கவிதைத் தூறல்

கவிதைத் தூறல்
Published on

பூமி
இடி, மின்னல்,
மழையுடன்
மனிதர்களையும்
தாங்குவேன்
பொறுமையின் சின்னம்
பூமி!

*****

சோம்பேறி
பொறுப்பை
தட்டிக்கழிக்கும்
சோம்பேறிக்கு
பிடித்த வாசகம்,
'மரம் வைத்தவன்
தண்ணீர் ஊற்றுவான்!'

*****

தமிழ்
உறவு
துறவு
ஒரு எழுத்து மாறி
வாழ்க்கைப் பாடத்தையே
புரட்டிப் பார்க்கிறது
தமிழ்!
எஸ்.பவானி, திருச்சி

——————–

தனிமை
தனிமைப்
படுத்தப்பட்டார்
கோயிலுக்குள்
கடவுள்
ஊரடங்கு காலம்!

*****

நினைவு
மிட்டாய் நினைவில்
கைசூப்பும் குழந்தை
மாதக் கடைசி!

*****

உதவி!
தலைமகன்
தராததை
தபால்காரர் தருகிறார்
முதியோர் உதவித் தொகை!
நிலா, திருச்சி

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com