எம். ஜி. ஆரின் அரசியலா? நடிப்பா? உங்களை மிகவும் கவர்ந்தது எது? 

எம். ஜி. ஆரின் அரசியலா? நடிப்பா? உங்களை மிகவும் கவர்ந்தது எது? 
Published on
மங்கையர் மலர்  வாசகீஸ் FB பகிர்வு!

சம்பத் அண்ணசாமி 
எம்.ஜி.ஆரின் நடிப்பில் ஒரு ஒரிஜினாலிட்டி‌ இருந்தது. தனக்கென ஒரு பாணியை ‌அமைத்துக்கொண்டார்.அவரது அரசியல் அப்படியல்ல. திரைப்பட‌புகழ் என்ற அஸ்திவாரம் பலமாக இருந்ததால் அரசியலிலும் புகழ் பெற முடிந்தது.

அன்பு பாலா 
எம்.ஜி.ஆரின் அரசியலை விட என்னைக்கவர்ந்தது அவருடைய நடிப்புதான். அதுவும் கன்னடக்கிளி சரோஜா தேவியுடன் அவர் நடித்த படங்கள் ஓஹோ! மேலும் படத்தில் சிகரெட் பிடிக்க மாட்டார். பெண்களை மதிக்கும் விதமாக அவருடைய படங்கள் இருக்கும். அப்போது மக்கள் அவரை நடிகராக பார்க்காமல் உண்மையான ஒருவரையே பார்த்தார்கள்.

கே.ஆனந்தன் 
வர் அரசியலுக்கு வர காரணமே நடிப்பு மூலம் மக்களை கவர்ந்ததுதான். அவரின் அரசியலை விமர்சிப்பவர்கள் கூட நடிப்பை விமர்சிக்க மாட்டார்கள் . தனக்கென்று தனி பாணியையே உருவாக்கிய அவரின் நடிப்புதான் எம்ஜிஆரிடம் கவர்ந்தது.

உஷா முத்துராமன் 
ரசியலில் அவருடைய ஒவ்வொரு செயலும் அவருக்கு ஒரு வெற்றிக்கனியை கொடுத்ததால் அவர் எல்லோர் மனதிலும் இதயக்கனியாக நிறைந்து இருப்பது உண்மை. எனக்கு பிடித்தது அவருடைய அரசியல் தான்.

நளினி ராமச்சந்திரன் 
எம்.ஜி.ஆரின் நடிப்புதான் என்னை மிகவும் கவர்ந்தது. அவர் ஸ்டைலே தனி. பலரும் அவரை இமிடேட் செய்தாலும் அவருக்கு நிகர் அவர்தான். அவர் நடித்த  படங்களில் வந்த பாடல்கள் அனைத்தும் நல்லதொரு கருத்தினை மக்களுக்கு உணர்த்தும் படியாகத்தான் இருந்தது.  உதாரணத்திற்கு – தூங்காதே தம்பி தூங்காதே, நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி… இன்னும் பல பாடல்கள் இன்றும் மனதை விட்டு அகலவில்லை. இறுதிவரை மக்கள் திலகமாகவே வாழ்ந்தார் …வாழ்ந்துகொண்டும் இருக்கிறார்….

ஜெயா சம்பத்  
எம். ஜி. ஆரின் திரை பிம்பம் மக்களிடம் செல்வாக்குப் பெற்றது. பெற்ற தாயைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். சிகரெட் பிடிக்கக் கூடாது போன்ற நல்ல விஷயங்களைத் தன் திரைப்படம் மூலம் போதித்தார். தாய்மார்கள் அவரை " நம்ம வீட்டுப் பிள்ளை " என்று பார்த்தார்கள்.

பாமர மக்கள், சைக்கிள் ரிக்ஷா ஓட்டுபவர்கள் போன்ற அடித்தட்டு வர்க்கத்தினர் எம். ஜி. ஆர் திரைப்படம் என்றால், முதல் நாள், முதல் ஷோ வே பார்த்து விட வேண்டும் என்று நினைத்து தியேட்டர்களுக்குப் படை எடுத்தார்கள். அவரது நிறையப் படங்கள் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அவரது பீரியட்டில், மக்களின் மனம் கவர்ந்த ஹீரோவாகவே அவர் திகழ்ந்தார்.

ராதா நரசிம்மன்
ரசியல். அவர் நடத்திய அரசியலில்  ஆர்ப்பாட்டம், பொய், ஏமாற்றுதல் இருக்கவில்லை என்பது என் கருத்து.

வசந்தா கோவிந்தன் 
வருக்கு நடிப்பது சுலபம்! அரசியலில் நடிக்கத் தெரியாது! நடிக்கவும் முடியாது!

ராஜேஸ்வரி 
வர் நடிப்பிலும் உண்மையான அரசியலைச் சொன்னார், அரசியலிலும் நடிக்கவில்லை, அதுதான் அவரது வெற்றிச் சிறப்பு!

ஜெயந்தி நாராயணன்
டிப்பு. அவரின் குணம். மனம் இதையே படத்தில் வெளிப்படுத்தினார். அது இயற்கை யாக இருந்தால் அனைவரையும் கவர்ந்தது.

ஶ்ரீவித்யா பிரசாத் 
டிப்பு. அவரின் உடை உடுத்தும் பாங்கு மற்றும் உடல் பாவங்கள் அப்பப்பா… அரங்கம் அதிரும். அதேபோல் அவரின் நடனம்.  கால்கள் பாடும் பாடலுக்கேற்றபடி இதுவரை எந்த நடிகரும் அப்படி ரசனையோடு ஆடியது கிடையாது.

ராதிகா ரவீந்திரன் 
எம்.ஜி.ஆர். திரையுலகில் மட்டுமன்றி அரசியலிலும் ஒரு நாயகனாக வலம் வந்து தனக்கென ஒரு முத்திரை பதித்தவர். அவரது அரசியலே என்னைக் கவர்ந்தது. எந்த கட்சிக்கு எதிராக தனது புதுக்கட்சி ஆரம்பித்தாரோ, தன் ஆயுள் முடியும் வரை அந்தக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வராதபடி அரசியலில் ஆதரவையும், செல்வாக்கையும் பெற்றவர்.

அவர் மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் அவர் பெயரையும், படத்தையும் உபயோகித்து சில கட்சிகள் பிரச்சாரம் செய்து வாக்குகள் பெறும் அளவுக்கு தனக்கென ஒரு வாக்கு வங்கியைப் பெற்றிருக்கிறார். அவர் அறிமுகப்படுத்திய மாணவ ஊட்டச்சத்து, இலவச சீருடை, காலணி போன்ற திட்டங்கள் அடுத்த தலைமுறையினரையும் கவர்ந்தது. திரையில் நடிகனாக நடித்துக் காட்டிய சில நல்ல செயல்களை அரசியல் தலைவராக இருந்துதான் செயல்படுத்திக் காட்டினார்.

சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்
எம்.ஜி.ஆர் என்று சொன்னால் உடனே என்னுடைய நினைவுக்கு வருவது அவருடைய நடிப்பு தான். பிறகுதான் அவா் ஒரு முதலமைச்சர் என்ற நினைவு வரும். எனக்கு பிடித்தது மக்கள் திலகம் நடிகர் எம்.ஜி.ஆர். அவா்கள் தான்.

மகாலக்ஷ்மி சுப்ரமணியன்
திரைத்துறையின் மூலம் அவர் பெற்ற புகழை,செல்வாக்கை அரசியலில் திறமையாக பயன்படுத்திக் கொண்டார். அரசியலை விட அவரது நடிப்பே என்னைக் கவர்ந்தது. அவரது படங்கள், நல்ல பாடல்கள்,க ருத்துக்கள், வசனம் என அனைத்தையும் கொண்டிருக்கும். அக்காலத்தில் திரைத்துறை ஆரோக்யமாக இருந்தது. சமுதாயத்திற்கு அத்யாவசியமான பல நல்ல கருத்துக்களை சொன்னது. திரையில் நடித்ததைப் போலவே நிஜத்திலும் கொடை உள்ளத்தோடு,எ திர்காலத்தை திட்டமிட்டு வெற்றி பெற்றார். அன்றும்,இன்றும் ,என்றும் அவருக்கு நிகர் அவரேதான்.

ஜெயலட்சுமி வெங்கடாச்சலம்
ன்னை மிகவும் கவர்ந்தவர் நடிகரான எம்ஜிஆர் தான். கட்டான உடல், கச்சிதமான நடிப்பு, கண்ணையும் கருத்தையும் கவரும் நடை உடை பாடல் ஆடல், பெண்ணையும் மண்ணையும் போற்றும் கதை அமைப்பு குறிப்பாக தாயை நேசித்தல். காலம் பல கடந்தும் மனதில் நிற்கும் மூன்றெழுத்து மந்திரம் எம்.ஜி.ஆர் .

ஶ்ரீ வித்யா 
வருடைய நடிப்புதான். காஞ்சித்தலைவன் படத்தில் மன்னராக அத்துணை பொருத்தமாக கம்பீரமாக இருப்பார். மன்னர் உடையில் அவரைப் பார்த்து நடிகர் சந்திரபாபு ஒருமுறை 'Looks like a Greek God' என்று வியந்தாராம்.

'அன்பே வா' திரைப்படத்தில் அப்போதைய ஹிந்திப் படங்களைப் போல மிகவும்இயல்பாக நடித்திருப்பார். எம்.ஆர்.ராதாவால் சுடப்படுவதற்கு முந்தைய அவருடைய குரலை கருப்பு வெள்ளைப் படங்களில் கேட்டிருக்கிறேன். நல்ல குரலில் நல்ல தமிழைப் பேசியிருப்பார். நகைச்சுவையும் நன்றாக வரும்.

லலிதா ஷண்முகம் 
எம் ஜி ஆர் சினிமாவில் மனிதனாக வாழ்ந்து காட்டினார். தர்மநெறிகளை உணர்த்தினார். ஒரு படத்தில் மட்டுமே மது அருந்தும் பாத்திரமாக நடித்தார். அதிலும் மதுவின் தீமைகளை எடுத்து உரைத்தார். ஏராளமான ரசிகர்கள் இன்றும் அவரை தெய்வமாக போற்றுகிறார்கள் என்றால் ஏழைப்பங்காளனாக சினிமாவில் மட்டும் அல்லாமல் சொந்த வாழ்க்கையில் கடைப்பிடித்ததனாலும் தான். இந்த நெறிகளுக்கு உட்பட்டே அவரது அரசியல் வாழ்க்கையும் இருந்தது என்பதே உண்மை.

பிருந்தா
டிப்பு தான் மிகவும் பிடித்தது. அவரின் நடனம் மிகவும் அருமையாக இருக்கும். பாடல்கள் மூலம் சமுதாயத்திற்கு விழிப்புணர்வைக் கொண்டு வந்தவர். அவரின் சண்டைக் காட்சிகள் பிரமாதமாக இருக்கும்.

நா. புவனா நாாகராஜன்
டிப்பு பின்னா் அரசியல். இரண்டிலுமே மனித நேயத்தை கடைபிடித்த வள்ளல். அதனால் தான் இன்னமும் பேசப்படுகிறாா். அடுத்தவாின் பசி வறுமை கஷ்டம் உணா்ந்து உதவி செய்ததால் புரட்சி நடிகரான அவா் புரட்சித்தலைவரானாா். கலைத்துறையிலும் ஆளுமை , அரசியலிலும் திறமை, மொத்தத்தில் அவா் ஒரு லெஜன்ட் .

ஹேமலதா சீனிவாசன்
எம் ஜி ஆரிடம் மிகவும் பிடித்தது அவரது அரசியல்தான். அவரது ஆட்சியில் அனைத்து துறைகளுக்கும் படித்தவர்களுக்கு மந்திரி பதவி கொடுத்தார். காழ்ப்பு அரசியல் நடத்தவில்லை. எதிர்க்கட்சியினரை மரியாதைக்குறைவாக பேசியதில்லை.

அவரிடம் இயல்பாக இருந்த கருணை மற்றும் வள்ளல் தன்மையால் அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத்திட்டத்தை மேம்படுத்தி நடைமுறைப் படுத்தினார். மத்திய அரசுடன் நல்லுறவில் இருந்தால்தான் மாநிலத்துக்கு நல்லது செய்ய முடியும் என்பதை உணர்ந்து நல்லிணக்கத்துடன் இருந்தார். நல்லாட்சி புரிந்தார்.

கோமதி சிவாயம் 
டிப்புதேன். அவருடைய கதாபாத்திரத் தேர்வுல உள்ள சிறப்பு என்னன்னா, முடிவில் சமூகத்திற்கு பயனுள்ள மெசேஜ் சொல்வார். மிகையில்லா கம்பீர நடிப்பின் சொந்தக்காரர் மக்கள் திலகம்.

பத்மினி ரகுநாதன் 
எம்.ஜி.ஆர் கதைகள் சந்தோஷத்தை கொடுக்கும். முடிவு சுபமாக இருக்கும். பாடல்கள் எளிய தமிழில் புரியும் படி இருக்கும்.

மீனலதா 
நான் ஆணையிட்டால் பாடல் காட்சியில் அவரது Entry செம சூப்பராக இருக்கும். தியேட்டரில் விசிலும், கை தட்டலும் காதை பிளக்கும்.

ஏழைப் பங்காளனாக , புரட்சித் தலைவனாக, அன்னை மீது பாசமாக, குடும்பத்தினரிடம் அன்பாக, காதலியிடம் கலாய்ப்பவராக, என அவரது நடிப்பு எல்லாமே சூப்பராக இருக்கும்.

தி.வள்ளி
ரசியல் எம்.ஜி.ஆரை விட நடிப்புலக எம்.ஜி.ஆர் அதிக பரிச்சயம். அவர் படங்களில் சமுதாயத்திற்கு நல்ல மெசேஜ் இருக்கும். பாடல்கள் சிறுவர்களுக்கும் , இளைஞர்களுக்கும், தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுக்கக்கூடிய தத்துவங்கள் நிரம்பியதாக இருக்கும்.

கிருஷ்ணவேணி
எம்ஜிஆரின் நடிப்புதான் மிகவும் பிடிக்கும். காரணம் அவர் படம் பார்த்தால் மனம் லேசாகிவிடும். ஜாலியாக சண்டை போடுவதும், தரும நெறியில் வாழ்ந்து காட்டுவதாகவும், அருமையான பாடல்கள் கொண்டதாகவும் இருக்கும் அவர் படம். தீயதை ஒழிக்கும் சக்தியாக அவரை சித்தரித்திருப்பதும்,மது அருந்துவது ,புகை பிடிப்பது ஆகிய கட்சிகளை அவர் படத்தில் அவரிடம் காண முடியாததும், ஏழைப்பங்காளனாக, மனிதநேயம் மிக்கவராக, கஷ்டப்படுபவர்களுக்கு உதவுபவராக, மக்களால் விரும்பி போற்றப்படுபவராக சித்தரிக்கப்படும் அவர் படம் உண்மையிலேயே ரசிக்கும்படியாக இருக்கும்.

ஜெயகாந்தி மகாதேவன்
ன்னை கவர்ந்தது நடிப்புதான். எம்ஜிஆர் படங்களில் பாடல்கள் அனைத்தும் இனிமையாஇருக்கும். மசாலா கொஞ்சம் தூக்கலா இருக்கும். முடிவு பாசிட்டிவா இருக்கும். சரோஜா தேவி, ஜெயுடன் நடிப்பதை மிகவும் ரசிப்பேன்.

ஜானகி பரந்தாமன் 
காந்திக்கு ஒரு கண்ணாடி, நேருக்கு ஒரு ரோஜா,  பாரதிக்கு தலைப்பாகை… அந்த வரிசையில், தொப்பி, கூலிங்கிளாஸ் என்றால் அது எம்.ஜி.ஆர். என்று எந்த குழந்தையும் இன்று கூடச்சொல்லவைக்கும் சினிமா நடிகர் எம்.ஜி.ஆர்.தான் பிடிக்கும்.

படகோட்டி படத்தில் "தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்"பாடல் கண்ணீரை வரவழைக்கும். ஆட்சிக்கு வந்ததும் மீனவர்களுக்கு பல சலுகைகள் செய்தார். "படுத்துக்கொண்டே ஜெயிப்பான்" என்ற கூற்று நிஜமானதற்கு காரணம் சினிமாவே .

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com