
ஒரு கோடீஸ்வரர் எனப்படுபவர் எத்தகைய வாழ்க்கை வாழ்வார் என நம்முள் பலரும் அனுமானித்திருப்போம். அந்த அனுமானத்தைக் கொண்டு, நாம் கோடீஸ்வரன் ஆனால் எத்தகைய வாழ்க்கை வாழலாம் என்றும் ஒரு கற்பனை செய்து வைத்திருப்போம். இதையெல்லாம் விட, சாதாரணமான வாழ்க்கை வாழும் நாம், கோடீஸ்வர பிம்பம் ஏற்படுத்த, கோடீஸ்வரர் களைப் போல போலியான தோற்றத்தை உருவாக்க முயல்வோம். ஏனென்றால், கோடீஸ்வரர்களின் வாழ்க்கை முறைப் பற்றிய ஒரு மாயை நமக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த மாயபிம்பம் பல்வேறு திரைப்படங்கள் மற்றும் சஞ்சிகைகளால் சிறிது சிறிதாக செதுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த வில்லியம் டங்கோ (William Danko) மற்றும் தாமஸ் ஸ்டான்லி (Thomas Stanley), அமெரிக்காவின் மில்லியனர்களைப் பற்றிய ஒரு ஆராய்ச்சியினை 20 வருடங்கள் செய்தனர். மில்லியனர் என்றால் 10 லட்சம் அமெரிக்க டாலர்களை சொத்தாக அமையப் பெற்ற பணக்காரர்கள். நம் நாட்டின் வட்டார வழக்கப்படி கோடீஸ்வரர்கள் என குறிப்பிடலாம். இதற்காக 500க்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்களிடம் களப்பணி செய்தனர். இந்த ஆராய்ச்சி முடிவுகள் நம்முடைய பல்வேறு பிம்பங்கள் தவறானவை என நிரூபிக்கின்றன. ஆராய்ச்சியின் முடிவுகளை "The Millionaire Next Door", அதாவது பக்கத்து வீட்டு கோடீஸ்வரர் என்ற புத்தகமாக வெளியிட்டனர். அது லட்சக்கணக்கில் இன்னும் விற்பனையாகி கொண்டிருக்கும் ஒரு புத்தகமாக உள்ளது.
அவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவின்படி, மாதிரி கோடீஸ்வரரின் அடையாளங்கள் பின் வருமாறு;
இந்த மாதிரி கோடீஸ்வரரின் அடையாளம், நமது கோடீஸ்வரர்களைப் பற்றிய தவறான பிம்பத்தை தகர்க்கிறது.
மேலும், தங்கள் ஆராய்ச்சியின் அடிப்படையில், கோடீஸ்வரர்களின் 7 குணாதியசங்களை பட்டியலிடுகின்றனர்.
இதன் மூலம், பணக்காரர்களைப் பற்றிய நமது பிம்பம் எவ்வளவு தூரம், பொய்யானது என்பது தெளிவாகிறது.
எனவே, பணக்காரராக தோற்றத்தை ஏற்படுத்துவதை தவிர்ப்போம். நம்மைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைவிட, நாம் அடுத்தவர்களை கையேந்தாமல் வாழும் சுதந்திர வாழ்க்கையே முக்கியம்.
எவ்வளவு பணம் சம்பாதிக்கிறோம் என்பதை விட, எவ்வளவு பணத்தை சேமிக்கிறோம், முதலீடு செய்கிறோம் என்பது முக்கியம். நாமும் சிக்கனமான வாழ்க்கை வாழ்ந்து, பணத்தை வீண் செலவு செய்யாமல், சிறந்த முறையில் முதலீடு செய்வதன் மூலமே பணக்காரராக முடியும். ஆடம்பர, பகட்டான வாழ்க்கை வாழ்ந்தோமென்றால், கூடிய விரைவில், பணத்திற்காக பிறரை கையேந்த நேரிடும்.