ஜோக்ஸ்!

ஜோக்ஸ்!
Published on
படங்கள்: பிள்ளை

"காபி ராகத்துல பாடுங்க'ன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள பாட ஆரம்பிச்சிட்டாரே…?"

"இது, 'இன்ஸ்டன்ட்' காபி…

**************************

"நான் காதலிச்சதும் உஷாவைத்தான், கட்டிக்கிட்டதும் உஷாவைத்தான்,,,!"

பரவாயில்லையே ..!"

"ஆனா, அது வேற உஷா, இது வேற உஷா,,!"

வி. ரேவதி, தஞ்சை.

**************************

தலைவரோட மீட்டிங் நடக்கிற இடத்துல எதுக்கு தண்ணி லாரி நிக்குது!

அப்படியாவது  கூட்டம் வரட்டுமேன்னுதான்!

-சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா

**************************

வந்தவர்: "என்னப்பா சர்வர்,'காத்து வாக்குல ரெண்டு தோசை'ன்னு மெனுல போட்டிருக்கே?"

சர்வர்: " அதுவா… மெல்லிசான செட் தோசைகள்'… ஃபேன் போட்டா பறந்துடும் சார்!"

-வி.சி. கிருஷ்ணரத்னம், காட்டாங்குளத்தூர்

**************************

கடவுள் படைச்சதுலையே அழகான விஷயம் மூணு…

அப்படியா…! என்ன அது ?                         

ஒண்ணு காலை டிபன், இரண்டு மதிய சாப்பாடு, மூணு இரவு டிபன்.

**************************

ஏண்டியம்மா… உனக்கு கல்யாணம் ஆயிடுத்தா?

ஆமாம் மாமி.

உங்க வீட்டுக்காரர் என்ன பண்ணிண்டு இருக்கார்?

ரொம்ப வருத்தப்பட்டுண்டு இருக்கார் மாமி!

-வி. ரேவதி, தஞ்சை.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com