
"போருக்குச் சென்ற மன்னருக்கு கழுத்து வலியாம் வைத்தியரே!"
"திரும்பிப் பார்த்துக் கொண்டே ஓடி வந்திருப்பார்…!"
-வி ரேவதி, தஞ்சை
*************************************
"உங்க ஜோக்ஸுக்கு முதல் வாசகி உங்க மனைவிதானாமே சார்?"
"கடைசி வாசகியும் அவதான்; படிச்சுப் பார்த்துட்டு, கிழிச்சு டஸ்ட் பின்ல போட்டுடுவா?"
-வி ரேவதி, தஞ்சை
*************************************
"பள்ளிக்கூட நாட்களிலேயே தலைவர் மாறுவேடப் போட்டிகள்ல நிறைய பரிசு வாங்கியிருக்காராம்..?"
"அதான் கைது பண்ண முடியாமல் போலீஸ் திணறிட்டாங்களா…?"
-வி. ரேவதி, தஞ்சை
*************************************
கூட்டத்துல பேச வந்த தலைவர் நாற்காலியில உட்காராம தரையில உட்கார்ந்துக்கிட்டு இருக்காரே?
அவருக்கு நாற்காலி ஆசை இல்லை என்கிறதை சூசகமா சொல்றாரு!
-சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா.
*************************************
இன்ஸ்பெக்டர் ஏன் ஏட்டய்யாவை இந்த திட்டு திட்டறார்?
தீவிரவாதியை பிடிச்சுக்கிட்டு வரச் சொன்னதுக்கு தீவிர வியாதி உள்ள ஒருத்தனை பிடிச்சுக்கிட்டு வந்திட்டாராம்!
-சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா.
*************************************
எங்க தலைவருக்கு தன்மானத்தோட வாழறதுதான் பிடிக்கும். உங்க தலைவருக்கு?
சன்மானத்தோட!
-சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா.
*************************************
தலைவர் பள்ளிக்கூடத்துல படிக்கும் போதே திருட்டுத் தொழில்ல ஈடுபட்டிருந்ததாச் சொல்றாங்களே! நம்ப முடியலயே!
திருட்டுத் தொழில்ல ஈடுபட்டிருந்தார் என்பதையா?
பள்ளிக்கூடத்துல படிச்சார் என்பதை!
-சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா.