அம்மா என்றால் அன்பு vs  கண்டிப்பு!

அம்மா என்றால் அன்பு vs  கண்டிப்பு!
Published on

'அன்னையர் தினம்' உலகெங்கும் மே மாதம், இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை (8/5/2022) அனுசரிக்கப்படுகிறது. அம்மா என்ற அற்புத உறவை தினம் தினம் நாம் கொண்டாட வேண்டும் என்பது பொதுக் கருத்து. பெண்களை  காலம் காலமாக போற்றும் நம் இதழின் பலமே வாசகிகளாகிய நீங்கள்தான். இதன்  காரணமாக, இந்த கருத்து யுத்தம் மூலம், உங்களின் கருத்துக்களையே நாங்கள் அன்னையர் தின சிறப்புக் கட்டுரையாக பெருமையுடன் வழங்குகிறோம். 

அனைத்து வாசகிகளுக்கும் எங்கள் இதயம் கனிந்த
'அன்னையர் தின' வாழ்த்துகள்! 

ங்கத்துடன் செம்பு சேர்த்தால்தான் நகைகள் உருவாக்க முடியும். அன்புடன் கண்டிப்பும் கலந்து வளர்த்தால்தான் நல்ல குழந்தகளை உருவாக்க முடியும் . நகைகள் மின்ன பாலிஷ் கொடுப்பது போல் , நாட்டு நடப்புகளை குழந்தைகளிடத்தில் சற்று பாலிஷாக எடுத்துச்சொல்லி, தட்டிக் கொடுத்து கொண்டு போனால், நம் மீது சிறுதுளி வருத்தமும் வராது . எல்லாவற்றிற்கும் அடித்தளம்  அன்பே!
-ஜானகி பரந்தாமன்

ம்மா என்று சொன்னாலே அன்பு பொங்கும்.
தன்னலத்தை மறந்து தன் குழந்தைக்காக
பார்த்து பார்த்து செய்பவள் அம்மா தான் !
பாசம், பரிவு, அரவணைப்பு, கண்டிப்பு
அத்தனையும் நிறைந்த அம்மாவின் அன்பு அலாதியானது. அகிலத்தில் ஈடில்லாதது.
தப்பை எடுத்துச் சொல்லவும் தோழியாக, ஜாலியாக பேசிக் கொண்டே அறிவுரையும் வழங்க அம்மாவால் தான் முடியும்
-ஜெயலட்சுமி வெங்கடாச்சலம்

ம்மா எவ்வளவு அற்புதமான உறவு ! சில தருணங்களில் நமது நல் வழிக்காக, கண்டிப்பு காட்டுகிறாள். அது நமது எதிா்காலத்திற்கான வளா்ப்பு முறை. அதை புாிந்து குழந்தைகள் நடந்து கொண்டு, ஒரு கால கட்டத்தில் அம்மாவோடு தோழி போல் பாவித்து நடந்தாலே அன்பும் பாசமும் வற்றாத ஜீவ நதியாய் ஒடும். என்றுமே அம்மா என்பவள் விலை மதிப்பில்லா பொக்கிஷம்
நா.புவனாநாகராஜன் செம்பனாா்கோவில்

ம்மா என்பவர் நல்ல தோழி, நல்லதொரு வழிகாட்டி, நல்லதொரு தத்துவஞானி, நாம் தவறு செய்யும் போது கண்டிப்பு மட்டும் அல்லாது நாசூக்காக நமக்கு உணர்த்துபவள்.
ஆர். பிருந்தா 

பூமியை விட பொறுமை மிகுந்தவர் அம்மா. பிள்ளைகளின் வெற்றி, மகிழ்ச்சி, கனவுகளை நனவாக்கவும், சாதனை புரியவும் அளவிடமுடியாத அன்பை அளித்து போராடுபவள்தான் அம்மா.
கலைமதி  சிவகுரு

ன்பு, கண்டிப்பு – இந்த இரண்டு குணங்களிலிலும் ஏதோ ஒன்றை உடையவள்தான் அம்மா என்ற அர்த்தமில்லை. அன்பு பாதி,கண்டிப்பு பாதி இரண்டும் சேர்ந்த கலவைதான் அம்மா. தவறு செய்ய நேரிடும்போது மனதினுள்ளே அன்பை வைத்துக்கொண்டு வெளியில் கண்டிப்புடன் நம்மை நல்வழிப்படுத்துபவளே அம்மா.
நளினி ராமச்சந்திரன்

ம்மா என்ற சொல்லுக்கு ஈடு இணை வேறு எந்த சொல்லும் கிடையாது.
சரஸ்வதி துறைசுவாமி

ன்பு என்ற இனிப்பு 60% கண்டிப்பு‌ என்ற‌ காரம் 40% இருக்கனும்.
ராஜலட்சுமி கௌரிஷங்கர்

ம்மா என்றால் அன்பு ! அன்பு! அன்புதான்!
அம்மாவின்  பாச அன்பு எடுத்த செயலை சாதிக்க வைக்கும்.

ம்மாவின் ஆறுதல் அன்பு வாழ்க்கையில் முன்னேற தூண்டுகோலாய்விளங்கும்.

ம்மாவின் ஆளுமை அன்பு விண்ணையும் தொடச் செய்யும்.

ம்மாவின் தன்னலமற்ற அன்பு வெற்றிக்கு வழி காட்டும்.

ம்மாவின் கண்டிப்பான அன்பு  தவறு செய்வதைத் தடுத்து நிறுத்தும்.
மீனலதா

ம்மாவின் அன்பு பற்றி சொல்லும் போதெல்லாம்
தவறாமல் வந்து போகிறது அம்மாவின் முகம்.
இப்புவியில் அனைத்து நிம்மதியும் கிடைக்கும்
ஒரே இடம் தாய் மடிதான்.
வசந்தா மாரிமுத்து

ம்மாவின் அன்பு அளப்பரியது. கண்டிப்பு என்பது அன்பு என்னும் தேனில் கலந்த மருந்தாக, மனநலம், உடல் நலம் பேணுவதாக இருக்க வேண்டுமே தவிர, யார் மீதோ எதன் மீதோ உள்ள கோபத்திற்கான வடிகாலாக இருக்கக் கூடாது.
லலிதா ஷண்முகம்

ண்மை பொய், ஸ்வீட் காரம், விருப்பு வெறுப்பு, ஏழை பணக்காரன் என வாழ்க்கையில் எல்லாமே ரெண்டு ரெண்டா இருப்பதுபோல் அம்மாவிடமும் அன்பு கண்டிப்பு, இரண்டும் தேவையான அளவு கலந்தே இருக்கணும். அப்பதான் குழந்தைகளை நல்லவர்களா உருவாக்க முடியும். அன்பு மட்டும் கொடுப்பது ஆரோக்கியமாகாது.
ஜெயகாந்தி  மகாதேவன்

ரண்டும் கலந்த கலவையாய் இருப்பவள் சிறந்த அம்மா. ஜாலியாக நட்புறவோடு பழகும் தாயிடம் மகள் எந்த விஷயத்தையும் கூச்சமின்றி பகிர்ந்து கொள்வாள். இன்றைய காலகட்டத்திற்கு அது மிகவும் அவசியம் .

"அழ அழ செய்வாள் உற்றாள்.. சிரிக்க சிரிக்க செய்வார் பிறர்" என்பது பழமொழி… எனவே பிறர் நம்மை கண்டு நகைக்காமல் இருப்பதற்கு அம்மாவின் கண்டிப்பான வளர்ப்பும் அவசியம்.
-தி.வள்ளி

ம்மாவின் அன்பை எதனோடும், யாருடனும் ஒப்பிட முடியாது. அம்மாவின் அன்பு, கருணை, தியாகம் இவற்றை விட அவரது உறுதி, விவேகம், வலிமை இன்றும் எங்களை வியக்க வைக்கும். அடிப்பதற்க்கும், கண்டிப் பதற்கும் ஆயிரம் பேர் இருக்க அம்மா மட்டுமே பாசத்தால் நம்மை ஆள்பவள். அன்பென்றால் அம்மா,  நம் தாய் போலாகிடுமா?
மகாலட்சுமி சுப்பிரமணியன்

ம்மாவின் அன்பு தன்னலமற்றது. அவள் கண்டிப்பு பாசம் கலந்தது. எப்போது பாசம் செலுத்த வேண்டும், எப்போது கண்டிப்புடன் இருக்க வேண்டும் என்று அறிந்தவள் தான் சிறந்த தாயாக இருக்க முடியும்.

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே!

அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்க்கையிலே! என்பதற்கேற்ப தாய், பாசத்துடன் கண்டிப்பையும் சேர்த்துக் காட்டினால் தான் நல்ல குழந்தையை உருவாக்க முடியும். ஆனாலும் அவளுடைய பாசத்திற்கு தான் முதலிடம்.
ராதிகா ரவீந்திரன்

ம்மா என்ற வார்த்தையிலேயே கலந்துள்ளது அன்பு என்ற உணர்வு. நாம் செய்யும் சில தவறுகளைக் கூட , கசப்பு மருந்தை எப்படி தேன் தடவி தருகிறார்களோ , அதுபோல அன்போடு அரவணைத்து நம் தவறை உணர்த்தி, நல்ல பண்புகளை சொல்லித் தரும் அம்மாவிற்கு நிகர் அம்மாவே!
-பானு பெரியதம்பி

ன்பும் ஜாலியும் கண்டிப்பும் மூன்றும் கலந்த கலவை "அம்மா"…
ராதா நரசிம்மன்

ம்மா என்றால் அன்பும் கண்டிப்பும் மட்டுமல்ல. நல்ல தோழியும் அம்மாதான். அம்மா என்பவள் அஷ்டவதானி. பாசம், கண்டிப்பு, நட்பு, அக்கரை, தியாகம், பண்பு, மரியாதை, விட்டுக்கொடுத்தல் ஆகிய அனைத்தையும் கற்றுக்கொடுக்கும் ஆசான். மற்றவர்கள் அருமை அவர்கள் மறைந்த பின் புரியும். அம்மாவின் அருமை மட்டும்தான் ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை எல்லோராலும் உணர முடியும். அம்மாவுக்கு ஈடில்லை.
ஹேமலதா ஶ்ரீனிவாசன்

ம்மா என்றால் பாசம், நேசம், பரிவு அதுதான் அம்மா என்ற மூன்றெழுத்தின் மகத்துவம்.
வாணி கணபதி

ம்மா அழகு
அம்மா பாசம்
அம்மா தோழி
அம்மா ஒழுக்கம்
அம்மா உதவும் மனசு
அம்மா டீச்சர்
சித்ரா குமார்

ம்மா என்றால் அன்பு மட்டுமே! பிள்ளைகள் தவறு செய்வதை உணர்ந்தால் கண்டிப்பு காட்டாமல் அன்பினாலேயே சரி செய்வது அம்மாவின் தனிச் சிறப்பு!
லட்சுமி வாசன்

ன்பும் கண்டிப்பும்  கலந்த கலவை அம்மா. அன்பு தூக்கலாக இருக்கும்.
ஜெயந்தி நாராயணன்

ன்புக்கு ஆதாரமே அம்மா தான்.ஆயிரம் பந்தம் இருந்தாலும் அம்மா போல எதுவுமே கிடையாது. அம்மா அன்பின் வடிவம்.
சரவணன்

ன்பின் மறு உருவம் அம்மா!
அவளுக்கு நிகர் வேறு உண்டா!
உதிரத்தை பாலாக்கிக் கொடுப்பாள்!
ஊண், உறக்கமின்றி வளர்ப்பாள்!
ஆண்டவனின் அவதாரம் அவளே !
அவளை வணங்குதல் நலமே!
லலிதா பாலா

ம்மா என்றால் அன்பு தான். அம்மாக்களுக்குக் கண்டிப்புக் காட்டற மாதிரி நடிக்கக் கூடத் தெரியாதுங்க. கண்டித்து விட்டு, அடுத்த நிமிஷமே அன்புடன் அரவணைப்பவள் தான் அம்மா!
ஜெயா சம்பத்

ம்மா என்றால்அன்பு
அப்பா என்றால் அறிவு
எனவே தவறு செய்தால் தட்டிக்கேட்கும் குணமும் அன்பால் வழி நடத்தலுமே தாய்மைக்குரிய குணங்கள்
அன்பு பாலா

ம்மா என்றால் அன்பு தானே. தாயை போல் வேறு யாரும் வர மாட்டார்கள் வரவும் முடியாது.
சாந்தி ஶ்ரீனிவாசன்

ண்டிப்பு. மனதிற்குள் அன்பு வைத்து, வழிகாட்டும் நெறியாளராக இருந்தால் மட்டுமே வழி மீறலும், மனச்சிதைவும் இல்லாமல் நம் பிள்ளைகள் திகழ்வார்கள்.
ஶ்ரீவித்யா பிரசாத்

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com