
விவசாயி
விளை நிலங்களில்
வீடுகள் வந்துவிட்டதால்
விவசாயம் நடக்கிறது
வீட்டு மாடியில்!
—————-
வெற்றிக்கு வழி
மவுனத்தை
கடைபிடித்துப் பாருங்கள்!
நியாயம் உங்களுக்குக்
கிடைக்கும்!
வார்த்தைகள்
சாதிக்க முடியாததை
பல இடங்களில்
மவுனம் சாதித்து விடுகின்றன!
-பி.சி.ரகு, பள்ளிச்சேரி
—————-
மதிய உணவு
பள்ளிகள்
திறந்துவிட்டன!
இனி,
காக்கைகளுக்கும்
அணில்களுக்கும்
மதிய உணவாய்
கிடைக்கலாம்
நூடுல்ஸும்
சிப்ஸும்!
—————-
வரம்
கொடுத்து
வைத்த ரோஜா!
சிறு செடியை
இழந்து
உன் கூந்தல் காடையே
சொந்தமாக்கிக்
கொண்டதே!
—————-
விளைச்சல்
நெல் போட்டு
அரிசி விளையாத
நிலத்தில்
கல் போட்டு
கட்டடம்
அமோகமாய்
விளைந்து நிற்கிறது!
—————-
பிளிறல்
தனிமைப்படுத்தி,
காலில் சங்கிலியிட்டு,
நன்நீரால் நீராட்டி,
சந்தன, குங்குமம்
அலங்காரம் செய்யும்
உன் தெய்வீகம் வேண்டாம்!
வனத்தோடு,
என் இனத்தோடு,
தேங்கியிருக்கும்
குட்டை நீரின் சேற்றை
பூசிக்கொள்ளும்
சுதந்திரமே வேண்டும்!
—————-
முரண்
தெருக்கூத்தில்
கர்ணன்
வேஷம் கட்டியவன்,
காட்சி
முடிந்ததும்
துண்டேந்தி
வருகிறான்!
– நிலா, திருச்சி