
பணப் பொருத்தம்
எல்லாம் பார்த்த
பெற்றோர், வீட்டாரின்
குணப் பொருத்தத்தை
பார்க்காததால்
மகள் இன்று வீட்டோடு.
……………………………………………………..
சேமிப்பு பற்றிப் பேச
அரசியல்வாதி வந்தார்
தனி விமானத்தில்.
……………………………………………………..
பள்ளிக்குச் சென்ற
பக்கத்து வீட்டு குட்டிப்
பெண் பாதியில்
தூங்கிவிட்டாள்
ஆன்லைன் கிளாஸ்
ஞாபகத்தில்.
……………………………………………………..
சிறிதெனினும்
நிழல் பெரிது
நிஜம் நிழலாகவும்
நிழல் நிஜமாகவும்
காட்சி மாறி
கண்ணீர் விடுகிறது.
……………………………………………………..
மலர்ந்தாலும்
உதிர்ந்தாலும்
கீழே கிடந்தாலும்
நிறம் மாறாத
பூக்கள் போல
நீ என்ன செய்தாலும்
மலரென என் மனதில்
மணம் பரப்புகிறாய்.