‘கல்கி’  என்றாலே கண்ணியம்

‘கல்கி’  என்றாலே கண்ணியம்
Published on
உங்கள் குரல்

"தீபாவளி சிறப்பிதழாக" வந்த "கல்கி" இதழ் மிகவும் அருமை.
"தீபாவளி பூஜை எப்படி செய்ய வேண்டும்?" என்ற விளக்கம் படித்ததும் மெய்சிலிர்த்தது. 'தீபாவளி பூஜை முறையும்,  நாணய வழிபாடு,
நரக சதுர்த்தி' என்று ஒவ்வொன்றையும் விளக்கமாக சொல்லி  தீபாவளியின் மகத்துவத்தை புரிய வைத்த கல்கி இதழுக்கு பாராட்டுக்கள்.

– நந்தினிகிருஷ்ணன், மதுரை

ஜினி, 'ஸ்ரீராகவேந்திரர் பற்றி படம் எடுக்கிறேன்' என்றதுமே, அதில் ரஜினி ராகவேந்திரராக நடிக்காமல் இருந்தால் சரி என ஒரு வார இதழ் எழுதியது.

இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் பட அனுபவம் பற்றி, நேரடியாகவே என்னிடம் தெரிவித்த போதிலும் ஒரு வாசகனாக இங்கே படிக்க, காத்திருக்கிறேன்.

படம் வெளியாகி முதல் சுற்று சரியாக போகாத போது, மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் தனக்கும் அந்த அனுபவம் ஏற்பட்டதாக, ரஜினிக்கு ஆறுதல் சொன்னதை இன்னொரு வார இதழ் வெளியிட்டது.

– ஸ்ரீகாந்த்,  திருச்சி

 "பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம்" என்ற பாரதியார் வரிகளுடன் தொடங்கிய "தலையங்கத்தை" படித்ததும் அந்த பாரதியே எதிரே நின்று கல்வியைப் பற்றி பேசுவதுபோல இருந்தது. "ஆலயங்களை நிர்வகிப்பது வேறு; ஆலயங்களின் சார்பில் நடத்தப்படும் கல்விப்பணிகளை நிர்வகிப்பது வேறு"  என்றும், இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை அரசு உணர வேண்டும் என்றும், அரசு செய்ய வேண்டிய கடமையை உணர்த்திய கல்கி இதழுக்குப் பாராட்டுக்கள்

– உஷாமுத்துராமன், கோவை

ரசுப் பேருந்தில் முன்னறிவிப்பு இன்றி முதல்வர் பயணம் செய்தது போல 'நீண்ட தூரம் செல்லும் அரசுப் பேருந்திலும் பயணித்து உண்மையான நிலவரத்தை அறிய வேண்டும்' என்று தராசார் கூறியுள்ள பதில், 'பயணிகளின் அறிவிப்பாகும் '. பயணியுங்கள் எங்கள் முதல்வர் அவர்களே…. 'விடியலை நோக்கி' !

–  ஆ

கால மாற்றத்தின் யதார்த்தத்தை உணர்ந்து,  பண்டிகை கொண்டாட்டங்களின் போது பசுமை பட்டாசுகளை வெடிக்க வைத்து  மாசுகள் உருவாகுவதை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய 'சிறப்புக் கட்டுரை' விளக்கம் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியதாகும். மேலும்,  தீபாவளி சிறப்பாக கொண்டா வழங்கிய 'டிப்ஸ்' (மது வேண்டாம் உட்பட ) சூப்பர்.

–  ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

'ஆலயங்களை நிர்வகிப்பது வேறு; ஆலயங்கள் சார்பில் நடத்தப்படும் கல்விப்பணிகளை  நிர்வகிப்பது வேறு' என்பதை தலையங்கத்தில் அழுத்தம் திருத்தமாக விளக்கிய 'கல்கி'யின் தலையங்கம்  மூலம் 'கல்கி'  என்றாலே கண்ணியம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்றது. கல்வி என்பது எல்லாருக்கும்  பொதுவானது என்பதை  தலையங்கத்தில் பட்டைத் தீட்டியிருப்பதை படித்து  அமரர் கல்கி.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்  பெருமை கொள்வார் . பொதுவுடமை விதைகளை விதைத்தவர்களுக்கு  புது நம்பிக்கை ஊற்றெடுக்கும்.

–  நெல்லை குரலோன்,  நெல்லை

எஸ்.ராமனின் 'லொள்ளுக்கு பின்னால ஒரு லவ்வு' படித்தபோது குபீர் குபீரென்று சிரிப்பு வந்தது. அமெரிக்காவில் தெரு நாய்கள் இல்லை. ஆனாலும் நான் இந்தியா வந்து தெரு நாய்களை பார்க்கும்போது கூட இந்த நகைச்சுவை கதை நிச்சயம் என் நினைவுக்கு வரும்!

-சின்னஞ்சிறு கோபு, சிகாகோ.

'அமெரிக்காவில் எப்படி தீபாவளி கொண்டாடுகிறார்கள்' என்று அமெரிக்க தீபாவளி பக்கங்களைப் படித்ததும் புரிந்தது.  நான்கு சோன்களாக பிரிக்கப்பட்ட அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்ற "கல்கி" இதழுக்கு தீபாவளி வாழ்த்துகளுடன் பாராட்டுகளும்.

– ராதிகா, மதுரை

டைசிப் பக்கத்தில் வந்த சுஜாதா தேசிகன் அவர்களின் தீபாவளி பற்றிய வரிகளைப் படித்ததும் சின்ன வயதில் தீபாவளி கொண்டாடிய ஞாபகங்கள் வந்து போயின. "ஹாப்பி தீபாவளி" என்று வாழ்த்துகள் சொல்வதிலும் வார்த்தைகள் குறைந்து விட்டதால், 'தீபாவளி கொண்டாட்டங்களும் மகிழ்ச்சியை குறைத்து விட்டதோ' என்று யோசிக்க வைத்த அருமையான கடைசிப்பக்கம். அவருடைய பாட்டியைப் பற்றி படித்ததும் எங்களுடைய பாட்டியுடன் நாங்கள் இருந்த காலங்கள் நினைவுக்கு வந்தன. அருமையான ரசிக்க வைத்த கடைசிப்பக்கம் தீபாவளி வாழ்த்துகள்!

–  பிரகதாநவநீதன், மதுரை

து ஒரு கனாக்காலம் மிக சுவாரஸ்யமான ஆச்சரியமான தகவல்களுடன் வாரம் தோறும் மிளிர்கிறது.

– சுஹாஸ்னி, ஶ்ரீரங்கம்

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com