அன்புவட்டம்!

அன்புவட்டம்!
Published on
ரஷ்யா – உக்ரைன் போர்?

எஸ். கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி

து நடக்கக் கூடாதுன்னு பயந்தோமோ, அது நடந்தே விட்டது. ஏவுகணைத் தாக்குதல், குண்டு மழை, உயிர்ப்பலிகள்… மானுட சோகம் நிகழ்ந்தே விட்டது.

தங்களை சூப்பர் பவர்களாகக் காட்டிக் கொள்ளவும், செல்வாக்கு யாருக்கு என்று பலப்பரீட்சை செய்யவும் இதுதான் நேரமா? இப்பதான் கொரோனா ஒரு ஆட்டு ஆட்டிவிட்டு 'நிற்கட்டுமா…  போகட்டுமா?'ன்னு கேட்டுக் கிட்டிருக்கு.

"ஏம்மா… கத்திரிக்காய் இவ்ளோ விலை சொல்றே?"

"ரஷ்யா போர் தொடங்கிடுச்சே… சாமி… தெரியாதா?"

– இது ஜோக் அல்ல; வயிற்றெரிச்சல்!

இந்தப் போரினால், கச்சா எண்ணெய், எரிவாயு என எல்லா பொருட்களின் விலையும் தாறுமாறாக உயரும். மருந்துத் தட்டுப்பாடு ஏற்படும்… முக்கியமா கார் மற்றும் ஸ்மார்ட்ஃபோன் விலை மிக உயருமாம்! ஏன் அப்படி? உலகளவுல, 'பல்லேடியம் (palladium)ங்கிற உலோகத்தோட மிகப் பெரிய ஏற்றுமதியாளரா ரஷ்யா இருக்காம்! வாகனங்களின் எக்ஸாஸ்ட் அமைப்புக்கும், ஸ்மார்ட் ஃபோன் தயாரிப்புக்கும் தேவைப்படும் முக்கியமான உலோகம் பல்லேடியம்தானாம்! யப்பா, பெருசுங்களா… போரை நிறுத்துங்க ப்ளீஸ்!!

'வலிமை' சினிமா விமர்சனம் ப்ளீஸ்?

ரகு நந்திதா, நவிமும்பை

'மெட்ரோ,' 'வால்டர் வெற்றிவேல்' படங்களை சம அளவில் எடுத்து, பைக் ரேஸ் காட்சிகளைத் தூவி, 'அஜித்' என்னும் தட்டில் வைத்துப் பரிமாறியிருக்கிறார்கள்.

போலிஸ் வாகனத்தில், வில்லனையும், அஜித்தின் தம்பியையும் அழைச்சுக்கிட்டுப் போகும்போது, அவர்களைச் சூழும் பைக் குழு,  தங்கள் கூட்டாளிகளைக் காப்பாற்ற முயலும் அந்த ஸ்டண்ட் காட்சியில் சாகச வீரர்கள் மட்டுமல்ல, நீரஷ்ஷாவின் கேமிராவும் உருண்டு, புரண்டு நடித்துள்ளது. திலீப் மாஸ்டருக்கும் ஸ்பெஷல் பாராட்டு!

படத்துல இயக்குநர் வினோத்தின் 'டச்' இல்லைன்னா என்ன?

படம் முழுக்க அஜித்தின் அலட்டலான ப்ரெசென்ஸ் அழுத்தமா இருக்கே! அவரது ரசிகர்களுக்கு அது போதும்! எப்படியோ, போனி கபூர்… போனி  பண்ணிட்டாருல்ல!

வாழ்க்கையில் வெற்றி அடைய தகுதி தேவையா?

கே. காந்தரூபி, திருவேற்காடு

ண்டிப்பா தேவை மேடம்!
த (தன்னம்பிக்கை) கு (குறிக்கோள்) தி (திறமை) இந்த மூன்றும் தேவை!கூடவே, த (தலைமைப் பண்பு) கு (குழு மனப்பான்மை) தி(திட்டமிடல்) இதுவும் சேர்ந்துருச்சுன்னா… ஒஹோஹோ!

மனைவிகள் கணவர்களிடம் எதிர்பார்க்கும் விஷயங்கள் என்னென்ன?

வாணி வெங்கடேஷ், சென்னை

Sincerity, Affection, Love, Attention, Respect and Youth.
இந்த ஆறு விஷயங்களையும் ஆண்கள் ஞாபகத்துல வெச்சுக்குறது கொஞ்சம் கஷ்டம்… அதனாலதான் அத சுருக்கி 'SALARY'ன்னு வெச்சுட்டாங்க!

கணவன், மனைவிகிட்ட எதிர்பார்க்குற விஷயம் என்ன?

விடுங்க வாணி! அவங்க என்ன எதிர்பார்த்தா என்ன? நீங்க கொடுக்கறது கொடுங்க… வேண்டாம்னு சொல்ல மாட்டாரு மவராசன்!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com