இது என் குழுந்தைகளுக்கான பரிசாக இருக்கும்

இது என் குழுந்தைகளுக்கான பரிசாக இருக்கும்
Published on

– ஹர்ஷா

2018 ஆம் ஆண்டு காஷ்மீரின் குல்காமில் பயங்கரவாதிகளுடன் சண்டையிடும்போது நாயக் தீபக் நைன்வால் காயமடைந்து மருத்துவமனையில் 40 நாட்கள் உயிருக்குப் போராடிய பின் இறந்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது மனைவி ஜோதி நைன்வால் இந்திய ராணுவத்தில் சேர்ந்திருக்கிறார். 32 வயதான அவர் தனது குழந்தைகளை குடும்பத்துடன் விட்டுவிட்டு இந்த ஆண்டு தொடக்கத்தில் சென்னையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் பயிற்சியைத் தொடங்கினார். சனிக்கிழமையன்று, பாஸ்சிங் அவுட் அணிவகுப்பின் போது அவர் இந்திய இராணுவத்தில் லெப்டினன்டாக நியமிக்கப்பட்டார்.

"என் கணவர் எங்களுக்கு ஒரு பெருமையான வாழ்க்கையைப் பரிசளித்தார்… நாங்கள் அதை முன்னெடுத்துச் செல்ல முயற்சிக்கிறோம். என் கணவரின் படைப்பிரிவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஒவ்வொரு அடியிலும் என்னுடன் நின்று மகளைப் போல நடத்துகிறார்கள். துணிச்சலான பெண்களுக்கு, நான் 'ஜன்ம' (பிறப்பு)க்காக அல்ல, 'கர்ம' (செயல்)க்காக தாயாக மாற விரும்புகிறேன், நான் எதற்காக வாழ்கிறேனோ அது என் குழந்தைகளுக்குப் பரிசாக இருக்கும்" என்கிறார் ஜோதி.

முதுகுத்தண்டு மற்றும் மார்பில் துப்பாக்கியால் சுடப்பட்ட தீபக் 40 நாட்களாக மருத்துவமனையில் போராடி வந்தார்.  சுடப்பட்டதால் அவர் தனது கீழ் உடலில் உள்ள அனைத்து உணர்வையும் இழந்தார். டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அவரது வாழ்க்கையின் கடைசி 40 நாட்களில்,   ஒருமுறை அவர் என்னிடம்   இராணுவத்தில் சேரும்படி கேட்டார். அவரது கடைசி ஆசையை நிறைவேற்றும் வாய்ப்பை வழங்கிய இந்திய ராணுவத்திற்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

ராணுவ அதிகாரிகளின் முதல் பயிற்சியின் கடைசி நாள் அவர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான நாளாகும்.  அன்று அவர்கள் இந்திய ராணுவத்தில் அதிகாரப்பூர்வமாக இணைபடும் நாளாகும். அந்த அணிவகுப்பைப் பார்வையிட பயிற்சி கேப்டன்களின் பெற்றோர் அழைக்கப்படுவர். ஜோதி தனது இரண்டு குழந்தைகளும் பங்குகொள்ள அனுமதி வேண்டிப் பெற்றிருந்தார். ராணுவச் சீருடை போல உடையணிந்து வந்து அந்த குழந்தைகள் அம்மாவை பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

சென்னை அதிகாரிகள் பயிற்சி மையம் இதுவரை காணாத காட்சி இது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com