'செஸ்' விளையாடத் தெரியுமா மேடம்?– எஸ். கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி.செஸ்ஸா? யாராவது அறிவு ஜீவிங்க விளையாடட்டும்! நாம்ப ஜஸ்ட் ரசிக்கலாம்! பொறுமையைச் சோதிக்கும் இந்த விளையாட்டில் எந்த ஆர்வமுமில்லை! ஆனா… ஓரளவு புரியும்!.அப்புறம், 'தி ஹிந்து' நாளிதழில், செஸ் பற்றிய புதிர் எல்லாம் வரும். "அடடா! இது ஏதோ கணக்கு போல இருக்கே… மூளைக்கு வேலை தரணுமே! நமக்கு ஒத்து வராது!"ன்னு சின்ன வயசுலேயே ஒதுங்கிட்டேன்..பல தனியார் நிறுவனங்கள்ல, நிர்வாக அதிகாரிகள் பதவிகளுக்கு இன்டர்வ்யூ வைப்பாங்க இல்லையா? அப்ப, "உங்களுக்கு செஸ் ஆட வருமா?"ன்னு கேட்டு, சின்னதா டெஸ்ட் வெப்பாங்களாம்! (நல்லவேளை, எங்க ஆபீஸ்ல அதைப் பண்ணலை! ஹி…ஹி!.ஏன்னா… பொறுமை, கணிக்கும் திறன், திட்டமிடல், போர் குணம், நேர நிர்வாகம், விவேகம்… எல்லாமே தேவைப்படும். மைன்ட் கேம் இது!.'செஸ்' பற்றி இன்னொரு கோணத்தில் நான் யோசித்ததும் உண்டு! அந்த விளையாட்டு சர்வாதிகார மனோபாவம் கொண்டதாகவும் சமத்துவத்துக்கு எதிரானதாகவும் தோன்றும். நீங்க அந்த விளையாட்டை உயிரோடு நிஜமாகவே விளையாடுவதாக கற்பனை செஞ்சு பாருங்களேன்! அந்தக் கொடூரம் புரியும்! சிப்பாய்கள், சாதாரண ஆட்கள்தானே! அவர்கள் உயிர்த் தியாகம் செய்யட்டும்! குதிரைகளைப் பயன்படுத்துங்க… யானைகள் முக்கியம்… ராணிதான் பலம் வாய்ந்தவள். ராஜாவைக் காப்பாற்றியே ஆகணும்… ஆனா, ராஜா ராணியைக் காப்பாற்ற லேசுல நகர மாட்டாரு. சரி, விளையாட்டுதானே? 'உருவகங்களை' மன்னிச்சுடலாம்! ஏன்னா… இந்த ஆட்டமே மன்னர்கள் ஆடியதுதான்!.**************************.நாம்ப என்ன செஞ்சாலும் குற்றம் குறை கண்டுபிடிச்சு விமர்சனம் செய்ய என்றே ஒரு கூட்டம் அலைகிறதே… என்ன செய்ய அனுஷா?– லலிதா மோகன், விழுப்புரம்.ஒருவர் தனது பி எம் டபிள்யூ காரை தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். அந்த வழியாக சென்ற தெருநாய் ஒன்று, அதன் டயர் மீது சிறுநீர் கழித்தது.."என்னங்க… நம்ப காரை அந்த நாய் அசிங்கப்படுத்துது. நீங்க விரட்டாம நிக்கறீங்களே"ன்னு எரிச்சலோடு கேட்டா…."அது நாய்! அதனோட அறிவுக்கு என்ன தோணுதோ அதைச் செய்யுது. இந்தக் காரோட மதிப்பு அதுக்குத் தெரியாது… எடுத்துச்சொன்னாலும் புரியாது…"ன்னு அமைதிபடுத்தினார்..இதுபோலத்தான் உங்க வாழ்விலும் உங்க மதிப்பை அறியாமல் உங்களை யாராவது அவமானம் படுத்தினாலோ, வம்புக்கு இழுத்தலோ… ஜஸ்ட் smile and walk away… அதாவது புன்னகையுடன் கடந்து செல்லவும்…(மேஜர் சுந்தரராஜன் translation நினைவுக்கு வருகிறதா?!).**************************.போர்ச்சுகல், ஸ்பெயின் நாட்டில் வெப்ப அலை?-வாசுதேவன், பெங்களூரு.சாதாரண சூடா அது? 116.6 டிகிரி ஃபேரன்ஹிட்! ஏதோ ஒரு வார்த்தைய அடிக்கடி சொல்வாங்களே… அக்காங்… 'வரலாறு காணாத…' அதேதான்! வரலாறு காணாத வெப்ப அலையில், பலி எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேலே! இந்தத் தீவிர வெப்ப அலை, அன்டோரா, ஃபிரான்ஸ் அப்புறம் அக்கம்பக்கத்து நாடுகளுக்கும் பரவி, காட்டுத் தீ வேற, ஏற்பட்டிருக்கு! தாவரம், உயிரினம், நீர் நிலை எல்லாமே சப்ஜாடா சர்வநாசம் ஆகியிருக்கு. காரணம், மனிதனின் சுயநலம்; வாகனம், தொழிற்சாலை, ஏவுகணைகள் இன்ன பிற வெளியிடும் கார்பன் புகை!.ஹலோ, "W.H.O" அமைப்புகளே, உலகத் தலைவர்களே, சுற்றுச் சூழல் ஆர்வலர்களே… இந்த வருஷம் பருவநிலை மாற்றம், புவிவெப்ப மயம் பற்றி பேப்பர் ப்ரஸென்டேஷன் செய்து, வழக்கம்போல அதிர்ச்சி தெரிவித்து, விசாரப்பட்டு, முடித்துக் கொள்வீர்கள் என நம்புகிறோம். ஆல் தி பெஸ்ட்!.**************************.போன மாசம், திருப்பதி உண்டியல் காணிக்கை வசூல் 139 கோடியே 45 லட்ச ரூபாயாமே…!-வாணி வெங்கடேஷ், சென்னை.எவ்ளோ கோடி வசூல் ஆனால் என்ன வாணி? என் கவலையெல்லாம் பிரசாத லட்டு சைஸ் குறைஞ்சுகிட்ட போகுதேன்னுதான்!.சைஸை விடுங்க! லட்டு ஷேப்பிலேயே இல்லை; இட்லி வடிவத்துல இருக்கு! அதுவும் எப்படி நெய்யே காணாம, வறண்டு போய், முந்திரி – திராட்சை இல்லாம, வெறும் ஏலக்காய் தோல், கல்கண்டுடன்! திருப்பதி லட்டுன்னா, நல்லா சைஸா, நெய் வாசனையோட, முழு முந்திரியோட… கமகமன்னு இருக்க வேண்டாமோ? இதுல பேடண்ட் உரிமை வேற!.ஏதோ பக்தாஸ்காக கொஞ்சம் பார்த்து செய்யுங்க பெருமாளே! ஆனா, உங்களுக்கே குலசேகரப்படியில், தினமும் ஒரு புது மண் சட்டியில் உப்பில்லாத தயிர் சாதம்தான் நைவேத்தியம் ஆகுதுன்னு சொல்றாங்க! நிஜமா பெருமாளே?