ஒரு வார்த்தை!

ஒரு வார்த்தை!
Published on

ன்னுடைய உறவினர் ஒருவர் மும்பையிலிருந்து எங்க வீட்டுக்கு வந்திருந்தார். எழுபத்தைந்து வயதைக் கடந்திருந்த அவருக்கு இலேசாகத் தலைச்சுற்றல் வரவே, "ரத்த அழுத்தப் பரிசோதனை செஞ்சுக்கறேன்" என்றார். நானும் அவசரத்துக்கு அருகில் இருந்த எம்.பி.பி.எஸ். படித்த அரசாங்க மருத்துவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். நாற்பது வயது மதிக்கத்தக்க அந்த பெண் மருத்துவர், பி.பி.செக் செய்தபோது, அந்த முதியவரின் சட்டைப் பையில் இருந்த வஸ்துவைப் பார்த்துவிட்டு, "இது என்ன பேஸ்மேக்கரா?" என்று கேட்டார். எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது.

பேஸ்மேக்கருக்கும், ஹியரிங் எய்ட் மிஷினின் பேட்டரிக்கும் வித்யாசம் தெரியாத பெண்மணி, அரசு மருத்துவமனையில் டாக்டராகப் பணிபுரிகிறாரே! அந்தக் கொடுமையை என்ன சொல்ல…?

நல்லவேளை, அந்தப் பெரியவருக்குக் காதும் கேட்கவில்லை; தமிழும் புரியவில்லை…. தப்பித்தேன்டா சாமி!

**************

ன்னுடைய அக்கா, தனி ஆளாக பெங்களூரில் வசித்தவர். அவருக்கு திடீரென்று மூச்சுவிட முடியவில்லை. பக்கத்து வீட்டுப் பெண்ணை உதவிக்கு அழைத்திருக்கிறார். அக்கா, லேசாக மயக்கமுறவே, பயந்துபோய் கூப்பிடு தூரத்தில் உள்ள மிகப் பெரிய பந்தா மருத்துவமனையில் சேர்த்துவிட்டனர்.

"மருத்துவக் காப்பீடு இருக்கிறது; மகன் வசதியானவன்" என்று தெரிந்ததும் 'ரமணா' பட ஸ்டைலில் எல்லாமே நடந்தேறியது.

"நுரையீரல் பிரச்னை. 30%தான் பிழைக்க வாய்ப்பு!" என்றெல்லாம் ஏகத்துக்கும் பயமுறுத்தி, ஐ.சி.யு.வில் வைத்து, பல லட்சங்களைக் கரைத்தனர்.

பிறகு நிரந்தரமாக ஆக்ஸிஜன் மற்றும் மாஸ்க் கருவியை இரவு நேரங்களில் தூங்கும்போது பயன்படுத்தணும் என்று கொடுத்து அனுப்பிவிட்டனர்.

பிறகு அக்கா, தம்முடைய மகனோடு மும்பைக்கே சென்றுவிட்டார்.அங்கே அவருக்கு மறுபடி இருமல் தொந்திரவு வரவே, காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் போய் இருக்கிறார்.

அவர் என்டோஸ்கோபி செய்து, தொண்டையில் இருந்த சிறுகட்டியை அகற்றியதில், இருமல், மூச்சிறைப்பு எல்லாமே போய்விட்டது. இட்ஸ் கான்! போயே போச்சு! வெறும் மூவாயிரம் ரூபாய் செலவு!

இப்போது பெங்களூரு பிரம்மாண்ட ஆஸ்பத்திரி கொடுத்த அந்த நவீனக் கருவி பரண் மீது 'உய்யலாலா' பாடிக் கொண்டிருக்கிறது.

**************

ப்படிப்பட்ட மருத்துவர்களும், மருத்துவமனைகளும் 'ஹிப்போக்ரடிக்' உறுதிமொழி எடுத்தால் என்ன? மகரிஷி  'சரக் ஷபத்' உறுதிமொழி எடுத்தால் என்ன?

பணக் கட்டுகளின் மீது மட்டுமே அக்கறை… கூடவே அறைகுறை அறிவு… இந்த மருத்துவர்களும், மருத்துவமனை நிர்வாகிகளும் மனசாட்சியின் மீதல்லவா உறுதிமொழி எடுத்திருக்கணும்? அதை நீங்க செய்யுங்க மருத்துவ மாணவர்களே!

எந்த மொழியானால் என்ன… தொழில் நேர்மை முக்கியம்.., ஏனென்றால் மக்கள் உங்களை கடவுளாகவே பாவித்து அல்லவா தங்களை ஒப்படைக்கின்றனர்? அதை மறந்துடாதீங்க ப்ளீஸ்…

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com