
முடிச்சுக் கயிற்றின்
முத்த உறவு விடுபட
உற்சாகத் துள்ளலுடன்
தாய்மடி மோதி
பாலுண்ணுகிறது கன்றுக்குட்டி!
இடையிடையே
தாயின் நாவருடல்
இதமான சுகம் தர
மீண்டும் மடி கிறக்கம்
தேடியோடுகிறது கன்று!
சற்று நேரத்தில்-
இளைத்த வயிறு
ஊதிய பலூனாய்
பெருக்கிறது
யூரியா தின்று கொழுத்த
பாலக்கீரை போலவே!