
தனி மனித நிதி மேலாண்மை என்பது ஒரு தனி மனிதனின் நிதி நிலைமையை வளமாக்குவது. எவ்வாறு நாட்டுக்கு நிதி அமைச்சர், அரசாங்கத்தின் திட்டங்களுக்கு, எதிர்காலத்திற்கு நிதியை ஒதுக்கி, அரசாங்கத்தின் நிதி நிலைமையை மேம்படுத்துகிறாரோ, அதைப் போலவே,வீட்டுக்கு நீங்கள்தான் நிதி அமைச்சர். வீட்டின் எதிர்காலக் குறிக்கோள்களுக்கு, எதிர்கால நிதி நிலைமைக்கு நீங்கள்தான் திட்டமிட வேண்டும்.
தனி மனித நிதியை மேம்படுத்த கெத்தான பத்து விஷயங்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
சேமிப்பு, முதலீடு, காப்பீடு என்றால் என்ன? இவற்றிற்கான வித்தியாசங்கள் என்ன? பயன்கள் என்ன? இதோ இக்கட்டுரை ஆசிரியர் வெங்கட்ராமன் சொல்வதைக் கேளுங்கள்… கல்கி ஆன்லைன் வெளியிட்ட Podcast வழியாக…
ஒருவர் ரூபாய், 10 லட்சம் அவரது 16 வயதில், 9% கூட்டு வட்டியில் முதலீடு செய்கிறார் எனில்,
16 வயது = 10 லட்சம்
24 வயது = 20 லட்சம்
32 வயது = 40 லட்சம்
40 வயது = 80 லட்சம்
48 வயது = 1 கோடியே 60 லட்சம்
56 வயது = 3 கோடியே 20 லட்சம்
64 வயது = 6 கோடியே 40 லட்சம்
72 வயது = 12 கோடியே 80 லட்சம்
எனவே, எவ்வளவு சீக்கிரம் கூட்டு வட்டியில் முதலீடு தொடங்குகிறோமோ, அவ்வளவு சீக்கரம் கூட்டு வட்டியின் பயன் நமக்கு அதிகமாக கிடைக்கும். இதனை, நன்கு பயன்படுத்திக்கொண்டு, பொது சேமநல நிதி (PPF), சுகன்யா சம்ருத்தி திட்டம் (SSY) போன்ற கூட்டுவட்டி திட்டங்களில் முதலீடு செய்யுங்கள்.