கவிதைத் தூறல்!
– பி.சி.ரகு, விழுப்புரம்
லஞ்சம்
பல கோடி
கொள்ளையடித்த அரசியல்வாதி
கோயில் உண்டியலில்
காணிக்கையாய் போட்டான்
ஆயிரம் ரூபாய்!
—————————————————
மன்னிப்பு
மன்னிப்பது
கடவுள் செயல்
மன்னிப்பு கேட்பது
மனித செயல்
மனிதனாய் இருந்து
கடவுளாய் வாழுங்கள்…
ஒவ்வொருவருக்குள்ளும்
ஒளிந்திருக்கிறார்
கடவுள்!
——————————————–
மவுனம்
அவளது
கொலுசு கூட
ஏதோ ஒன்று
பேசிவிட்டுத்தான் போகிறது…
அவள் மட்டும்தான்
இன்னும்
மவுனமாகவே இருக்கிறாள்!
——————————————–
ரகசியம்
காற்று அப்படி என்னதான்
சொல்லியது?
தலையாட்டி
சம்மதம் தெரிவிக்கிறதே
மரம்!
——————————————–
வரதட்சனண
ஆசையாய் கேட்ட பொம்மையை
ஆசையாய் கேட்ட தாவணியை
ஆசையாய் கேட்ட நகையை
எல்லாம் வாங்கியாயிற்று
அக்காவிற்கு
இன்னும் கிடைக்கவில்லை
மாப்பிள்ளை மட்டும்!
——————————————–
பொய்
'இந்தா ஒரு வாய் சாப்பிடு
நிலாவை பிடிச்சுத் தர்றேன்…'
'அடங்காம, அட்டகாசம் பண்ணா
பூச்சிக்காரன் கிட்ட உன்னை
பிடிச்சுக் கொடுத்திடுவேன்'
என்று ஆரம்பிக்கிறது
ஒவ்வொரு
குழந்தைகளிடமும்
அம்மாக்கள் சொல்லும்
பொய்!
குழந்தைகள் பொய் சொல்ல
ஆரம்பமாய்…