85 நிமிடங்களுக்கு அமெரிக்க அதிபர்

85 நிமிடங்களுக்கு அமெரிக்க அதிபர்
Published on

– ஹர்ஷா

மெரிக்க அரசியல் வரலாற்றிலேயே மிக வயதான அதிபராகப் பொறுப்பேற்றவர் ஜோ பைடன்தான். அவர் கடந்த 2019 டிசம்பரில் முழு உடல் பரிசோதனை செய்து கொண்டார். அப்போது, அவர் நல்ல உடல் நலத்தோடு இருப்பதாகவும், அதிபர் பொறுப்பில் பணியாற்றும் ஆரோக்கியத்தோடு இருப்பதாகவும் அவரது மருத்துவ அறிக்கைகள் கூறின.

அண்மையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது 79ஆவது பிறந்த நாளன்று மாலை வழக்கமான உடல்நலம் சார்ந்த மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டபோது, சிறிது நேரம் தன் அதிபர் அதிகாரத்தை, கமலா ஹாரிஸுக்கு வழங்கினார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 57 வயதான கமலா ஹாரிஸ், கடந்த நவம்பர் 19 அன்று  85 நிமிடங்களுக்கு அதிபர் பொறுப்பில் இருந்தார்.

"இப்படிச் செய்ய வேண்டியது  அவசியமா?" என்ற கேள்விக்கு அமெரிக்கச் சட்டம் பதில் சொல்லுகிறது.  "அதிபரின் மரணத்தைத் தொடர்ந்து துணை அதிபர்  அதிபராகப் பதவி ஏற்க வேண்டும்" என்று சொல்லும் அந்த சட்டம், "அமெரிக்க அதிபர் மருத்துவ மனைக்குச் சென்று மயக்க மருந்து ஏற்று      சுய நினைவை இழக்க  வேண்டிய நிலை நேர்ந்தால்  அமெரிக்க அதிபர் இம்மாதிரி செய்ய முடியும்" என்கிறது.  அதுதான் அது அன்று நடந்தது.

கமலா ஹாரிஸ்தான் அமெரிக்க அதிபர் அதிகாரத்தைப் பெற்ற முதல் பெண். கமலா ஹாரிஸ், வெள்ளை மாளிகையின் மேற்கு வளாகத்தில் உள்ள துணை அதிபர்  அலுவலகத்திலிருந்துக்கொண்டே, அதிபர்  பணிகளையும் அன்று  மேற்கொண்டார்.

மருத்துவ பரிசோதனை எல்லாம் முடித்துக் கொண்டு ஜோ பைடன் சிரித்த முகத்தோடு வெள்ளை மாளிகைக்குத் திரும்பினார். "நான் நன்றாக இருக்கிறேன்" என்று டி.வி.யில் பேசினார். "சிகிச்சைக்குப் பிறகு
அதிபர் ஜோ பைடன் ஆரோக்கியமாக இருப்பதாகவும், அவர் தனது கடமைகளைச் செய்யும் திறனோடு இருக்கிறார்" என்றும் பைடனின் மருத்துவர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து அதிபர் தன் பணிகளைத் தொடர்ந்தார்.

அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அது தொடர்பான செயல் முறையில் தற்காலிகமாக அதிபரின் அதிகாரங்கள் பரிமாற்றப்படுவது இதற்கு முன்பும்  நடந்திருக்கிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் 2002 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் இதுபோல அதிகாரத்தைப் பரிமாற்றம் செய்துள்ளார்.

பட மூலாதாரம்,EPA

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com