மாம்பழ சீஸனாச்சே? நீங்க விரும்பியப்படி ஒரு பழமாவது நசுக்கி, கசக்கி, ஜூஸாக்கி, ஓட்டைப் போட்டு உறிஞ்சினீங்களா? நேரம் இருந்ததா? இல்ல வாசகர்களுக்கு பதில் சொன்னதோடு சரியா?-ஜெயகாந்தி மகாதேவன், பாலவாக்கம்.இவ்ளோ பழகியும் என்னைப் புரிஞ்சுக்கிட்டது அவ்ளோதானா? 'நார்மலா' (ப்ளீஸ்… நோட் திஸ் வொர்ட்!) நான் சொல்றதைதான் செய்வேன். 'நார்மலா' செய்றதைதான் எழுதுவேன் ஜெயகாந்தி மேடம்….ஆனால், ஒரே ஒருமுறை 'இமாம் பஸந்த்'தை நறுக்கித் துண்டங்களாக்கிக் சுவைத்தேன்..ஒரே ஒரு முறை ரஸ்புரி மாம்பழத்தைச் சாறாக்கி, ஏலம், சர்க்கரை, பால் கலந்து பூரியுடன் ருசித்தேன்..ஒரு ஞாயிறன்று ருமானியில் இனிப்பும் புளிப்புமாக அல்வா கிளறினேன்..ஒரே ஒருமுறை பங்கனப்பள்ளியில் 'மேங்கோ கேசரி' செய்து அசத்தினேன்..மற்றபடி, 'பாதாமி', 'செந்தூரா'வை எல்லாம் உறிஞ்சிதான் சாப்பிட்டேன்… ப்ராமிஸோ ப்ராமிஸ்!.(மறுவாரம்) .நான்:- "ஹலோ டாக்டர்…. பிளட் சுகர் 450 இருக்கு. இது நார்மலா?'.டாக்டர்:- !!!!!.***************************.மறைந்த பின்னணிப் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்தின் பாடல்களில் தங்களைக் கவர்ந்தது எதுவோ?-வாணி வெங்கடேஷ், சென்னை.'ஒரு வார்த்தை கேட்க ஒரு வருஷம்' பாடல்தான் நான் முதலில் கே.கே. குரலில் கேட்டது… 'யாரப்பா… இது புது குரலா இருக்கே?'ன்னு நினைச்சேன். அப்புறமா, 'காதல் வளர்த்தேன்' பாட்டு… ரொம்ப இளமையா, 'சிம்பு' குரல் மாதிரியே இருந்தது. 'நினைத்து நினைத்து பார்த்தேன்… உச்சரிப்பும் உருக்கமும் செமையா இருந்தது. அப்பல்லாம் 'யாரிந்த கே.கே.?'ன்னு தேடிப் பார்க்கத் தோணலை!.இப்ப அவர் மறைஞ்சுட்டப் பிறகு சர்ச் பண்ணிப் பார்த்தா, 'உயிரின் உயிரே', 'ஸ்ட்ராபெர்ரி பெண்ணே', 'அப்படிப் போடு', 'அண்டங்காக்கா கொண்டைக்காரி'ன்னு விதவிமா அசத்தியிருக்காருப்பா!.இசை உலகக்கு இது ஆகாத வருஷமோ என்னவோ? ஏகப்பட்ட இசைக் கலைஞர்கள் மறைஞ்சுட்டாங்க… புகழ் வெளிச்சத்தில் நனைந்த கே.கே…ஓர் அற்புதக் குரல்! ஏன் ஸார் இவ்ளோ சீக்கிரம்?!.***************************.'விக்ரம்' பார்த்தாச்சா?-எஸ். கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி.நான் இன்னும் பார்க்கலை!"காலமெல்லாம் கலையுலகில் கோலோச்சி வரும் நம்ப கமல் படம்" என்று ஆர்வத்துடன் நடுத்தர வயது ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் போனால் ஏமாற்றமாக இருக்கிறதாம்..இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் 'கைதி 2வில் கமலும் சிறப்புத் தோற்றத்தில் ஜமாய்த்திருக்கிறார் என்ற எண்ணத்தில் இளம் வயது ரசிகர்கள் போனால் விசிலடித்தே மாய்கிறார்களாம்!."ஊரே கொண்டாடும் 'விக்ரம்'ல அப்படி ஒண்ணும் ஸ்பெஷலா இல்லையே… சாதாரண கதை… ஒரே துப்பாக்கி சப்தம். ரத்தக் களறி!" என்று சொல்லி விட்டால், நீங்க அறிவுஜீவி இல்லையோ, உங்களுக்குப் படம் புரியலையோன்னு யாரேனும் சொல்லிடுவாங்களோங்கிறபயத்துல பலரும் 'இன்னும் பார்க்கலை'ன்னு சமாளிக்கிறாங்களாம்.(முதல் வரியை மீண்டும் படிக்கவும்… ஹி…ஹி!).***************************.வயது கூடக் கூட சிலருக்கு கோபம், மறதி, ஈகோ எல்லாம் வந்துவிடுமா அனு மேம்?-ச. சிவசங்கரி சரவணன், செம்பனார்கோவில்.சே…சே…! அப்படி எல்லாம் ஓவரா கற்பனை பண்ணி ஃபீல் ஆகாதீங்க சிவசங்கரி. கோபம், மறதி, ஈகோ எல்லாம் வரும்போது, நம்ப வயசு கொஞ்சம் கூடிடுது… தட் சிம்பிள்! இதுக்குப் போயி அலட்டிக்கலாமா?