அமாவாசை நிலா மகளும் அழகுதானே !!

அமாவாசை நிலா மகளும் அழகுதானே !!
Published on
கருப்பு நிறத்தழகி –  சென்னையில் பிரம்மாண்ட போட்டி!

சிவப்பாய் இருப்பவர்கள் மட்டுமே அழகானவர்கள் என்று எண்ணுப வர்களுக்கு சாட்டை அடி அளிக்கும் விதமாகவும் கருப்பு நிறத்து பெண்களை கெளரவப்படுத்தும் வகையிலும், கின்னஸ் சாதனைக்காக சென்னை சாந்தோமில் வைத்து பிரமாண்டமான மணப்பெண் அலங்கார போட்டி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர் 'லேடர் கமர்ஷியல் சல்யூஷன்ஸ்' நிறுவனத்தார்.  பெண்களை பெருமைப்படுத்தும் இடத்தில் மங்கையர் மலர் இல்லாமலா? கருப்பு நிறத்து அழகிகளைப் பாராட்ட நாமும் இணைந்தோம் இந்நிகழ்ச்சியில்.

400 கரு நிறத்து அழகிகள் பங்கேற்ற இந்த  வித்தியாசமான போட்டியில், அவர்களை மேலும் அழகுப்படுத்த பெண் அழகு கலைஞர்கள் மட்டும் அல்லாமல் ஆண் கலைஞர்களும் பங்கேற்றது சூப்பர்! இவர்கள் அனைவரும் சேர்ந்து புதிய உலக சாதனை படைத்தனர். இவர்களில் முதல் மூன்று இடம் பிடித்த அழகிகளுக்கு பிரமாண்டமான பரிசுகளும், மேலும் 50 அழகிகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன. 400 போட்டியாளர்களும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்துக்குள் சிறப்பாக செயல்பட்டு, நேர காரணங் களுக்காக போட்டியிலிருந்து விலக்கப்படாமல் இருந்ததே மாபெரும் சாதனை என்றுதான் சொல்லவேண்டும். இந்திய நாட்டில் வெவ்வேறு மாநில கலாசாரப்படி மணப்பெண்களை  அழகுபடுத்தி சமத்துவத்தின் அடையாளமாகத் திகழச் செய்தனர்.
"வித்தியாசமாக முயற்சி செய்து பார் வையகம் உன்னை வியந்து பார்க்கும்" என்ற கூற்று வலியுறுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியின் வாயிலாக.

ஆரம்பக்கட்ட கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், புதிய வாய்ப்புகளை அளித்த இடமாகவும், துயரங்களை மறந்து மகிழ்ச்சியுடன் பங்கேற்க வாய்ப்பளித்தத் தளமாகவும் இந்நிகழ்வு அமைந்தது.

அரங்கத்தில் 400 அழகிகளை ஒரு சேர கண்ட போது தெரிந்தது அமாவாசை  நிலாமகளும் அழகுதான் என்று.

தொகுப்பு:

அபிராமி மற்றும் ஹர்ஷினி
அபிராமி மற்றும் ஹர்ஷினி
Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com