கேன்சர் எமனை விரட்டும் லெமன் கிராஸ் புல்!

கேன்சர் எமனை விரட்டும் லெமன் கிராஸ் புல்!
Published on

வாசகர் ஜமாய்க்கிறாங்க

– கே.முத்தூஸ், தொண்டி

'லெமன் க்ராஸ்' என்பது ஒரு வகை புல் இனத்தைச் சேர்ந்த மூலிகைத் தாவரமாகும். இந்த லெமன் க்ராஸ் தமிழில், 'வாசனைப் புல்', 'எலுமிச்சைப் புல்' மற்றும் 'இஞ்சிப் புல்' போன்ற பெயர்களில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக, இதுபோன்று அதிகம் அறிமுகமில்லாதவைப் பற்றிக் கேள்விப்படும்போது, இது மரமா? செடியா? அல்லது எதனுடைய வேரா? என்றுதான் நமக்கு நினைக்கத் தோன்றும். அதனாலேயே இதன் மருத்துவ குணங்களைப் பற்றிச் சொல்லும் முன், இது ஒரு புல் இனம் என்பதையும், அது கிடைக்கும் இடங்களையும் தெளிவுபடுத்திக் கொள்கிறோம்.

இந்த லெமன் க்ராஸ் இந்தியா, பர்மா, இலங்கை, சீனா, இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்தை தாயகமாகக் கொண்டதாகும். இந்தியாவை பொறுத்தவரை, கேரளாவில் இது அதிக அளவில் பயிரிடப்படுகிறது. சீனாவில் அதிகமாக விளையும் பொருளான இது, பராமரிப்புகள் எதுவும் இல்லாமலே காடுகளிலும் மலைகளிலும் தானாக வளர‌க்கூடியதாகும். மேலும், இது எல்லா வகையான‌ மண் வகைகளிலும், சத்துக் குறைவான மண்களிலும், களர் நிலங்களிலும் மற்றும் உவர் மண்களிலும்கூட‌ வளரக்கூடியது! வீட்டில் தொட்டிகளில் வைத்துக்கூட இதை வளரச் செய்யலாம். இது கொஞ்சம் லெமனின் நறுமணமும், கொஞ்சம் இஞ்சியின் வாசனையும் கல‌ந்ததுபோல் இருக்கும். அதனால்தான் நாம் மேலே குறிப்பிட்டதுபோல் தமிழகத்தில், 'எலுமிச்சைப் புல்', 'இஞ்சிப் புல்' என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.

மருத்துவப் பயன்க‌ள் :
லெமன் க்ராஸ் நல்ல செரிமாணத்தைக் கொடுத்து, பசியின்மையைப் போக்கும். இதில் பல வேதிப் பொருட்கள் உள்ளதால் மனச் சோர்வை நீக்கி உற்சாகம் தரக்கூடியதாகவும், பாக்டீரியாக்களை அழிக்கக்கூடியதாகவும் பயன்படுகிறது. இதன் தண்டுகளிலிருந்தும் மேலுள்ள தோகையிலிருந்தும் எடுக்கப்படும் எண்ணெய், பலவித‌ தோல் வியாதிகளுக்கும், தாய்ப்பால் சுரக்கவும், வலிகளை நீக்கவும் பயன்படுகிறது. தவிர, கிருமி நாசினியாகவும், வாத நோய்களுக்குத் தயாரிக்க‌ப்படும் மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இது கேன்சர் செல்களைக்கூட அழிக்கும் தன்மை கொண்டது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com