருந்தது எந்த ஜெயில்ல'ன்னு கேட்டுட்டானாம்!"
– சி.ஆர்.ஹரிஹரன், ஆலுவா, கேரளா